Saturday, February 2, 2008

கண்ணில் சிறந்த உறுப்பில்லை

கண்ணில் சிறந்த உறுப்பில்லை
கலாநிதி சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி


'எண்சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம்" என்பது அன்றோர் வாக்கு. 'கண்ணில் சிறந்த உறுப்பில்லை யாவதும் காட்டியதே" என்பதை தஞ்சை வாணன் கோவை. 'சமஸ்கிருத மொழியிலும், ஸர்யவஸ்ய காத் ரஸ்ய சிரஸ்ப்ரதாநம், ஸ்ர்வேந்திரியானாம் நயநம் ப்ரநாதம்" என்று இக் கருத்தே கூறப்படுகிறது. மக்களின் உடம்பிலுள்ள கருவிகளை இரண்டு வகையாகப் பிரிப்பர். ஒன்று அறிவுக்கருவி, மற்றொன்று தொழிற்கருவி, அறிவுக்கருவிகள் ஐந்து. தொழிற் கருவிகள் ஐந்து. ஊற்றுணர்வுள்ள உடம்பு, சுவையு ணர்வுள்ள நாக்கு, ஒளியுணர்வுள்ள கண் நாற்ற உணர்வுள்ள மூக்கு, ஒலியுணர்வுள்ள காது எனும் அறி வுக்கருவிகளான ஐம் பொறிகளும், அவற்றை உணர்ந்து செயற்படுத்தும் மூளையும் தலையில் இருக்கும் காரணம் பற்றியே ' எண்சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம்" என்றனர்.

இவ் ஐம்பெறிகளுள்ளும் கண் சிறந்த இடம் வகிக்கிறது. காரணம் மற்றய பொறிகள் தன்னிடம் வருவனவற்றை அறிந்து மூளைக்கு உணர்த்துவன. ஆனால் கண் மட்டுமே தொலைவிலுள்ள பொருளை யும் சென்றறிந்து அதனை மூளைக்கு உணர்த்தும் திறனுடையது. கண்ணைத் தவிர மற்றய பொறிகள் நினஇறு பற்றுவன. குணஇ மட்டுமே சென்று பற்றும் சிறப்புடையது. இச் சிறப்புக் கருதியே 'கண்ணில் சிறந்த உறுப்பில்லை யாவதும் காட்டியதே!" என்று தஞ்சை வாணன் கோவையின் ஆசிரியர் பொய்யா மொழிப்புலவர் கூறினார்.

மன்னனே மக்களின் கண்:-

சேக்கிழாரும் மன்னனின் இலக்கணம் கூறவந்த இடத்து
'மண்ணில் வாழ்தரும் மன்னுயிர் கட்கெல்லாம்
கண்ணும் ஆவியும் ஆம்பெருங் காவலன்"
என்று மொழிகின்றார். மன்னனானவன் தன் நாட்டில் வாழும் உயிர்கட்கெல்லாம் உயிராக வாழ்பவன். தன்னிடம் குறைவேண்டியும், முறைவேண்டியும் வருவோர்க்கு ஆவன செய்வதோடல்லாது தானே பல இடங்களுக்கும் சென்று குறைகளையும், முறைகளையும் கண்டும் கேட்டும் அறிந்து அதற்குத் தக்க தீர் வு செய்யும் கட்டுப்பாடுடையவன் என்பது கருத்தாகும். உயிர் நின்று பற்றுவது, கண் சென்று பற்றுவது, மன்னன் உயிராக இருந்து ஒற்றர் வழி அறிந்துமூளையைப்போல் நின்றும் நீதி வழங்க வேண்டும். கண்ணாக இருந்து சென்று நீதி வழங்க வேண்டும் எனும் உட்கருத்தில் தான் சேக்கிழார் பெருமான் 'கண்ணும் ஆவியும் ஆம்பெரும் காவலன்" என்றருளிச் செய்கின்றார்.

இன்ப துன்பத்தை காட்டுவது கண்:-

மேலும் கண்ணிற்குப் பல சிறப்புக்கள் உண்டு. அறிதற் கருவியாக விளங்கும் கண் அறிவுக் கருவிகளிலும் தொழிற் கருவிகளாகிய கை, கால், வாக்கு, எருவாய், கருவாய் எனும் உடலுறுப்புக்களி லும் ஏதாவது நன்றோ தீதோ திகழுமாயின் அதனைப் புலப்படுத்துகின்ற நிலையில் இன்ப துன்பக் கண்ணீர் வடிப்பதும் அக் கண்ணின் சிறப்பாகும். மனிதனின் உள்ளத்திற்குள் நிகழும் மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் கருவியாக இலங்கும் சிறப்புடையது கண். ஒரு செயலை ஏற்று இசைவுதருவதும் புறக்கணிப்பதும் கண்ணின் புலப்பாட்டிலேயே அறிந்து கொள்ள இயலும். அத்தகைய சிறப்புடைய கண் திருடனைக் காட்டிக் கொடுக்கவும் ஒழுக்கம் இல்லாதவனை உலகுக்கு உணர்த்தவும் உரிய கருவியாக விளங்குகின்றது.

கற்பினைக் காட்டுவது கண் :-

இதனால்தான் சீதாபிராட்டியின் கற்புத்திறனை இராமபிரானுடன் கூறிவந்த அனுமான் ' கண்டனன் கற்பினுக் கணியைக் கண்களால்" என்று விளக்குகின்றான். சீதை உயிரோடுதான் இருக்கின்றார் பிறர் கூறக் கேட்டு வரவில்லை. நானே என் கண்களால் கண்டுவந்தேன். என்று அனுமான் கூறுகின்றார். என்பதாகப் பொருள் கூறலாம். ஆனால் அம்மையார் கற்போடுதான் இருக்கிறார் என்பதை எங்ஙனம் கூற முடியும் என்பதற்கு விளக்கம் கூறவே இத்தொடருக்கு இன்னும் ஆழமாகச் சிந்தித்துப் பொருள் விளக்கம் காணுதல் அவசியமாகின்றது. 'கண்டனன்" என்பதற்கு அனுமன் தான் தன் கண்களால் பார்த் தேன் என்ற பொருளும் பின்னே உள்ள கண்களால் பார்த்தேன் என்ற பொருளும் பின்னே உள்ள கண்களால் என்னும் சொல்லிற்குச் சீதையின் கண்களால் கற்பினுக் கணியாக இருப்பதைப் பார்த்தே ன் என்னும் பொருளும் கொள்ளுதல் ஒருவகை. மேலும் அனுமன் கண்களால் சீதாபிராட்டியை கண்டன ன் என்றும், சீதாபிராட்டியின் கண்களால் அவரது கற்புநெறி பிறளாது அணியாகத் திகழ்வதைக் கண்டனன் என்றும் கொள்ளுதல் சிறப்பாகும்.

எனவே கண்ணானது மற்றப் பொருள்களை அறிந்து மூளைக்கு உணர்த்துவதோடல்லாது கண்களையுடைய மனிதனின் உள்ள உணர்ச்சிகளைச் சமுதாயத்திற்கு உணர்த்தும் உயர் கருவியாக வும் விளங்குகின்றது.

காக்கவேண்டிய சிறப்பினது கண் :-

இத்தகைய சிறப்புக்கள் பலவுடைய கண்களைக் காண்பதற்கு இறைவனே தக்க பாதுகாப்பு கொடு த்திருக்கின்றார். கண்ணை இமை காப்பது போல் என்று உலகோர் கூறுவதும் ஈண்டு நினைவு கூரத்தக் கது. காக்கும் இமையை கொடுத்துக் காத்துக் கொள் என்று ஆண்டவனே அறிவுறுத்தியுள்ள கண்ணை இன்று பலர் பல காரணங்களினால் கெடுத்துக் கொள்கிறார்கள்.

கண்கெடுவதற்குரிய காரணங்கள் பலவாகும். பொதுவாக மனித வாழ்வில் ஒழுங்கு நெறிமுறைகள் கெடுமானால் அவை கண்களைப் பாதிக்கும். குறிப்பாக ஒழுக்கக் கேட்டினாலும், பொய் சொல்லுவதாலும், கோவப்படுவதாலும், திரைப்படம் தொலைக்காட்சி பார்ப்பதனாலும் கண் கெடும். மற்ற க் காரணங்கள் தெளிவாக விளங்கினாலும் பொய் சொல்வதினால் கண் பாதிக்கும் என்பது பலருக்குப் பரிவதில்லை. பொய் சொல்லுகின்ற போது அவனது மனம் அவனை உறுத்துகின்றது. அதனால் உடம்பிலுள்ள நரம்புகள் பாதிக்கப்படுகின்றன. இவ் வகையில் கண் கெடுகின்றது.

சுந்தரர் வாழ்வில் கண் :-

பொச்சாட்சி சொன்னவர்களுக்கும் கண் தெரியாமல் போய்விடும். ஏனெனின்; 'சாட்சி" என்றாலேயே கண்ணால் கண்டதை கூறுதல் என்பது பொருளாகும். “சட்சு” என்னும் சொல்லுக்குக் கண் என்பது பொ ருளாகும். அதன் அடிப்படையில் வந்ததே “சாட்சி” என்னும் சொல். ஆதலின் சாட்சி சொல்லும் பொழுது தன் கண்களால் காணாத ஒன்றைக் கூறுவானேயானால் இது அவனது மனத்தை உறுத்திப் பின்னே தண்டனைக் குரியதாகிப் கண்களைப் பாதிக்கும். சபதம் பொயத்தாலும் கண் கெடும் என்பதற்கு நாம் ஆசாரிய மூhத்தியாகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருள் வரலாற்றை இவ் வகையில் எடுத்துக் கொள்ள லாம். இது தவறுடையது எனினும் வாழ்விய நெறிமுறைகளை விளக்கிக் கொள்வதற்கும் கடவுளின் நடுநிலைத் தன்மையைப் புரிந்து கொள்வதற்கும் பயன்படும் என்ற வகையில் அடக்கத்தோடும் அச்சத் தோடும் அவ்வரலாற்றை சிந்திக்கலாம்.

எறும்புக்குக் கண் இல்லை :-

இதுவரை சிந்தித்த கருத்துக்களால் கண் கெடுவதற்குரிய காரணங்களை எண்ணியது போல இனிக் கண்ணைப் பாதுகாத்தற்குரிய சில வழிமுறைகளையும் சிந்திப்போம். கண் நன்கு தெரிவதற்குப் பொதுவாகக் கீரை வகைகளைக் குறிப்பாக முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளுதல் நல்லது. மேலும் அறநோக்குப்படி பார்த்தால் கண்பார்வை இல்லாத ஜீவராசிகளுக்கு உணவு அளித்தலும் கண்ணைக் காப்பாற்றும். உலக உயிர்களில் கண்பார்வையில்லாத உயிர் எறும்பாகும். தோல்காப்பியர் ஓரறிவுயிர், ஈரறிவுயிர் என்பது பற்றி ஒரு நூற்பாக் கூறுகின்றார்.

எறும்பு தின்றால் கண் தெரியும் :-

இத்தகைய கண் பார்வையில்லாத உயிருக்கு நெல் முதலிய தானியங்களைப் புற்றில் இடுதலும், வீடுகளின் முன்னர் அரிசி மாக்கோலம் போடுதலும், காரணமாக உணவுதரும் அறச்செயல்கள் நாட்டில் தொன்று தொட்டு நடைபெறுகின்றன. அரிசி மாக்கோலம் போடும் நிலையில் இப்பொழுது மாறுதலாகக் கல்லாலான மாவைக் கொண்டு கோலம் போடுகின்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.அறத்தின் நோக்கத்திற்கே புறம்பானது ஆகும்.

இங்ஙனம் எறும்பு போன்ற கண்பார்வை இல்லாத உயிரினங்களக்கு உணவை இட்டால் கண்பார் வை நன்கு தெரியும் எனும் பொருளில் தான் உலக வழக்கில் 'எறும்பு தின்றால் கண் தெரியும்" என் னும் பழமொழி வழங்கி வருகிறது. ஆனால் இப் பழமொழியன் உண்மைப் பொருள் அறியாத சிலர் உணவுப் பண்டங்களில் எறும்பு இருந்தால் 'பரவாயில்லை சாப்பிடுங்கள் கண் தெரியும்" என்று மாற்றுப் பொருள் கூறி வருகின்றனர். இது தவறு. எறும்பு தின்றால் கண் தெரியும் என்றால் எறும்பு நாம் போடும் உணவைத் தின்றால் நமக்குக் கண் தெரியும் என்ற பொருளே தவிர எறும்பையே தின்றால் தின்பவருக் கு கண் தெரியும் என்பது பொருளில்லை. பழமொழிகளை விழங்கக் கற்றுக் கொண்ட மக்கள் அவற்றின் உண்மைப் பொருளையும் புரிந்து கொள்ளுதல் அவசியம்.

No comments:

zwani.com myspace graphic comments