Thursday, November 6, 2008

இறைவன் ஒருவனே

"இறைவன் ஒருவனே" என்று சொல்லப்படும் பொழுது வௌ;வேறு உருவங்களில் சொல்லப்படுவது எவ்வாறு?
ஆம். இறைவன் ஒருவரே தான். அவர் வடிவம் முதலியவற்றிற்கு அப்பாற்பட்ட வராயினும், சத்தியினாலே பல்வேறு தொழில்களைச் செய்வதால் அவர் செய்யும் திருத்தொழில்களைப் பொறுத்து வௌ;வேறு பெயர் கொண்டு வௌ;வேறு உருவங்களில் வழிபடுகின்றோம். இதனை வாரியார் சுவாமிகள் மிக அழகாக தங்கம் ஒன்று தானென்றாலும் அது வௌ;வேறு வடிவங்களில் அணிகலன்களாகச் செய்யப்படும் பொழுது வௌ;வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றதென்று கூறி விளங்கவைப்பார். கோவிலினுள்ளே எத்தனை பரிவார மூர்த்திகள் இருந்தாலும் பரம்பொருள் ஒன்றே என்பதை நாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆலய நுளைவாயில்களிலேயே துவார பாலகர்கள் தங்களது சுட்டு விரல்களைக் காட்டி (ஒன்று என்ற பாவனையாக) நிற்கின்றார்கள்

நலம் தரும் குத்துவிளக்கு

'குத்து விளக்கு' தெய்வீகமானது. தெய்வ அம்சம் பொருந்தியது என்பர்.
இதன் அடிப்பாகம் பிரம்ம அம்சம் என்றும், நீண்ட நடுப்பகுதி மகாவிஷ்ணு அம்சம்,
மேற்பகுதி சிவ அம்சம் எனவும் கூறப்படுகிறது. விளக்கில் ஊற்றும்
நெய் - நாதம், திரி - பிந்து, சுடர் - அலை மகள், சுடர் - கலை மகள், தீ -
மலை மகள் இப்படி அனைத்தும் சேர்ந்ததே குத்து விளக்கு என்பர்.

இந்த விளக்கை நன்கு மஞ்சள் தடவி, குங்குமமிட்டு, பூச்சுற்றி அலங்காரம் செய்ய வேண்டும்.

பஞ்சுத் திரிதான் விளக்கேற்ற மிகவும் உகந்தது. மெல்லிய திரிகளாகத் திரித்து வைத்துக் கொள்ள வேண்டும். திரிக்கும்போது ஒரு பக்கம் மட்டுமே உருட்ட வேண்டும். குத்துவிளக்கின் ஐந்து முகங்களையும் ஏற்றித் தொழுவது நலம் தரும். முதலில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றிய
பிறகுதான் திரியிட்டுத் தீபம் ஏற்ற வேண்டும்.

குத்து விளக்கைத் துலக்கி சுத்தப்படுத்தும் பணியினைச் செய்ய குறிப்பிட்ட நாள்கள் உண்டு.
ஞாயிறு, திங்கள், வியாழன், சனி கிய நாள்களில் மட்டும்தான் குத்து விளக்கினைத் தேய்த்தல் வேண்டும்.

திங்கள் நடு இரவு முதல் புதன் நடு இரவு வரை குபேர தன தாட்சாயணியும்,
குககுரு தன தாட்சாயணியும் குத்து விளக்கில் பூரணமாகக் குடியிருப்பதாகக் கூறப்படுகிறது.
எனவே இந்த நாள்களில் விளக்கினைத் தேய்த்துக் கழுவுவதால் இந்தச் சக்திகள்
விலகிப் போகும் என நம்புகின்றனர். வெள்ளியன்று கழுவுவதால் அதில்
குடியிருக்கும் குபேர சங்க நிதியட்சிணி விலகிப் போய் விடுவாள்
என்பதும் மக்களின் பரவலான நம்பிக்கை.

விளக்கை முதலில் நீரால் கழுவிப் பின்பு எண்ணெய்ப் பிசுக்கு நீங்கும் வண்ணம்
தேங்காய் நார் கொண்டு பச்சைப்பயறு, வெந்தயம், பச்சரிசி, எலுமிச்சைத் தோல்
சேர்த்து அரைத்த சிகைக்காய்ப் பொடி போட்டுத் தேய்க்க வேண்டும்.
கடைசியில் எலுமிச்சைச்சாறு ஊற்றி சுத்தப்படுத்தித் தண்ணீர் ஊற்றி நன்கு சுத்தப்படுத்த வேண்டும்.

ஞாயிறன்று விளக்கைத் துலக்கி தீபம் போடுவதால் கண் சம்பந்தமான நோய்கள் அகலும்.

மனம் நிலைப்பட திங்கள் அன்று தீபம் போட வேண்டும்.

'குரு பார்வை' இருந்தாலும் கடினமான வேலைகளையும் கூட எந்தவிதப் பிரச்சினையுமில்லாமல்
எளிதாகச் செய்ய முடியுமே! வியாழன் அன்று தீபமேற்றினால் 'குருவின் பார்வையும் -
அது தரும் கோடி நன்மையும்' நமக்கே கிடைக்கும்.

வாகன விபத்துக்களைத் தவிர்க்க உதவுவதுதான் சனியன்று விளக்குத் துலக்கி நாம் போடும் தீபம்.

மற்ற நாள்களில் விளக்குத் துலக்காமல் தீபம் போடலாம்.

விளக்குத் துலக்காத நாள்களில் விசேஷமான நோன்பு, பூஜைகள் வந்தால்,
விளக்கை நீரில் கழுவித் துடைத்து விபூதி கொண்டு தேய்த்துச் சுத்தமான
துணியினால் விளக்கைத் துடைத்து தீபம் ஏற்றலாம்.

விளக்கில்லாத கோயிலில் ஏதாவது ஒரு திசையில் பஞ்சுத் திரி போட்டுத் தீபம்
ஏற்றினால் சூரிய பகவானின் பூரண அருள் கிடைக்கும். இது ஞாயிற்றுக்கிழமைகளில்
செய்யப்பட வேண்டிய ஒன்று. தாமரை நூல் தீபம், மனதுக்குப் பிடித்த துணையுடன் இணைத்து வைக்கும்.

வாழைத் தண்டின் நூலில் திரி செய்து தீபம் ஏற்றுவது மக்கட் பேற்றைத் தரும்.

வெள்ளெருக்குப் பட்டையில் திரித்துத் தீபம் ஏற்றுவது காற்று சேட்டையை விலகச் செய்யும்.

பஞ்சமி திதியில் விளக்கேற்றுவது அகால மரணத்தைத் தவிர்க்கும். புதிதாக நெய்த பருத்தி
ஆடையில் அரைத்த சந்தனம், பன்னீர் சேர்த்துத் தடவிக் காய வைத்து,
அதைத் திரியாக்கி வடக்குமுகமாக வைத்து, 'பஞ்ச தீப' எண்ணெய் ஊற்றித்
திருவாதிரை நட்சத்திரத்தன்று தொடர்ந்து ஓராண்டு விளக்கேற்ற நோய்களின் வேகம் குறையும்.
பல காலமாக வராமலிருந்த பணம் தேடி வரும். இது அருந்ததிக்குச் சாவித்திரி தேவி அருளிய வாக்கு.

ஒரு தீபம் ஏற்றுவது தவறு. சிறிய ஜோதி விளக்கானாலும் இரண்டு திரி போட்டு
இரண்டு தீபம் ஏற்ற வேண்டும். இது குடும்பத்திற்குப் பல நலன்களைக் கொண்டு வந்து சேர்க்கும்.

Saturday, August 30, 2008

காலமும் இடமும் கருதிச் செயற்படுவோம்

"பருவத்தே பயிர்செய்” என்பது பழமொழி. பருவகாலங்களுக்கு உகந்தவாறு பயிர்ச்செய்கை செய்வதே அனுபவம் வாய்ந்த விவசாயின் செயலாக இருக்கும். விவசாயின் முயற்சி விதையின் தன்மை, பசளை, நீர்ப்பாசனம் முதலியபோஷணைகள் இவை எல்லாம் எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் காலம்; தப்பிய பயிர்ச்செய்கை தகுந்த விளைச்சலைத் தராது.
இதேபோல, ஒவ்வொரு பயிரும் அதற்கென உரிய சீதோஷ்ண நிலைகளுக்கமைந்த இடங்களிலேயே நல்விளைச்சல் தரும். பொருத்தமற்ற இடங்களில்; உரிய விளைச்சலைப் பெறமுடியாது.
இதுபோன்ற நிலைமையே மனித செயற்பாட்டில் எல்லா முயற்சிகளுக்கும் இருக்கிறது. எந்தஒரு கருமமும் உரியகாலத்திலும் உரிய இடத்திலும் செய்யப்படவேண்டும். அப்போதுதான் அக்கருமங்களின்; பலன்களை முறைப்படி பெறலாம்;;
“காலத்தினால் செய்த உதவி சிறிதெனினும்;
ஞாலத்தின் மாணப் பெரிது” என்கிறார் வள்ளுவரும்.
சிறிய உதவியையும் பெரிதாக்காட்டும் இயல்பு காலத்திற்கு இருக்கிறது. இதுபோல எமது சமயக் கிரியை மரபுகளிலும் சரியான நேரகாலத்தையும், உரிய இடத்தையும் அறிந்து செய்தால் நற்பயனைப் பெறலாம்;;;;;;.
சூரியகாந்தக் கல்;லினூடாக (பூதக்கண்ணாடி) வருகின்ற சூரியஒளிக்கு எரிக்கும் சக்தி உண்டு. ஆனால் சரியான குவியதூரத்தில் வைக்கும்போதுதான் பஞ்சு எரிகிறது. இதேநிகழ்வு காலையில்; அல்லது மாலையில் நிகழ்வதைவிட மதியவேளையிலெனில் மிகவிரைவாகவும் இலகுவாகவும் நிகழ்கிறது. இங்கு காலமும் இடமும் பெறும் முக்கியத்துவத்தை உணரமுடிகிறது.
சமயக்கிரியைகள் ஆரம்பத்தில் சங்கல்பம் சொல்கிறோமே, அதன் நோக்கம் காலமும் இடமும் சரியாக அமைவதை நிச்சயப்படுத்துவதே. எந்த ஒரு கிரியையும் சங்கல்ப ப+ர்வமாகவே செய்யப்பட வேண்டும் என்பது முக்கியமானதாகும்;. எந்தக் காரணத்துக்காக, எந்தக்கிரியைகளை, எந்தக்காலத்தில், எந்த இடத்தில் செய்கிறேன் என்றுகூறி மனஉறுதியுடன் அக்காரியத்தில்; ஈடுபடத்தொடங்குவதே சங்கல்பத்தின் நோக்கமாகும்.
பல்வேறு சிறிய கிரியைகள் அடுத்தடுத்துத் தொடர்ந்து நிகழும் கும்பாபிஷேகம் முதலிய வைபவங்களில் முதலில் எல்லாக் கிரியைகளுக்கும் பொதுவான சங்கல்பம்; கூறப்பட்டதும் பின்னால் ஒவ்வொரு கிரியைகளுக்கும்; முன் சிவாச்சாரியார் தாம் சங்கல்பம்; செய்துகொள்வதைக் காணலாம். இது சங்கல்பத்தின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்றது.
சங்கல்பம் செய்யும்போது முதலில் பிரபஞ்ச உற்பத்தியிலிருந்து இன்றுவரையான காலம் நிர்ணயிக்கப்படுகிறது. மாதம், வாரம் என்பவை போன்று மிக நீண்டகாலக் கணக்குகள் பரார்த்தம், கல்பம்;, மன்வந்தரம், யுகம் முதலியவை.
இப்போது நாம் வசிப்பது இரண்டாவது பரார்த்தம் (துவிதீயபரார்த்தே) சுவேதவராக கல்பம், வைவஸ்வத மனுஅந்தரம், கலியுகம், இதன் முற்பகுதியில் விபவ முதல் அசஷய வரையான 60 வருடங்கள் தொடர்ந்து சக்கரமாக வரும். வருடத்தில் 12 மாதம் (சித்திரை முதல் பங்குனி வரை) இருபசஷம் (ப+ர்வம், அபரம்) பசஷத்தில் 16 திதிகள் (பிரதமை முதல் பௌர்ணமி, அமாவாசைவரை) என்பனவும் வாரத்தில் ஏழு நாட்களும் வருகின்றன.27 நட்சத்திரங்கள் தொடர்கின்றன. இவற்றைவிட யோகங்களும் கரணங்களும் அமைகின்றன.
நாம் கிரியை செய்யும் போது உள்ளகால நேரப் பகுதிக்கு அமைய மேற்கூறப்பட்ட அத்தனையும் சங்கல்பத்தில் சொல்கிறோம். ,வையாவும் சுபமாக அமையவேண்டும் என்பதற்காகவே சுபயோக, சுபகரண..... என்று சொல்லப்படுகிறது. தற்செயலாக இவற்றில் தோஷங்களும் ஏதும் இருக்கக்கூடும் என்பதால் அவற்றின் தீயவிளைவுகள் நம்மைத் தாக்காமலிருக்கும் பொருட்டாகவே சங்கல்பம் தொடங்கமுன்,

“திதி சிவஸ் ததா வாரோ நசஷத்ரம் சிவ ஏவ ச
யோகஸ்ச கரணம் சைவ சர்வம் சிவசமயம் ஐகத்”
என்று பிரார்த்திக்கப்படுகிறது. பஞ்சாங்க உறுப்புக்களான ஐந்துகாலப் பகுதிகளும் திதி, வாரம், நசஷத்திரம், யோகம்;, கரணம், சிவமயமாக மங்கலமாக அமையட்டும் என்று வேண்டுவதே இதன் பொருள்.
இதன்பின் தர்ப்பை (பவித்ரம்) அணியும் போதும்,
“ததேவ லக்னம் சுதினம் ததேவ
தாராபலம் சந்த்ரபலம் ததேவ”
(அதுவே நல்ல லக்னம், அதுவே நல்ல தினம். நற்பலனை கொடுக்கும் சுபவேளை அதுவே) என்ற நம்பிக்கையோடு அணியப்படுகின்றது.
சங்கல்;பத்தின் முதற்பகுதி இவ்வாறு காலத்தை எடுத்துக் கூறும்போது தொடர்ந்து வரும் பகுதி இடத்தைக்; கூறுகின்றது. இந்த இடத்திலே நாம் இக்கிரியையைச் செய்கிறோம் என்பது இதன்பொருள்.

“ஐம்ப+த்துவீபே, பாரதவர்ஷே, பரதகண்டே, மேரோர்தஷிணே பார்ஸ்வே……”
இவையாவும் ஏழாம் வேற்றுமையில், இடப்பொருளில் வருதலைக் காண்க. ஐம்புத்தீவு, பாரத வர்;ஷம், பரதகண்டம் என்பன யாவும் நமது தென்னாசியப் பிராந்தியமனைத்தையும் உள்ளடக்கியதாக முற்காலத்தில் ஒரு நிலப்பரப்பாகக் காணப்பட்ட பெரும் பகுதிகளின் பெயர், முகவரி குறிப்பிட்டு கண்டம், நாடு, நகரம், கிராமம் எனச் சுட்டுவதுபோல பரந்த நிலப்பரப்பிலிருந்து குறுகிவருவது இது. பரதகண்டத்திலே மேரு மலைக்குத் தென்பகுதியிலே அமைந்திருக்கும் நமது நாடு (லங்காத் த்வீபே) நகரம் (வீணாகானபுரெ) கிராமம் (கோப்பாய்க் கிராமே) குறிச்சி (கலட்டி சேஷத்ரே) என்பவற்றைக் கூறுவது மரபு.
பதினான்கு உலகங்கள் இருப்பினும் கர்மப+மி எனப்படுவது இப்ப+வுலகம் தான்.
“புவனியில் போய்ப் பிறவாமையில் நாள் நாம்;
போக்கு கின்றோம் அவமே” எனத் தேவர்கள் வருந்தி, “இந்தப் ப+மி சிவனுய்யக் கொள்கின்ற ஆறு” என்று இப்ப+மியிள் மகிமையைக் கூறுவதாக மணிவாசகர் போற்றுகிறார். இப்ப+மியில் பிறந்து கர்மவினைகளைச் செய்துதான் பாவபுண்ணியங்களை அனுபவித்துத் தீர்க்கலாம்.
இந்தப் ப+மியிலும் பாரததேசம் முதலியன புண்ணிய பகுதிகள். அங்கும் சில தலங்கள் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பவற்றால் மகிமைபெற்றுச் சிறந்து விளங்குகின்றன. அவற்றுள்ளும் எந்தெந்த தோஷங்களை எங்கெங்கு போக்கலாம், எந்தெந்த நற்பயன்களை எங்கெங்கு பெறலாம் என்றெல்லாம் அனுபவப+ர்வமாக நம் முன்னோர்கள் கூறிவந்;திருக்கின்றனர். இவற்றால் நாம் நமது சமயக் கிரியைகளில் காலமும் இடமும் பெறும் முக்கியத்துவத்தை உணர்கிறோம்.
காலம் என்ற விடயத்தை இன்னும் சிறிது சிந்திப்போம். இறைவனுக்கான வழிபாடுகள் காலை, மாலை முதலிய சந்;;திப் பொழுதுகளி;ல் மேன்மையுறுகின்;றன. இரவுப் பொழுது பொதுவாக சக்தி வழிபாட்டுக்குரியது. பகற்பொழுது சிவனுக்குரியது. இரண்டும் கூடிப்பிரிகின்ற அந்தி சந்திகள் சிவ சக்தி ஐக்கியத்தை உணர்த்துவதாகவும் அருள்விளக்கமுடையவையாகவும் இருக்கும். இதேபோல நள்ளிரவுப் பொழுதும் நடுப்பகலும் சிறப்புடையவையே. நண்பகல்வேளையைத் தேவேந்திர முகூர்த்தம் என்பர்;.
ஆறுகாலப் பூiஐகள், பன்னிருகாலப் ப+iஐகள் என்பன ஆலயங்களில்; விசேஷ வழிபாட்டுக்; காலங்களாகும். இப்ப+iஐகள் நிகழ்வதற்குரிய காலநேரக் கணக்குகள் ஆகமங்களில் விதித்துக் கூறப்பட்டிருக்கின்றன. காலைப்பூ+iஐ சூரியனில்; ஆரம்பிப்பதும் மாலைப்ப+iஐ சந்திரனில் ஆரம்பிப்பதும் குறிப்பிடத்தக்கது.
கும்பாபிஷேகம், மஹோற்சவம் முதலிய விஷேச நிகழ்வுகளில் யாகப+iஐ நடைபெறுகிறது. நாளொன்றுக்கு இரண்டு காலம் யாகப+iஐ நிகழவேண்டும். யாகப+iஐயின்; நாட்கணக்கு மூன்று முதல்; ஒன்பதுவரை ஒற்றைப்படையாகவும் காலங்கள் இரட்டைப்படையாகவும் (உதாரணமாக மூன்று நாள் எனின் ஆறு காலம் ) அமையவேண்டுமென்பது விதியாகும்.
அங்குரார்ப்பணத்துடன்; ஆரம்பமாகும் யாகப+iஐ எப்போதும் மாலையில்தான் தொடங்கப்படும். கலாகர்ஷணம், ஸ்பர்ஸாகுதி முதலிய கிரியைகள் இரவுப் பொழுதுக்குரியவை. இவ்வாறே விரதங்களுக்கும் காலநியதிகள் உண்டு. நட்சத்திர, திதி வியாபகங்களை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படும் விரதங்களை அதற்குரிய காலங்களில் அநுஷ்டிப்பதும் அடுத்தநாட் காலையில் எட்;டு மணிக்குமுன் பாரணை செய்வதும் அந்தந்த விரதங்களுக்குரிய ஆண்டுகளுக்கு அநுஷ்டித்தபின் (உதாரணமாக கந்தசஷ்டி-ஆறு வருடங்கள் ) விரத உத்;தியாபனம் செய்;து இறைவனிடம் சமர்ப்பித்து மறுபடி ஆரம்பிப்பது அவசியமாகும்.
மந்திரஐபங்கள் எந்தெந்த வேளையில் செய்யப்படவேண்டும், எத்தனை உருக்கள் ஜபிக்கப்படவேண்டும். என்றெல்லாம் கணக்குகள் உண்டு. தினமும் நாம் செய்யும் பிரார்த்தனைகளை ஒரு குறித்த நேரத்தில் தொடர்ந்து செய்துவரும்போது அதிக பயனைப் பெறலாம்.
இடம் என்பதுபற்றி இன்னும்சிறிது சிந்திப்பின் ஆலயம்;; ஒன்றிலே வசந்தமண்டபம், யாகசாலை, பாகசாலை முதலிய ஒவ்வோர் அங்கமும் எந்தெந்த ஸ்தானத்தில்; எந்த அளவுப்பிரமாணத்தில் இருக்கவேண்டும் என்ற விதிமுறைகள்; ஆகமங்களில் விதிக்கப்;பட்டிருக்க காணலாம். கிரியைகள் செய்வதற்கான இடங்களும்; நிர்ணயிக்கப்பட்;;டுள்ளன. கிராமசாந்தி தென்மேற்கு அல்லது ஈசானத்தில் செய்யப்படவேண்டும். பிரவேச பலி, சுற்றுப்பலி முதலியன வெளிவீதியில் செய்யப்படும். சாந்திக்கிரியைகள் உள்வீதியிலும் ஸ்தம்ப மண்டபத்திலும் செய்யப்படும். கும்ப ப+ஜைகள் ஸ்நபனமண்டபத்தில் நிகழ்த்தப்படும்.
இல்லறமென்னும் நல்லறத்தை நடத்துவதற்குரிய இல்லம் அமையவேண்டிய இடம், அமைப்புமுறை என்பவற்றையும் வாஸ்து சாஸ்திரம் விரிவாகக் கூறுகின்றது. மனைகோலுதல் அல்லது நிலையம் எடுத்தல் என்று கூறுவதற்கிணங்க, முறையாக இடமெடுத்து உரியகாலத்தில் கிருஹப் பிரவேசம் செய்து வாழ்ந்தால் இல்லறம் செழிக்கும். நாம் வாழ்ந்து கொண்டிருக்;கும் வீட்டிலேயே தளபாடங்கள், உபகரணங்கள், கருவிகள் முதலியவற்றையும் ஒளி, ஒலி, மின் சக்திகளை வெளிப்படுத்தும் நவீன சாதனங்களையும் உரிய முறைப்படி அவ்வவற்றுக்குரிய ஸ்தானங்களில் அமைப்பதன் மூலம் பெரும் சக்தியை விளைவித்து வளம்பெருக்கி அமைதியும் இன்பமும் பெறலாம் என விளக்கி நவீன வாஸ்து சாஸ்திர நூல்கள் பல இன்று வெளிவந்;;துகொண்டிருக்கின்றன.
எனவே காலமும் இடமும் கருதிக் கவின்மிகு வாழ்க்கையை நடத்துவோமாக.

Wednesday, June 25, 2008

விபூதி (திருநீறு)

சைவ சமய பெருமக்களிற்கு திருநீறு, உருத்திராட்சம், ஐந்தெழுத்து ஆகிய மூன்றும் மிகவும் இன்றியமையாதவை. பசுவின் சாணத்தை எடுத்து அதனை சுட்டு சாம்பலாக்கிய பஸ்மமே சுத்தமான விபூதி ஆகும். விபூதி தரிப்பது ஆன்மீக சம்பச்தமான நன்மைகள் விளைவதுடன், உடல்நலம் சார்ந்த நன்மைகளும் உண்டாகும் என்பது சான்றோர்களின் கருத்தாகும். திருநீறு கிருமிநாசினியும் கூட. அதனை உடல் முழுவதும் பூசுவதனால் உடலில் உள்ள துர்நாற்றம் மறையும் என இயற்கை மருத்துவம் கூறுகிறது. நெற்றியில் தரிப்பதனால் தலைக்குள் கோர்க்கும் நீரினை திருநீறு வெளியேற்றுகிறது.

இதன் பெருமையை திருஞானசம்பந்தர் தனது மந்திரமாவது நீறு எனத் தொடங்கும் திருநீற்றுப் பதிகத்தில் தெளிவாகக் கூறியுள்ளார். சிவாயநம, நமசிவாய, சிவ சிவ என்று ஏதாவதொரு பஞ்சாட்சர மந்திரத்தை செபித்தபடி உத்தூளனமாக (நெற்றி முழவதும்) அல்லது திரிபுண்டரிகமாக (3 கோடுகளாக) திருநீற்றினை அணிதல் வேண்டும். இதற்கு ஆட்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் ஆகிய விரல்களை உபயோகிக்க வேண்டும். கிழக்கு முகமாக அல்லது வடக்கு முகமாக நோக்கியபடியே அணிதல் வேண்டும். இதனால் நல்வாக்கு, நல்லோர் நட்பு, உயர்ந்த நற்குணங்கள்;, குறைவில்லா செல்வம், சகல விதமான ஐசுவரியங்கள் போன்ற எல்லா நலமும் பெற்று நம் வாழ்வில் சிறப்புடன் வாழலாம்.

மேலும் சில நன்மைகளைப் பார்ப்போம் :-
வாத, பித்த, கப நாடிகளை சமநிலைப்படுத்தக் கூடியது.
மனம், வாக்கு, காயம் ஆகியவற்றை தூய்மையாக்கும்.
ஆணவம், கர்மம், மாயை என்ற மும் மலங்களை நீங்கச் செய்யும்.

விதிப்படியமைந்த திருநீற்றை உட்கொண்டால் உடம்பின் அசுத்தங்கள்அனைத்தையும் போக்கி நாடிநரம்புகள் அனைத்திற்கும் வலிமையை கொடுக்கும்.


உடலுக்கும், உயிரிற்கும், இம்மையிற்கும், மறுமையிற்கும் உயர்வளிக்கும் விபூதியினை தினமும் நாம் அணிந்து உயர்வடைவோமாக.

துளசியின் பெருமைதுளசி ஒரு மருந்துச் செடி மட்டுமல்ல. அதில் தெய்வீகத் தன்மையும் நிறைந்திருப்பதால் வீட்டின் முன் மாடத்தில் துளசியை நட்டு பூஜிப்பது வழக்கம். துளசியின் வேர் மண்ணை தண்ணீரில் குழைத்து நெற்றியில் இட்டுக் கொள்வதால் சகல சம்பத்துகளும் வந்து சேரும் என்று நம்பப்படுகிறது. பெருமாளுக்கு மிகவும் உகந்தது துளசி. சன்யாஸிகள் துளசியால் பூஜை செய்த பிறகு அதை சிறிய அளவில் பிரசாதமாக உட்கொள்வதும், முகர்வதும், காதில் வைத்துக் கொள்வதற்கும் உபயோகிக்கின்றனர்.

பல வகை துளசிகளில் வெண்துளசியும் கருந்துளசியையும் சாதாரணமாக காணப்படுகின்றன. காட்டு துளசி என்னும் ருத்திரசடை (திருநீற்றுப்பச்சை) ராம துளசி (எலுமிச்சம் துளசி) என்றும் வகைகளுன்டு. வெண்துளசியின் இலை, தண்டு, காம்பு ஆகியவை வெண்மை கலந்த பச்சை நிறமாகவும், கருந்துளசியின் இலை, தண்டு, காம்பு ஆகியவை கருஞ்சிவப்பு ஏறிய பச்சை நிறமாகவும் காணப்படும். இவ்விரண்டு வகை துளசியும் குணங்களில் அதிக வேறுபாடு இல்லாதவை.

மலேரியா, இன்புளயன்ஸா போன்ற ஜ்வர நிலைகளில் துளசியின் உபயோகத்தால் அவ்வகை நோய்கள் மற்றவருக்கு பரவாமல் தடுக்கும் சக்தியை உடையது.

சுவையில் காரம் கலந்த கசப்புடன் கூடியது. உஷ்ணப் பாங்கான பூமியில் அதிகம் விளையக் கூடியது. உடல் சூட்டை சமச்சீராக வைக்கும் திறன் அதற்கு உண்டு. இறுகியுள்ள மார்ச்சளியை நீர்க்கச் செய்து கபத்தை வெளிக் கொண்டு வருவதால் கபத்தினாலும் உமிழ்நீராலும் ஏற்படும் துர்நாற்றத்தை நீக்கிவிடும். வாயில் ஏற்பட்டுள்ள குழகுழப்பு, அழுக்கு ஆகியவற்றை துளசி அறவே நீக்கி நாக்கிற்கு சுறுசுறுப்பையும் சுவை அறியும் தன்மையையும் விரைவில் ஏற்படுத்துகிறது. துளசியை மென்று தின்பதால் பசித்தீயை கொழுந்து விட்டு எரியச் செய்யும்.

குளிர் ஜ்வரம், கபத்தினால் ஏற்படும் இருமல், மூச்சுத்திணறல், நுரையீரலில் ஏற்பட்டுள்ள கபக்கட்டினால் உண்டாகும் விலாவலி, ஜலதோஷம், குழந்தைகளுக்கு இதன் மூலமாக ஏற்படும் பசிமந்தம், காரணம் புரியாத அழுகை, உடலை முறுக்கி அழுதல், உடல் வலி போன்ற நிலைகளில் துளசிச் சாற்றுடன் தேன் கலந்து கொடுப்பதால் அதிசயத்தக்கப் பலனை உடன் துளசி உண்டாக்கி, ஆரோக்யத்தை மேம்படச் செய்கிறது.

இன்புளயன்ஸா, மலேரியா போன்றவற்றில் துளசியை போட்டு கொதிக்க வைத்த வெதுவெதுப்பான தண்ணீரை அருந்தச் செய்ய வேண்டும். துளசியை வெந்நீருடன் அரைத்து நெற்றியில் பற்று இடுவதால் தலைபாரம், தலைவலி ஆகியவை குறைந்துவிடும். துளசியின் மணம் அபாரமான மனத்தெம்பு அளிக்கிறது. உடல் பகுதிகள் அழுகல், கிருமிகள் ஆகியவற்றை துளசியின் உபயோகத்தின் மூலம் நீக்கலாம்.

உண்ட உணவு சரிவர ஜீரணமாகாமல் பதமழிந்து அதன் மூலம் ஏற்படும் குடல் கீரைப்பூச்சிகள் அனைத்தையும் துளசி அழிக்க வல்லது. உடலில் ஏற்படும்

தேமல், படை, எச்சில் தழும்பு, காணாக்கடி போன்றவற்றில் துளசியை அரைத்து பற்று இடுதல், சாறு அல்லது கஷாயமாக்கி குடிப்பதாலும் அவ்வகை நோய்கள் நீங்கிவிடும். துளசி சாறு அரை முதல் 2 ஸ்பூன் வரை குழந்தைகளுக்கும் கால் முதல் அரை அவுன்ஸ் பெரியவர்களும், சூர்ணம் 2-4 சிட்டிகை குழந்தைக்கும், அரை முதல் 1 அவுன்ஸ் பெரியவர்களும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

துளசியுடன் மிளகும் சேர்த்து சாப்பிட்டால் குளிர் ஜ்வரம், கடுப்பு, வலி, தலைகனம், மார்ச்சளி, முறை ஜ்வரம், யானைக்கால் ஜ்வரம் ஆகியவை நீங்கி விடும். ஜ்வரத்தின் ஆரம்பத்திலேயே துளசியும் மிளகும் சேர்த்துச் சாப்பிடுவதால் ஜ்வரம் மேலும் வளராமல் நின்று விடும். 10 துளசி இலைகளும் 5 மிளகுமே போதுமானது. ஜ்வரம் வந்துவிட்டால் துளசி மிளகும் சேர்த்து கஷாயம் காய்ச்சி தேன் சர்க்கரை கலந்து பருகுவதால் ஜ்வரம் தணிந்து விடும்.

துளசி, மிளகு, பழைய வெல்லம் ஆகியவற்றின் கூட்டு உபயோகம் மலேரியா, யானைக்கால் ஜ்வரம் ஆகியவற்றை வராமல் தடுக்கின்றன. மிளகை துளசி சாற்றில் 7 முதல் 21 நாட்கள் வரை ஊறவைத்து, நிழலில் உலர்த்தி, 5 முதல் 10 மிளகு வரை தூள் செய்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட குளிர்ஜ்வரம், காணாக்கடி, முறை ஜ்வரம் ஆகியவை வராது.

துளசி, மிளகு, தும்பை இலை ஆகியவற்றை கஷாயம் செய்து பருகுவதால் குளிர்ஜ்வரம், வாயுவினால் ஏற்படும் குடைச்சல் நீங்கும். விஷஜ்வரமும் வராது. அஜீர்ணம், வாயுப்பொறுமல், வயறு உப்புசம், வலி, அஜீர்ணபேதி, கீரைப்பூச்சி, பூச்சிகளால் ஏற்படும் பேதி ஆகியவற்றில் துளசியுடன் ஓமம் சேர்த்து சாப்பிட அவை நீங்கி விடுகின்றன. துளசி, ஓமக்கஷாயம், ஓமத்தை துளசி சாற்றில் ஊற வைத்து, நிழலில் உலர்த்தி, தூள் செய்து சாப்பிடலாம். துளசி, ஓமம் ஆகியவற்றை தண்ணீரில் அரைத்து, வடிகட்டி, தேன் சர்க்கரை கலந்தும் சாப்பிடலாம்.

குழந்தைகளுக்கு ஏற்படும் மார்ச்சளியில் துளசி, ஓமம், பழைய வெல்லத்தின் நித்திய உபயோகமும் அதுபோல வெற்றிலைச் சாறுடன் துளசி சாறும் கலந்து உபயோகபடுத்தினால் மெச்சத்தக்க பலனை தருகின்றன. சொத்தைப்பல், ஈறுகொழுத்து ஏற்படும் வேதனையில் துளசிச்சாறு, கிராம்புத்தூள், கற்பூரம் ஆகியவற்றை கலந்து உபயோகித்தல் மிகவும் நல்லது. துளசியை அரைத்து தோலில் பற்றிட காணாக்கடி மறைந்து விடும்.

பேன், அரிப்பு, படை, தேமல், வரட்டுசொரி போன்ற நோய்களில் துளசி சாறு, எலுமிச்சம் சாறு, கற்பூரம் ஆகியவற்றை சேர்த்து தலைக்குத் தேய்த்து வர விரைவில் குணமாகி விடும்.

கடுமையான தலைவலியில் கிராம்பு, சுக்கு, துளசி சாறு ஆகியவற்றை அரைத்து நெற்றியில் பற்றுப் போட உடன் தலைவலி நீங்கி விடும். மூக்கடைப்பு, மண்டையில் நீர் கோர்த்து ஏற்படும் நீர்க்கோர்வை, தலை குடைச்சல் ஆகியவற்றில் துளசியை தூள் செய்து மூக்குப் பொடியாக உபயோகிக்க நல்ல பலனைத் தரும்.

இப்படிப் பலவகைகளில் உபயோகமாகும் துளசியை அனைவரும் பயிறிட்டு அதன் பலனை முழுவதும் நாம் பெற முயற்சி செய்ய வேண்டும்.

Friday, June 13, 2008

கண்ணில் சிறந்த உறுப்பில்லை

''எண்சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம்" என்பது அன்றோர் வாக்கு. 'கண்ணில் சிறந்த உறுப்பில்லை யாவதும் காட்டியதே" என்பதை தஞ்சை வாணன் கோவை. 'சமஸ்கிருத மொழியிலும், ஸர்யவஸ்ய காத் ரஸ்ய சிரஸ்ப்ரதாநம், ஸ்ர்வேந்திரியானாம் நயநம் ப்ரநாதம்" என்று இக் கருத்தே கூறப்படுகிறது. மக்களின் உடம்பிலுள்ள கருவிகளை இரண்டு வகையாகப் பிரிப்பர். ஒன்று அறிவுக்கருவி, மற்றொன்று தொழிற்கருவி, அறிவுக்கருவிகள் ஐந்து. தொழிற் கருவிகள் ஐந்து. ஊற்றுணர்வுள்ள உடம்பு, சுவையு ணர்வுள்ள நாக்கு, ஒளியுணர்வுள்ள கண் நாற்ற உணர்வுள்ள மூக்கு, ஒலியுணர்வுள்ள காது எனும் அறி வுக்கருவிகளான ஐம் பொறிகளும், அவற்றை உணர்ந்து செயற்படுத்தும் மூளையும் தலையில் இருக்கும் காரணம் பற்றியே ' எண்சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம்" என்றனர்.
இவ் ஐம்பெறிகளுள்ளும் கண் சிறந்த இடம் வகிக்கிறது. காரணம் மற்றய பொறிகள் தன்னிடம் வருவனவற்றை அறிந்து மூளைக்கு உணர்த்துவன. ஆனால் கண் மட்டுமே தொலைவிலுள்ள பொருளை யும் சென்றறிந்து அதனை மூளைக்கு உணர்த்தும் திறனுடையது. கண்ணைத் தவிர மற்றய பொறிகள் நினஇறு பற்றுவன. குணஇ மட்டுமே சென்று பற்றும் சிறப்புடையது. இச் சிறப்புக் கருதியே 'கண்ணில் சிறந்த உறுப்பில்லை யாவதும் காட்டியதே!" என்று தஞ்சை வாணன் கோவையின் ஆசிரியர் பொய்யா மொழிப்புலவர் கூறினார்.
மன்னனே மக்களின் கண்:-
சேக்கிழாரும் மன்னனின் இலக்கணம் கூறவந்த இடத்து 'மண்ணில் வாழ்தரும் மன்னுயிர் கட்கெல்லாம் கண்ணும் ஆவியும் ஆம்பெருங் காவலன்"என்று மொழிகின்றார். மன்னனானவன் தன் நாட்டில் வாழும் உயிர்கட்கெல்லாம் உயிராக வாழ்பவன். தன்னிடம் குறைவேண்டியும், முறைவேண்டியும் வருவோர்க்கு ஆவன செய்வதோடல்லாது தானே பல இடங்களுக்கும் சென்று குறைகளையும், முறைகளையும் கண்டும் கேட்டும் அறிந்து அதற்குத் தக்க தீர் வு செய்யும் கட்டுப்பாடுடையவன் என்பது கருத்தாகும். உயிர் நின்று பற்றுவது, கண் சென்று பற்றுவது, மன்னன் உயிராக இருந்து ஒற்றர் வழி அறிந்துமூளையைப்போல் நின்றும் நீதி வழங்க வேண்டும். கண்ணாக இருந்து சென்று நீதி வழங்க வேண்டும் எனும் உட்கருத்தில் தான் சேக்கிழார் பெருமான் 'கண்ணும் ஆவியும் ஆம்பெரும் காவலன்" என்றருளிச் செய்கின்றார்.
இன்ப துன்பத்தை காட்டுவது கண்:-
மேலும் கண்ணிற்குப் பல சிறப்புக்கள் உண்டு. அறிதற் கருவியாக விளங்கும் கண் அறிவுக் கருவிகளிலும் தொழிற் கருவிகளாகிய கை, கால், வாக்கு, எருவாய், கருவாய் எனும் உடலுறுப்புக்களி லும் ஏதாவது நன்றோ தீதோ திகழுமாயின் அதனைப் புலப்படுத்துகின்ற நிலையில் இன்ப துன்பக் கண்ணீர் வடிப்பதும் அக் கண்ணின் சிறப்பாகும். மனிதனின் உள்ளத்திற்குள் நிகழும் மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் கருவியாக இலங்கும் சிறப்புடையது கண். ஒரு செயலை ஏற்று இசைவுதருவதும் புறக்கணிப்பதும் கண்ணின் புலப்பாட்டிலேயே அறிந்து கொள்ள இயலும். அத்தகைய சிறப்புடைய கண் திருடனைக் காட்டிக் கொடுக்கவும் ஒழுக்கம் இல்லாதவனை உலகுக்கு உணர்த்தவும் உரிய கருவியாக விளங்குகின்றது.
கற்பினைக் காட்டுவது கண் :-
இதனால்தான் சீதாபிராட்டியின் கற்புத்திறனை இராமபிரானுடன் கூறிவந்த அனுமான் ' கண்டனன் கற்பினுக் கணியைக் கண்களால்" என்று விளக்குகின்றான். சீதை உயிரோடுதான் இருக்கின்றார் பிறர் கூறக் கேட்டு வரவில்லை. நானே என் கண்களால் கண்டுவந்தேன். என்று அனுமான் கூறுகின்றார். என்பதாகப் பொருள் கூறலாம். ஆனால் அம்மையார் கற்போடுதான் இருக்கிறார் என்பதை எங்ஙனம் கூற முடியும் என்பதற்கு விளக்கம் கூறவே இத்தொடருக்கு இன்னும் ஆழமாகச் சிந்தித்துப் பொருள் விளக்கம் காணுதல் அவசியமாகின்றது. 'கண்டனன்" என்பதற்கு அனுமன் தான் தன் கண்களால் பார்த் தேன் என்ற பொருளும் பின்னே உள்ள கண்களால் பார்த்தேன் என்ற பொருளும் பின்னே உள்ள கண்களால் என்னும் சொல்லிற்குச் சீதையின் கண்களால் கற்பினுக் கணியாக இருப்பதைப் பார்த்தே ன் என்னும் பொருளும் கொள்ளுதல் ஒருவகை. மேலும் அனுமன் கண்களால் சீதாபிராட்டியை கண்டன ன் என்றும், சீதாபிராட்டியின் கண்களால் அவரது கற்புநெறி பிறளாது அணியாகத் திகழ்வதைக் கண்டனன் என்றும் கொள்ளுதல் சிறப்பாகும்.
எனவே கண்ணானது மற்றப் பொருள்களை அறிந்து மூளைக்கு உணர்த்துவதோடல்லாது கண்களையுடைய மனிதனின் உள்ள உணர்ச்சிகளைச் சமுதாயத்திற்கு உணர்த்தும் உயர் கருவியாக வும் விளங்குகின்றது.
காக்கவேண்டிய சிறப்பினது கண் :-
இத்தகைய சிறப்புக்கள் பலவுடைய கண்களைக் காண்பதற்கு இறைவனே தக்க பாதுகாப்பு கொடு த்திருக்கின்றார். கண்ணை இமை காப்பது போல் என்று உலகோர் கூறுவதும் ஈண்டு நினைவு கூரத்தக் கது. காக்கும் இமையை கொடுத்துக் காத்துக் கொள் என்று ஆண்டவனே அறிவுறுத்தியுள்ள கண்ணை இன்று பலர் பல காரணங்களினால் கெடுத்துக் கொள்கிறார்கள்.
கண்கெடுவதற்குரிய காரணங்கள் பலவாகும். பொதுவாக மனித வாழ்வில் ஒழுங்கு நெறிமுறைகள் கெடுமானால் அவை கண்களைப் பாதிக்கும். குறிப்பாக ஒழுக்கக் கேட்டினாலும், பொய் சொல்லுவதாலும், கோவப்படுவதாலும், திரைப்படம் தொலைக்காட்சி பார்ப்பதனாலும் கண் கெடும். மற்ற க் காரணங்கள் தெளிவாக விளங்கினாலும் பொய் சொல்வதினால் கண் பாதிக்கும் என்பது பலருக்குப் பரிவதில்லை. பொய் சொல்லுகின்ற போது அவனது மனம் அவனை உறுத்துகின்றது. அதனால் உடம்பிலுள்ள நரம்புகள் பாதிக்கப்படுகின்றன. இவ் வகையில் கண் கெடுகின்றது.
சுந்தரர் வாழ்வில் கண் :-
பொச்சாட்சி சொன்னவர்களுக்கும் கண் தெரியாமல் போய்விடும். ஏனெனின்; 'சாட்சி" என்றாலேயே கண்ணால் கண்டதை கூறுதல் என்பது பொருளாகும். “சட்சு” என்னும் சொல்லுக்குக் கண் என்பது பொ ருளாகும். அதன் அடிப்படையில் வந்ததே “சாட்சி” என்னும் சொல். ஆதலின் சாட்சி சொல்லும் பொழுது தன் கண்களால் காணாத ஒன்றைக் கூறுவானேயானால் இது அவனது மனத்தை உறுத்திப் பின்னே தண்டனைக் குரியதாகிப் கண்களைப் பாதிக்கும். சபதம் பொயத்தாலும் கண் கெடும் என்பதற்கு நாம் ஆசாரிய மூhத்தியாகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருள் வரலாற்றை இவ் வகையில் எடுத்துக் கொள்ள லாம். இது தவறுடையது எனினும் வாழ்விய நெறிமுறைகளை விளக்கிக் கொள்வதற்கும் கடவுளின் நடுநிலைத் தன்மையைப் புரிந்து கொள்வதற்கும் பயன்படும் என்ற வகையில் அடக்கத்தோடும் அச்சத் தோடும் அவ்வரலாற்றை சிந்திக்கலாம்.
எறும்புக்குக் கண் இல்லை :-
இதுவரை சிந்தித்த கருத்துக்களால் கண் கெடுவதற்குரிய காரணங்களை எண்ணியது போல இனிக் கண்ணைப் பாதுகாத்தற்குரிய சில வழிமுறைகளையும் சிந்திப்போம். கண் நன்கு தெரிவதற்குப் பொதுவாகக் கீரை வகைகளைக் குறிப்பாக முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளுதல் நல்லது. மேலும் அறநோக்குப்படி பார்த்தால் கண்பார்வை இல்லாத ஜீவராசிகளுக்கு உணவு அளித்தலும் கண்ணைக் காப்பாற்றும். உலக உயிர்களில் கண்பார்வையில்லாத உயிர் எறும்பாகும். தோல்காப்பியர் ஓரறிவுயிர், ஈரறிவுயிர் என்பது பற்றி ஒரு நூற்பாக் கூறுகின்றார்.
எறும்பு தின்றால் கண் தெரியும் :-
இத்தகைய கண் பார்வையில்லாத உயிருக்கு நெல் முதலிய தானியங்களைப் புற்றில் இடுதலும், வீடுகளின் முன்னர் அரிசி மாக்கோலம் போடுதலும், காரணமாக உணவுதரும் அறச்செயல்கள் நாட்டில் தொன்று தொட்டு நடைபெறுகின்றன. அரிசி மாக்கோலம் போடும் நிலையில் இப்பொழுது மாறுதலாகக் கல்லாலான மாவைக் கொண்டு கோலம் போடுகின்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.அறத்தின் நோக்கத்திற்கே புறம்பானது ஆகும்.
இங்ஙனம் எறும்பு போன்ற கண்பார்வை இல்லாத உயிரினங்களக்கு உணவை இட்டால் கண்பார் வை நன்கு தெரியும் எனும் பொருளில் தான் உலக வழக்கில் 'எறும்பு தின்றால் கண் தெரியும்" என் னும் பழமொழி வழங்கி வருகிறது. ஆனால் இப் பழமொழியன் உண்மைப் பொருள் அறியாத சிலர் உணவுப் பண்டங்களில் எறும்பு இருந்தால் 'பரவாயில்லை சாப்பிடுங்கள் கண் தெரியும்" என்று மாற்றுப் பொருள் கூறி வருகின்றனர். இது தவறு. எறும்பு தின்றால் கண் தெரியும் என்றால் எறும்பு நாம் போடும் உணவைத் தின்றால் நமக்குக் கண் தெரியும் என்ற பொருளே தவிர எறும்பையே தின்றால் தின்பவருக் கு கண் தெரியும் என்பது பொருளில்லை. பழமொழிகளை விழங்கக் கற்றுக் கொண்ட மக்கள் அவற்றின் உண்மைப் பொருளையும் புரிந்து கொள்ளுதல் அவசியம்.