Saturday, February 2, 2008

இறைவனின் பெருமை

இறைவனின் பெருமையை விளக்குவது என்பது இயலாது. மனித அறிவாற்றலுக்கு அப்பாற்பட்டது அந்த மாட்சி. இறைவனின் புகழ்பாடி தொண்ணூற்றொன்பது தொகுப்புக்களை எழுதி முடித்த பேரறிஞர்ஒருவர் நூறாவது இறுதித் தொகுப்பினை எழுதத் தொடங்கிய போது அவரது தோட்டத்தில் இரண்டு குருவிகள் தென்பட்டன. அந்த Nஐhடிப்பறவைகள் இந்த அறிஞரின் முன் அடிபணிர்ந்து நின்றன. அப்போது அவ் அறிஞர் குருவிகளைப்பார்த்து என்ன செய்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு குருவிகள் தோட்டத்திலு-ள்ள தாமரைக் குளத்தை நிரப்புவதற்காக தொலைவில் உள்ள நதியிலிருந்து தங்கள் அலகுகளில் நீரைக் கொண்டுவந்து சேர்ப்பதாய் குருவிகள் கூறின.
அறிஞர் சிரித்தார் “மடப் பறவைகளே! நதியோ அதிகதூரத்தில் இருக்கிறது உங்கள் அலகுகளோ மிகச்சிறியன. குளமோ மிகப் பெரியது இந்தக் குளத்தை நிரப்ப உங்களால் எப்படி முடியும்? அதற்கு அந்தக் குருவிகள் சொல்லின இறைவனின் புகழை எழுத நீஙகள் செய்யும் முயர்ச்சிபோல் தான் இதுவும். உங்கள் உள்ளம் மிகச் சிறியது. இறைவனின் புகழ் அளவிற்கு அப்பால் பட்டது. அதனை எழுதுவதற்கு உங்களுக்கு உள்ள ஆற்றல் மிகக் குறைவானது. என்றாலும் அந்த இறைவனைப் பற்றி எழுதுவது சாத்தியப்படுமானால், அதிக தூரத்திலிருக்கும் நதியிலிருந்து எங்கள் அலகுகளில் நீரைக் கொண்டுவந்து குளத்தை நிரப்புவது அசாத்தியமானதல்ல என்றன.

“ஏகாந்த வெளியைச் சிருஷ்டி செய்திருக்கும் சிற்பியே“ என்று இறைவனை வர்ணிக்கின்றார் அகஸ்திய மகாரிஷி. கால்பந்து மைதானம் எவ்வளவு பெரியது? என்றாலும் மக்களின் கவனத்தைக் கவர்வது இரு அணிகளுக்கிடையே உதைபடும் பந்துதான். அதே போல சுற்றிச் சுழலும் நூறாயிரம் கோடிக்கு மேற்பட்ட கோள்களையும் நட்சத்திரங்களையும் தான் மனிதர்கள் பார்க்கிறார்கள். அவற்றைவிட சுழலுவதற்கு உண்டாக்கப்பட்டுள்ள வெட்ட வெளி முக்கியமல்லவா? வெறும் சூனியத்திலிருந்து இத்தனை பெரிய கோள்கள் நட்சத்திரங்களைத் தோற்றுவித்து ஒன்றோடொன்று மோதாமல் சுற்றவிடும் இறைவனை எப்படி புகழ்வது?
இந்த அழகிய உலகை நமக்குரிய வீடாக இறைவன் படைத்திருக்கிறார். நாம் வசதியாக வாழவும் செயல்படவும் எண்ணற்ற சாதனங்களைப் படைத்திருக்கின்றார். மிக மிகத் தொலைவிலிருந்த நமக்கு ஒளி - வெப்பம் நமக்கு அளப்பரும் வேகத்தில் வருகிறது. சுவாசிப்பதற்குக் காற்று, குடிப்பதற்கு நீர், தட்பவெட்ப நிலைகள் உயிர்வாழ்வதற்கு அளவான முறையில் அமைக்கப்பட்டுள்ளன.
இறைவனுக்கு வேண்டியவர் வேண்டாதவர் என்றில்லை. மழை பெய்யும் பொழுது நல்லவர் தீயவர் என்று பார்ப்பதில்லை. எல்லோரிடமும் இறைவன் அன்பு கொண்டிருக்கிறார். நாம் வாழும் ஒவ்வொரு தினமும் அந்த அன்பு சுரந்தபடியே இருக்கின்றது. நமது உடல் உயிர் வாழவேண்டும், ஊட்டம் பெறவேண்டும் என்பதற்காக இறைவன் தினமும் மறைந்து கொண்டே இருக்கின்றார். தம்மில் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் முறைக்குமேல் தினமும் மறைகிறார். இறைவன் படைத்த பொருட்களைத் தினமும் நாம் உண்டு வசிக்கிறோம். ஒவ்வொரு தானியத்திலும், காயிலும், கனியிலும் இறைவன் இரு-க்கின்றார். நாம் அவற்றை உண்ணும் போது அவர் மறைகிறார். நாம் வாழ வேண்டும் என்பதற்காக அவர் அருளுகிறார்.
பச்சைப் பசும் இலைகள், வண்ணமலர்கள், காய் கனிகள் தரும் செடி கொடிகள் எல்லாம் தங்கள் வேர் மூலம் கிடைக்கும் நீரைக்கொண்டு தழைத்து வாழ்கின்றன. நாமும் அதேபோல் இறைவனிடம் ஊட்டமும் சக்தியும் பெறுகிறோம்.
இறைவனிடம் சிலர் எனக்கு இதனை இவ்வாறு செய்து கொடுத்தால் நான் இவ்வாறு பூiஐ செய்கிறேன் என்று பேரம் பேசுவோர் எவ்வளவு பேர் இருக்கிறார்கள். நாம் அளிப்பவற்றை இறைவன் ஏற்கிறாரா? என்பதைப்பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. பிராத்தனை பலித்துவிட்டால் அதை பெரிதாக விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள். இறைவன் இணங்கிவிட்டார் என்ற மகிழ்கிறார்கள். பணத்தினால் இறைவன் அன்பை வாங்க முடியாது. முழுமையான சரணாகதிமூலம் நம்மை ஒப்படைத்து மெஞ்ஞான ஒளியை நம் இதயத்தில் இயக்கிவைத்து உண்மையான அன்பின் மூலம் இறை ஒளியை நம் இதயத்தில் ஏற்கவேண்டும்.

No comments: