Thursday, January 31, 2008

ஹம் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம்

Image Hosted by ImageShack.us



ஹம் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம் 1990ம் ஆண்டு ஹம் தமிழ் மக்களால் முதலில் நிலவறையில் திரு உருவப்படம் வைத்து சித்திரைப் புத்தாண்டில் ஆரம்பிக்கப்பட்டு பிரதி வெள்ளிக்கிழமைகளிலும், சிவரா த்திரி, நவராத்திரி, கந்தசஷ்டி, திருவொம்பாவை போன்ற விசேடதினங்களில் மாலை நேரங்களில் மட்டுமே பூiஐகள் ஆராதனைகள் செய்யப்பட்டு வந்தன.

1993ம் ஆண்டு ஹவாய் தீவிலிருந்து சற்குரு சிவயோக சுவாமிகளின் பிரதம சிஷ்யராகிய சற்குரு சிவாய சுப்பிரமணிய சுவாமிகள் வருகை தந்து, நில மட்டத்திற்கு கீழ் தெய்வத்தை வைத்து, மக்கள் நிலமட்டத்திற்கு மேலே இருந்துகொண்டு தெய்வத்தை வைத்து வணங்குவது முறை இல்லை என்றும் ஆலயத்தை வெளியே கொண்டு வரும்படி கூறி விநாயகர் திரு உருவச்சிலையை தானே தருவதாகக் கூறினார். அப்படியே அடியார்களின் உதவியுடன் ஆலய கட்டடம் கட்டப்பட்டு 1994ம் ஆண்டு வைகாசி மாதம் 12ம் திகதி புனர்பூச நட்சத்திரத்தில் சுப்பிரமணிய சவாமிகள் ஆசீர்வாதத்துடன் கும்பாபிசேகம் நடைபெற்று, தொடர்ந்து 45 நாட்கள் மண்டலாபிஷேகமும் நடைபெற்று இன்று வரை காலை 10.00 மணிக்கும் மாலை 18.00 மணிக்கும், மற்றும் இந்துக்களின் விசேட தினங்களிலும் இங்கு விசேடமாக பூiஐகள் நடைபெறுகின்றன.

விசேட தினங்களில் எம்பெருமான் வண்ணமலர் மாலைகளினால் அலங்காரம் செய்யப்பெற்று பக்தர்களின் தேவார பாராயணத்துடன் உள் வீதி வலம் வரும் அற்புதக் காட்சிகாணக் ;கோடி கண்கள் வேண்டும். சித்தி விநாயகர் அருள் பெற்ற அனேக அடியார்களையும், அவர் அருள் வேண்டி ஆலயம் வரும் அனேக பக்தர்களையும் அங்கு தினமும் காணலாம்.

1996ம் ஆண்டிலிருந்து மஹோற்சவம் நடைபெற்று வருகின்றது. தேர்த்திருவிழா இன்று வரை ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதத்தில் வரும் ஞாயிற்றுக் கிழமையே நடைபெற்றுவருவாதாக அறியக் கூடியதாக உள்ளது.

ஆலயம் ஹம் புகையிரத நிலையத்திற்கு மிக அருகே உள்ளது.

ஆலய விலாசம் :- Ferdinand Poggel str 25,
59065 Hamm


ஆலய தொலைபேசி இல:- 02381 162 686

மயூரபதி ஸ்ரீ முருகன் ஆலயம் பேர்லின்

இந்த நூற்றான்டின் போர் பேரழிவுகளுக்கு கால்கோள் எடுத்தது ஜேர்மனியின் தலைநகரம் பேர்லினே. இன உணர்வின் எல்லை கடந்த கொடுமைகள் பலவற்றை இது தாராளமாகக் கண்டுகளித்தது இன்று பல நாட்டு பல இன மக்களையும் பக்குவமாய் போற்றிவரும் பெருமைக்கு அருகதைபெற்று வளாந்து பொலிந்து வருகிறது. இங்கு ஒரு காலத்தில் கிறீஸ்தவ தேவாலயங்களுடன் யூதரின் ஆலயங்களும், முகமதியர்களின் மசூதிகளும், பௌத்தாகளின் விகாரை ஒன்றும் தலைநிமிர்ந்து நின்றன. அவற்றோடு நகரின் முக்கிய பகுதியில் பெரியதொரு தெரு அருகில் நிலக்கீழ் மண்டபத்தில் திகழ்கிறது மயூரபதி ஸ்ரீ முருகன் ஆலயம்.
"மூர்த்தி சிறிதேனும் கீர்த்தி பெரிது" என்பது போல் சிறிய ஆலயமாயிருப்பினும் பெருமைகள் பல நிறைந்ததாக இந்த ஆலயம் விளங்குகிறது. இங்கு வாழும் ஈழத்தமிழ்ச் சமூகத்தினரின் ஒன்பது பேரின் முதல் முயர்ச்சியில் தோன்றிய இச் சிறு ஆலயம், இன்று இந் நகரத்து இந்துப் பெருமக்கள் அனைவரி னதும் பொதுச் சொத்தாக விளங்குகிறது. இந்து மக்களுக்கு மட்டுமன்றி, இந்த மதம் பற்றி அறிய விரும்பும் வேற்றுமத தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், இன்னும் ஆத்மீக தாகங்கொண்ட அனைத்து இனமக்களும் ஆலயத்திற்கு வருகைதருகிறார்கள். இவ்வாலயத்தில் நித்திய பூiஐ வழிபாடு கள் மற்றும் இந்துக்களின் எல்லா முக்கிய விசேட தினங்களும், பண்டிகைகளும் சிறப்பாக அனுட்டிக்கப்படுகின்றன. தாய்நாட்டில் நல்லூகந்தன் வருடாந்த மஹோற்சவத்தையொட்டி அதே நாட்களி ல் இங்கும் திருவிழா நடைபெற்று தேர் திருவிழாவன்று இங்கும் முருகன் வெளிவீதி உலாவந்து அருள் பாலிப்பது வளக்கம். இவ்வாலயத்தில் கற்பூர தீபத்திற்குப் பதிலாக நெய் தீபமே காட்டப்படுகிறது. நெய் தீபம் சுகாதரத்திற்கும் சுற்றாடலுக்கும் உகந்ததாகவும் வழிமண்டலத்தைத் தூய்மைப்படுத்தி சுகாதாரத்தைப் பேணக்கூடியது என்றும், கற்பூரம் கலப்படமில்லாத நிலையில் பயன் படுத்தினால் சாதக மான நன்மைகள் உண்டென்றும் கற்பூரம் பெருமளவில் தூயதாய் கிடைப்பதில்லை என்றும் அறியக் கூடியதாக உள்ளது.
கற்பூரம் சிறிய பொருளாய் இருந்து பெரிய Nஐhதியை தோற்றுவிக்கும் என்பதால் எரிந்தபின் மீதி ஏதும் இல்லாதிருப்பதால் ஆத்மீக இலக்கான Nஐhதியுடன் கலக்கும் தத்துவத்தின் வெளிப்பாடாக கற்பூரம் எரி க்கப்பட்டு வந்திருக்கிறது. இன்று கற்பூரம் கலப்படமாகி வெறும் வியாபாரமாகிவிட்டது.
ஆலயத்தில் வாரம் தோறும் அன்னதானமும், நம் வழிபாடு சிறக்க, நாம் நம்மைப் பக்குவப்படுத்திக் கொள்ள நாளாந்தம் கைக்கொள்ள வேண்டிய வழிமுறைகளும் வாரம் தோறும் இங்கு போதிக்கப்படுகிற து. தியான வழிபாட்டிற்கு தயாh படுத்தும் ஆரம்ப பயிர்ச்சிகள், இசை வழிபாடு, சொல் வழிபாடு, தியான வழிபாடு என நடாத்தப்படும். இப் பிராத்தனைகளில் பல சிறந்த ஆன்மீக இதயங்கள் ஈடுபட்டு கலந்து சிறப்பிக்கின்றனர்.
ஆலய விலாசம்:- Urban Str 176, 10961 Berlin.
தொலைபேசி இல:- 030 694 89 00

Tuesday, January 29, 2008

ஸ்ரீ நவசக்தி விநாயகர் ஆலயம் (Mönchengladbach)

1977 ம் ஆண்டு முன்சன்கிளப்பாக் நகரில் உள்ள Rudolf Str 1 ல் மூல விக்கிரகமாக ஸ்ரீ நவ சக்தி விநாயகரும், அவருடன் பரிவார மூர்த்திகளாக ஸ்ரீ இராஐராNஐஸ்வரி ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீமன் நாராயணர், வள்ளி தேனா சமேத ஸ்ரீ சிவசுப்ரமணியர், பைரவர் ஆகியோர்க்கும் ஆலயம் அமைக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் எம் பெருமான் அவ்விடத்திலே இருந்து பக்தர்களுக்கு அருள் புரிந்து வந்தார். ஆலயம் அமைக்கப்பட்டிருந்த கட்டிடம் முற்றாக அகற்றப்பட்டு அவ்விடத்திலே புதிய கட்டிடம் கட்ட நில உரிமையாளர்கள் முடிவு செய்ததின் காரணத்தால் ஸ்ரீ நவசக்தி விநாயகா ஆலயம் ஓர் ஆண்டு காலம் தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு பூiஐகள் நடைபெற்றன. மீண்டும் 2002 ம் ஆண்டு எம் பெரமானுக்கும் பரிவார மூர்த்திகளுக்கும் ஆலயம் அமைக்கபெற்று வெள்ளிக் கிழமைகளிலும் சதுர்த்தி தினத்திலும் மாலை 17.00 மணியிலிருந்து 21.00 மணிக்கு ஸ்ரீ நவசக்தி விநாயகருக்கும், ஞாயிற்று கிழமைகளில் 18.00 மணி தொடங்கி 20.00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீமன் நாராயணருக்கும் கார்த்திகைத் தினத்தில் 17.00 மணி தொடங்கி 21.00 மணிக்கு வள்ளி தேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணியருக்கும் , பூரணை தினம் 17.00 தொடங்கி 21.00 மணிக்கு ஸ்ரீ இராயராசேஸ்வரி க்கு தீப பூiஐயுடன் விசேட பூiஐயும் நடைபெற்று வருகின்றது.


இந்துக்களின் அனைத்து விசேட தினங்களிலும் பண்டிகை நாட்களிலும் ஆலயத்தில் விசேட அபி சேக ஆராதனைகள் நடைபெறும். அலங்கார உற்சவம் ஆண்டுதோறும் ஆவணி மாதம் மாத இறுதி வெள்ளிக்கு முதல் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி பத்தாம் நாள் திருவூஞ்சல் வைபோகம் நடைபெறும். இத்தினங்களில் விநாயகப் பெருமான் உட்பிரகாரம் வலம் வந்து அடியவர்க்கு அருள்புரிவார்.


ஆலயத்தில் 21 நாள் விநாயகர் கதைப்படிப்பு, ஆடிப்பூரம், வைகுண்ட ஏகாதசி, ஸ்ரீ கிருஷ்ண nஐயந்தி, நவராத்திரி, கந்தஷஸ்டி ஆகிய தினங்களில் விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.


ஆலயத்திற்கு செல்லும் பேரூந்து விபரம்:-


ஆönஉhநபெடயனடியஉh (சுhநலனவ) ஆயசநைnpடயவண ல் இருந்து புநைளநமெசைளஉhநn நோக்கச்செல்லும் பேரூந்து இல 20,22 ல் பிரயாணம் செய்து 15 நிமிடத்தில் ஆலயம் வந்தடையலாம். பிரதான புகையிரத நிலையத்திலிருந்து ழுனநமெசைளஉhநn நோக்கிச் செல்லும் பேரூந்து இல 01,02, 97 ல் 5 நிமிட பயணத்தில் Pசயமவமைநசஅயசமவ முன்னால் இறங்கி 150 மிட்டர் நடை தூரத்தில் ஆலயம் அமைந்துள்ளது.


சைவ பரிபாலன சபை

Brücken Str 49

41238 Mönchengladbach.


தொலைபேசி இல:- 02166 68 67 89

Sunday, January 27, 2008

ஸ்ரீ கனக துர்க்கா அம்பாள் ஆலயம் (Schwerte)

Image Hosted by ImageShack.us


Image Hosted by ImageShack.us


இவ்வாலயம் 1985ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஷ்வெற்றா சுற்சன் வீதியிலுள்ளஅகதிகள் முகாம் மண்டபத்தில் நிலவறையிலே விநாயகர், அம்பாள், முருகன் படங்களுடன் ஆரம்பிக்கப்பட்டு 1996 ஆண் டுவரை வெள்ளிக் கிழமைகளிலும் மற்றும் இந்துக்களின் விசேடதினங்களிலும் பூiஐகள் நடைபெற்று வந்தன. 1996ம் ஆண்டு ஆலயம் சுழடிநசவ முழஉh ளுவச 5ய ல் இருக்கும் விசாலமான மண்டபத்திற்கு மாற்றப்பட்டு தென் இந்தியாவிலிருந்து விநாயகர், அம்பாள், வள்ளி தேவசேனாசமேத முருகப்பெருமான் விக்கிரகங்கள் வரவழைக்கப்பட்டு மண்டபத்தினுள் ஆலயம் அமைக்கப்பட்டு விக்கிரகங்கள் கும்பாபிசேகத்துடன் பிரதிஸ்டை செய்யப்பட்டன.

; ஆலயம் செவ்வாய் வெள்ளின்கிழமைகளில் மாலை 4.00 மணிதொடக்கம் மாலை 7.00 மணிவரையும் மற்றய நாட்களில் மாலை 4.00 மணிதொடக்கம் மாலை 5.00 மணிவரையும் திறந்திருக்கும். விசேடதினங்களில் நேரம் மாற்றப்படலாம். ஆலயத்தில் தமிழ்தாய் நாட்காட்டியில் குறிப்பிட்டவைபோல் தாய் நாட்டில் நடைபெறும் அனைத்து இந்து சமய விசேட தினங்களும் இங்கும் விசேடமாகக் கொண்டாடப்படுகின்றன. மாதத்தில் வரும் கடைசி வெள்ளிக்கிழமைகளிலும் மற்றும் விசேடதினங்களிலும் அம்பாள் பக்தர்களின் பஜனைப் பாடல்களுடன் சர்வஅலங்கார பூஐpதையாக உள்வீதி வலம் வரும் காட்சிகாணக் கண்கள் கோடிவேண்டும்.

வேண்டுவோhக்கு வேண்டும் வரமருளும் அன்னை கனகதுர்க்கா அருள் வேண்டிப் பக்தர்களும் அருள் பெற்ற அடியவர்கள் தங்கள் நேர்த்திகளை அன்னையின் சன்னிதியில் நிறைவேற்றவும் ஆலயம் வருவதைப் பார்க்க முடிகிறது. ஆலயத்தில் திருமணங்கள் நடாத்த போதிய இடவசதியும், தாய் நாட்டிலிருந்து தருவிக்கப்பட் அழகான முத்துமணவறையுடன் அறுசுவைப் போஜன வசதிகளும் செய்து தரப்படுகிறது.

இலக்கம் 1 விரைவு வீதியில் பிரயாணம் செய்து இல 85 வெளியேறும் பாதையில் வெளியேறி 1 கி.மீ தூரம் ளுஉhறநசவந நகரத்தை நோக்கிப் பிரயாணம் செய்து அருள்மிகு கனக துர்க்கா அம்பாள் ஆலயம் வந்தடையலாம். ளுஉhறநசவந புகையிரத நிலையத்திலிருந்து 10 நிமிட கால் நடையிலும் இலகுவாக ஆலயம் வந்தடையலாம்.


ஆலய விலாசம் :- Robert koch Str 05a, 58239 Schwerte.
ஆலயகுரு:- சிவசாமிக் குருக்கள் ஐயந்திநாத சர்மா. தொலைபேசி இல. 02304 91 09 445
0177 20 16 941

ஸ்ரீ முல்கைம் அருள்மிகு முத்துக்குமாரசுவாமி ஆலயம்

ஆதியும் அந்தமுமில்லா அருட் பெருஞ்சோதியாய் எங்கும் பூரணமாய் நிறைந்துள்ள பரம்பொருள் ஆன்ம கோடிகளுக்கு அருள் செய்யும் பொருட்டு மூர்த்தி வடிவம் கொண்டு தீராத வினை எல்லாம் தீர்த்தருளும் பல்லாயிரம் பக்தர்களைத் தன்னகத்தே கவர்ந்து அவர்கள் குறைதனைக் களைந்து அருவாய் உருவாய் வரம் நல்கும் அருள்மிகு ஸ்ரீ முத்துக்குமாரசாமி ஆலயம் முல்கைம் நகரில் 14 ஆண்டுகளுக்கு மேலாக பூஜை வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
இவ் ஆலய கர்ப்பக்கிரகத்தில் மூலமூர்த்தியாக வள்ளி தேவாசேனாசமேத முத்துக்குமாரசுவாமியும், விக்கினங்கள் தீற்கும் விநாயகப் பெருமானுடன், கற்பூரநாயகியாம் கருமாரியம்மனும,; சர்வ தோஷங்களை நீக்கும் நவக்கிரக நாயகர்களும், பூலோக இரட்சகர் பைரவரும் பரிவார மூர்த்திகளாக எழுந்தருளி அருள்பாலிக்கின்றார்கள். இவ் ஆலயத்தில் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் மாலை 18.00 மணி முதல் 20.30 மணிவரை அபிசேகம், பஐனை, பூiஐ வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இவ் ஆலயத்தின் விசேட தினங்களாக ஆங்கில வருடப்பிறப்புடன் நம் தாய் நாட்டில் வழிபாடுகள் நடைபெறும் விசேட தினங்களிலும், விசேடமாக நயினை நாகபூசணி அம்மன் ரதோற்சவத்தையொட்டி அம்பாளுக்கு சங்காபிசேகமும் நடைபெற்று வருகின்றது. ஐரோப்பாவில் முதன் முறையாக சூரஸம்காரம் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. செப்டம்பர் மாதத்தில் அலங்கார மஹோற்சவம் நடைபெறுகிறது. இவ் உற்சவ காலத்தில் இரவு 19.30 மணியளவில் முருகப்பெருமான் உள்வீதியுலா வந்து அடியவர்களுக்கு சகல ஐஸ்வர்யங்களையும் வளங்குவார்.

ஆலயமுகவரி:- Aktien Str 23, 45468 Mülheim / Ruhr

Thursday, January 24, 2008

ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் ஹற்றிங்கன்

Image Hosted by ImageShack.us



ஜேர்மனியின் வட மேற்கு மானிலத்தின் என்னப்பெற்றால் மாவட்டத்தில் கற்றிங்கன் நகரில் 17 வருடங்களுக்கு மேலாக ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தைச் சுற்றிலும் குளிர் தரும் மரங்கள் சோலையாக அமைந்தும் சல சல என்று ஓடிக்கொண்டு இருக்கும் சிறு அருவியும் இருப்பதால் ஜில் என்ற தென்றல் காற்றும், காற்றினால் மரங்களின் சிறு அசைவுகளினால் எழும் ஒலியும் அருவியின் சலசலப்பும் மனதிற்கு ஆனந்தத்தையும் அமைதியையும் தருகிறது.

இவ் விநாயகர் ஆலயம் ஜேர்மன் நட்டிலே முதலில் அமைக்கப்பெற்ற விநாயகர் ஆலயமாகும். இங்கு தினமும் மாலை 5.30 மணி தொடங்கி 7.00 மணிவரையும், செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் மாலை 5.00 மணி தொடங்கி 8.30 மணிவரை பூஜைகள் நடைபெறுகின்றன. சிறப்பாக இங்கு ஆவணி மாதச் சதுர்த்தி அதி விசேடமாகக் கொண்டாடப்படுகிறது. அன்று வரசித்தி விநாயகருக்கு விசேட அபி சேகத்துடன் பூஜைகள் நடைபெற்று விநாயகப்பெருமான் சர்வஅலங்காரத்துடன் நாதஸ்வர மேள இசைக ளுடனும் பக்தர்களின் பஜனை பாடல்களுடனும் வீதிவலம் வரும் காட்சிகாண கண்கள் கோடி வேண்டும்.

இங்கு சகல இந்துசமய விசேடதினங்களிலும் விசேட பூஜைகள் நடைபெறுகின்றன. மாதத்தில் வரும் சதூத்தி தினத்தில் மாலை விசேட அபிசேகத்துடன் பஞ்சமுக விநாயகர் பக்தர்களின் தேவார பாராயணத்துடன் உள்வீதி உலா வருவார். ஆலயத்தில் வரசித்தி விநாயகருடன் மனோன்மணிஅம்பாள், சுப்ரமணியர், வயிரவர், நவக்கிரகங்கள் யாவும் தனித் தனியாக அழகாக சிறு சிறு சன்னிதிகளாக அமைக்கப்பட்டுள்ளன.

ஓவ்வொரு வருடமும் ஆனி மாதத்தில் மஹோற்சவம் கொடியேற்றத்தடன் ஆரம்பமாகி தேர்த்திருவிழா, தீர்த்தத்திருவிழாவும் நடைபெறுகின்றன.

ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்திற்கு 40வது இலக்க விரைவு வீதியில் ஹற்றிங்கன் (ர்யவவiபெநn) வெளிறேறும் வீதியில் பத்து கி.மீ தூரம் பிரயாணம் செய்து பின்பு வேக வீதி 51 இலக்கத்தில் ஹற்றி ங்கன் பேரூந்து நிலையம் வந்து நாலாவது பேரூந்து தரிப்பிடத்தில் (டுüபபநசளநபபந) ஆலயமுள்ளது. ஹற்றிங்கன் பேரூந்து நிலையத்திலிருந்து பேரூந்து இலக்கம் 330, 331, 332, 335, பேரூந்துகளில் பிரயாணம் செய்து நாலாவது தரிப்பிடத்தில்
Hattinhan Lüggersegge ஆலயம் உள்ளது.


ஆலயவிலாசம் :-Bredenscheider str 119 தொலைபேசி இல:- 02324 27061
Halle – 5 (Gewerbepark) தலைவர் :- 0233 96478
45527 Hattingen. ஆலயகுரு :- 0208 872709
zwani.com myspace graphic comments