Thursday, January 31, 2008

ஹம் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம்

Image Hosted by ImageShack.us



ஹம் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம் 1990ம் ஆண்டு ஹம் தமிழ் மக்களால் முதலில் நிலவறையில் திரு உருவப்படம் வைத்து சித்திரைப் புத்தாண்டில் ஆரம்பிக்கப்பட்டு பிரதி வெள்ளிக்கிழமைகளிலும், சிவரா த்திரி, நவராத்திரி, கந்தசஷ்டி, திருவொம்பாவை போன்ற விசேடதினங்களில் மாலை நேரங்களில் மட்டுமே பூiஐகள் ஆராதனைகள் செய்யப்பட்டு வந்தன.

1993ம் ஆண்டு ஹவாய் தீவிலிருந்து சற்குரு சிவயோக சுவாமிகளின் பிரதம சிஷ்யராகிய சற்குரு சிவாய சுப்பிரமணிய சுவாமிகள் வருகை தந்து, நில மட்டத்திற்கு கீழ் தெய்வத்தை வைத்து, மக்கள் நிலமட்டத்திற்கு மேலே இருந்துகொண்டு தெய்வத்தை வைத்து வணங்குவது முறை இல்லை என்றும் ஆலயத்தை வெளியே கொண்டு வரும்படி கூறி விநாயகர் திரு உருவச்சிலையை தானே தருவதாகக் கூறினார். அப்படியே அடியார்களின் உதவியுடன் ஆலய கட்டடம் கட்டப்பட்டு 1994ம் ஆண்டு வைகாசி மாதம் 12ம் திகதி புனர்பூச நட்சத்திரத்தில் சுப்பிரமணிய சவாமிகள் ஆசீர்வாதத்துடன் கும்பாபிசேகம் நடைபெற்று, தொடர்ந்து 45 நாட்கள் மண்டலாபிஷேகமும் நடைபெற்று இன்று வரை காலை 10.00 மணிக்கும் மாலை 18.00 மணிக்கும், மற்றும் இந்துக்களின் விசேட தினங்களிலும் இங்கு விசேடமாக பூiஐகள் நடைபெறுகின்றன.

விசேட தினங்களில் எம்பெருமான் வண்ணமலர் மாலைகளினால் அலங்காரம் செய்யப்பெற்று பக்தர்களின் தேவார பாராயணத்துடன் உள் வீதி வலம் வரும் அற்புதக் காட்சிகாணக் ;கோடி கண்கள் வேண்டும். சித்தி விநாயகர் அருள் பெற்ற அனேக அடியார்களையும், அவர் அருள் வேண்டி ஆலயம் வரும் அனேக பக்தர்களையும் அங்கு தினமும் காணலாம்.

1996ம் ஆண்டிலிருந்து மஹோற்சவம் நடைபெற்று வருகின்றது. தேர்த்திருவிழா இன்று வரை ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதத்தில் வரும் ஞாயிற்றுக் கிழமையே நடைபெற்றுவருவாதாக அறியக் கூடியதாக உள்ளது.

ஆலயம் ஹம் புகையிரத நிலையத்திற்கு மிக அருகே உள்ளது.

ஆலய விலாசம் :- Ferdinand Poggel str 25,
59065 Hamm


ஆலய தொலைபேசி இல:- 02381 162 686

No comments:

zwani.com myspace graphic comments