


இந்து சமுத்திரத்தில் சிதறிய முத்துக்கள், விஷஜந்துக்களே இல்லாத சீசெல்சு, திருவோடு காய்கின்ற தெய்வீக நாடு, எந்த விதமான குழப்பமோ சல சலப்போ இன்றி உலகளாவிய பாராட்டை பெற்று எந்த நாட்டிலும் இல்லா ஒழுங்கு கட்டுப்பாட்டுடன் அமைதிப் பூங்காவாக வாக விளங்கும் நாடு, இன மத வேறுபாடின்றி மக்கள் புரிந்துணர்வுடன் வாழும் நாடு, இந் நாட்டில் கிட்டத்தட்ட 4000 இந்து சமய மக்கள் இருக்கிறார்கள. இங்கு 1984ம் ஆண்டு ஆனி மாதம் 24ம் நாள் பஞ்சலோகத்தினால் விநாயகர்,நடராசர் விக்கிரகங்கள் பிரதிஸ்டை செய்யப்பட்டு, ஞாயிற்றுக்கிழமைகளில் அபிசேகத்துடன் பூiஐகள் நடைபெற்று வந்தன. பின் அங்குள்ள இந்து மக்களால் ஆலயத்திற்கென வாங்கிய நிலத்தில் மண்டபம் அமைத்து விக்கிரகங்கள் பிரதிஸ்டை பண்ண பெற்று 1992ம் ஆன்டு வைகாசி மாதத்தில் குடமுழுக்கு நடாத்தப்பட்டது. இங்கு எல்லா இந்து சமயவிழக்களும் கொண்டாடப்படுகின்றன. விநாயகர் சதுர்த்தி விசேடமாகக் கொண்டாடப் படுகிறது. இவ் ஆலயத்தில் அண்மையில் கும்பாபிசேகம் கோலாகலமாக நடைபெற்றது.
சீசெல்சு தமிழ் குடும்பத்துச் சிறுவர்களின் தமிழ் கல்வி வளர்ச்சிக்கும் அங்கு வாழும் இந்து சமய மக்களின் கலை, கலாச்சார, சமயரீதியாகவும் அதன் வளர்ச்சிக்காகவும் பெரிதும் ஆர்வம் காட்டுபவர் திரு விஜயரத்தினம் சிவசுப்பிரமணியம் அவர்கள். இவர் முன்பு யாழ்பாணம் இந்துக்கல்லூரியிலும், அளவெட்டி அருணோதயா கல்லூரியிலும் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். இவர் எழுதிய சீசெல்ஸ்சின் பத்தாண்டு வளர்ச்சி என்னும் நூலில் அன்னாட்டைப்பற்றிய முழு விபரங்களையும் காணலாம்.
No comments:
Post a Comment