Saturday, February 2, 2008

அருகின் பெருமை

யமனின் மகனாகிய அனலாசுரன் அனைவரையும் விழுங்கி ஆரவாரித்தான். இதைக் கண்டு அஞ்சிய முனிவர்கள், விநாயகப் பெருமானை வேண்டிக் கொண்டனர். விநாயகர் விசுவரூபமெடுத்து அவனை விழுங்கினார்.
விநாயகரின் வயிற்றிலிருந்த அனலாசுரனின் வெப்பம் அனைவரையும் பொசுக்கியது. அக்னி பகவானே அருகில் வர அஞ்சினான். அனைவரும் பால், தண்ணீர், பன்னீர், சந்தனம் போன்றவற்றினால் விநாயகருக்கு அபிஷேகம் செய்யத் தொடங்கினர். இவற்றால் ஒரு பயனும் ஏற்படவில்லை.
அச்சமயத்தில் சில முனிவர்கள், இருபத்தோரு அருகம் புற்களால் கணபதியை அர்ச்சித்தனர். முதல் அருகு பட்டதுமே தணியத் தொடங்கிய வெப்பம், முனிவர்கள் யாவரும் அர்ச்சித்து முடித்தபோது முழுமையாக அகன்றது.
உடனே தேவர்களை நோக்கி விநாயகர், "உங்களது அனைவரின் உபசாரங்களையும்விட உயர்வானது அருகம் புல்லால் செய்யப்படும் அர்ச்சனை. பல வித பூக்கள், பத்ரங்களால் (இலை) எனக்கு அர்ச்சனை செய்தாலும் அருகும், வன்னியுமே எனக்கு மிகவும் பிடித்தமானவை' என்று கூறினார். அப்பொழுது முதல், விநாயகர் வழிபாட்டில் அருகுக்கு முக்கிய இடம் வந்தது.

No comments:

zwani.com myspace graphic comments