Wednesday, February 27, 2008

யார் பிராமணன்

இந்த உபநிஷதம் சாம வேதத்தைச் சார்ந்ததாகும். இது அறியாமையைத் தகர்ப்பதாகும். பிரம்ம ஞானம் விளங்கப் பெறாதவரை இடிப்பதாகும். ஆனால் அறிவு மேம்பாட்டுடையோரை ஏத்துவதாகும். இவ் வஜ்ரசூசிக் கொள்கை இவையே. வர்ணாசிரம தர்மத்தை, அதாவது பிரமணன், சாத்திரியன், வைசியன், சூத்திரன் எனும் நான்கு பிரிவுகளை வேதங்கள் ஒப்புக் கொண்டுள்ளன. ஸ்மிருதிகளும் நீதி நூல்களுங் கூட ஒப்புக் கொண்டுள்ளன. உண்மையில் யார் பிராமணன்? அவன் ஜீவனா அல்லது உடலா? அல்லது பிறப்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு வகுப்பா? அறிவால் ஒருவன் பிராமணனா? அல்லது தொழிலால் ஒருவன் பிராமணனா? சுயக்கிரியைகள் புரிவதால் ஒருவன் பிராமணனா? சமயக் கிரியைகள் புரிவதால் இங்கு ஒருவன் பிராமணனா? இவற்றுள் ஜீவன் பிராமணனாக இருக்க முடியாது. முற் பிறப்பான முந்தைய உடல்களிலும் ஜீவன் ஒன்றே. அது ஒன்றாக இருந்தாலும், முந்தைய கர்மங்களால் உந்தப்பட்டு, அனேக உடல்களைத் தாங்கும் நிலை அதற்குண்டு. எல்லா உடல்களிலும் ஜீவபாகம் ஒன்று தானே, அதன் ஜீவன் பிராமணனாக இருக்க முடியாது என்றாகி விட்டது. பிறகு, உடல்தான் பிராமணன் என்றால் அதுவும் இல்லை. மானிட வகுப்புகள் அனைத்தும் ஐம்பூதங்களால் ஆன உடல்களைக் கொண்டவையே. இத்தன்மையான ஒருமையாலும் மற்றும் முதுமை, மரணம், குணம், குற்றம் எனும் பொது நிலைகளாலும், இன்னும் இவை போன்ற பிற பொதுமைகளாலும் உடல் பிராம்மணன் இல்லை என்றாகி விட்டது. பிறப்பால் தான் பிராமணன் என்றால், அதுவும் இல்லை. அந்தக் கால முனிவர்கள் அநேகர் வௌ;வேறு வகையான மூலம் உடையவராயுள்ளனர். மானிட இனமன்றி, அநேக உயிரினங்களை மூலமாகக் கொண்டவர்களும் உண்டு. ரிஷ்ய சிருங்கர் ஒரு மானிலிருந்து பிறந்தவர். கௌசிகர் செய்புல்லிலிருந்து பிறந்தவர். வால்மீகி எறும்புப் புற்றிலிருந்தும், ஜாம்புகர் ஒரு நரியிலிருந்து உதித்தவர்கள். வியாசர் ஒரு மீனவப் பெண்ணினின்றும், கௌதமர் ஒரு முயலில் முதுகுலிருந்தும் தோன்றியவர்கள். வசிஷ்டர், ஊர்வசி என்கிற ஒரு காந்தர்வப் பெண்ணிடம் தோன்றினார்; அகஸ்தியர் ஒரு மண் குடுவையினின்று தோன்றினார் என்று தான் புனித நூல்கள் கூறுகின்றன. இவ்வாறு பிறந்தவர்களாயிருந்தும், இவருள் அறிவொளி வீசத் திகழ்ந்ததால் மிக உயர்ந்த பதவி பெற்றனர். இதனால் பிறப்பு ஒருவனை பிராமணன் ஆக்குவதில்லை என்று ஆகிவிட்டதல்லவா! அறிவால் ஒருவன் பிராமணன் ஆகிறான் என்றால் அதுவும் இல்லை. மற்ற மூன்று வர்ணத்தாருள்ளும் சாத்திரியர், வைசியர், சூத்திரர் பரம்பொருளைக் கண்டவரும், உன்னத உண்மையை அறிந்தவரும், அறிவொளி பெற்று திகழ்ந்தவரும் பலர் உளர். அதனால் அறிவு ஒருவனை பிராமணனாக ஆக்குவதில்லை என்றாகி விட்டதல்லவா? தொழில் தான் ஒருவனை பிராமணனாக்குகிறது என்றால் அதுவும் இல்லை. கடந்த பிறவியில் செய்திருந்த பணிகளும், இப்பிறவியில் செய்யத் தொடங்கிய பணியும், இனி வரும் பிறப்பில் செய்ய இருக்கின்ற பணிகளும் அனைத்து உயிர்களுக்கும் பொதுவாகவே உள்ளது. நன் மக்கள், முற்பிறவிக் ஹகர்மா'வால் உந்தப்பட்ட நற்செயல்கள் புரிகின்றனர். ஆதலால், செயல் ஒருவனை பிராமணனாக்குவதில்லை. சமயக் கடன்கள் புரிவதால் ஒருவன் பிராமணன் ஆகிறான் என்றால் அதுவும் இல்லை. சமயக் கடனில் ஒன்றான பொன்னை வாரிக் கொடுத்தல், செய்திருக்கும் சாத்திரியர், வைசியர், சூத்திரர் பலர் உண்டு. அதனால் சமயச் சடங்குகள் செய்வோன் பிராமணன் ஆகமாட்டான். இவ்வண்ணம் பல வகையிலிலும் பிராமணன் இல்லை என்றால், உண்மையில் யார் தான் பிராமணன்? ஆத்மாவைத் தெளிவாக அறிந்தவன் பிராமணன். பிறப்பு, இயல்பு, செயல் எனும் வேற்றுமைகளற்றவன் பிராமணன். ஆறு பலவீனங்கள், அறு நிலை என்பன போன்ற குறைகளில்லாதவன் பிராமணன். உண்மை, அறிவொளி, மகிழ்ச்சி, அழிவின்மை இவற்றின் வடிவமாயிருந்து தீர்மானங்கள் ஏதுமற்று எண்ணில்லாத் தீர்மானங்களுக்கு அடிப்படையாய் அமைய, எவன், எல்லா உயிருள்ளும், உறைந்திருக்கும் விழுப் பொருளாய்ச் செயல்படுகின்றானோ அவன் பிராமணன். மகிழ்ச்சியியல்பு, பகுக்க வொண்ணாத்தன்மை, அளப்பரிய நிலை, தன் சொந்த அனுபவத்தால் மட்டுமே உணர முடிவது போன்ற தன்மையுடையவனாய் எவன் வான்வெளி போல் அனைத்தின் உள்ளும் புறமும் நீக்கமற நிறைந்திருக்கிறானோ... எவன் தன்னை நேராய் தன் ஆத்மாவாய் வெளிப்படுத்துபவனோ, எவன் தன் இயல்பின் நிறைவேற்றத்தின் மூலம் ஆசை, பாவம் இவை போன்றவற்றின் குற்றங் குறைகளை நீக்கக் கண்டவனோ, எவன் அமைதியே உருவானவனாய், ஆசை முதலான ஐந்து கொடுநிலைகளைக் களைந்தவனோ, எவன் வீண் பகட்டு, நான், எனது என்பதற்ற மனத்தினாய் வாழ்பவனோ, அவனே பிராமணனாவான். இக்குணங்கள் கொண்டிருப்பவர் மட்டுமே பிராமணன். அந்தணன், அறவோன் ஆவான். இதுவே, வேத முடிவாகும்.

Friday, February 22, 2008

துளசி மஹிமை

1. நாரத மகாரிசி ப்ருது மஹாராஜாவுக்குச் சொல்கிறார்:-
சகல தேவதைகளும் தங்களுக்கு ஒரு காரியம் சித்திக்க வேண்டி பராசக்தியை போற்றுகிறார்கள். அப்போது ஆகாயத்தில் உலகெங்கும் பிரகாசிக்கும் தேஜோ மண்டலத்தைக் கண்டார்கள். அங்கே தோன்றிய ஆகாச வாணியையும் செவியுற்றனர்.
2. தேவதைகளால் பிரார்த்திக்கப்பட்ட சக்தியானவள், ''ஸத்வம், ரஜஸ், தமஸ் என்கிற மூன்று வித குணங்களால் நான்தான் கௌரீ, லக்ஷ்மி, சரஸ்வதி என்கிற மூன்று வித பேதத்தை அடைந்திருக்கிறேன். தேவர்களே!அங்கே செல்லுங்கள். உங்களுக்குக் காரிய சித்தி உண்டாகும் என்று ஆக்ஞை இட்டாள்.
3. அதற்குப் பிறகு சகல தேவர்களும் பராசக்தியின் வாக்கியப் படி மிகவும் பக்தியுடன் கௌரீ முதலான மூன்று பேர்களையும் வந்தனம் செய்தார்கள்.
4. கௌரீ முதலானவர்கள் தேவதைகளிடம்; சில விதைகளைக் கொடுத்து, 'இந்த விதைகளை ஸ்ரீ விஷ்ணு இருக்கும் இடத்தில் விதைத்தால் உங்கள் காரியம் சித்திக்கும்' என்று சொன்னார்கள். தேவர்களும் அப்படியே விதைத்தார்கள்.
5. ஸ்ரீ பார்வதி தேவியின் அம்சமாக ஸத்வம், ரஜஸ், தமஸ் என்கிற மூன்று குணங்களோடும் கூடிய துளசி அங்கே உண்டாயிற்று. அதைப் பார்த்து விஷ்ணு மிகவும் சந்தோஷத்துடன் அதை எடுத்துக்கொன்டு வைகுண்டம் சென்றார். விஷ்ணுவுக்குத் துளசியிடம் அதிகமான ப்ரீதி உண்டு. துளசியின் அடியில் ஸ்ரீவிஷ்ணுவைப் பூஜித்தால் விசேஷமான பலன்கள் உண்டாகும்.
6. எந்தக் இடத்தில் துளசி வனம் இருக்கின்றதோ, அந்த அரசனே! மிகவும் பரிசுத்தமானவர் அந்தக் கிருகத்தில் யம தூதர்கள் வரமாட்டார்கள்.
7. சகல பாபங்களையும் போக்கும்; சகல இஷ்டங்களையும் அளிக்கும். துளசி வனத்தை யார் உண்டுபண்ணுகிறார்களோ அவர்கள் யமனை அடைய மாட்டார்கள்.
8. நர்மதா நதியின் தரிசனம்;கங்கை ஸ்நானம் துளசி வனத்தின் சம்பந்தம் இம்மூன்றும் சமமான பலனைக் கொடுக்கும்.
9. துளசியை வளர்த்து, காப்பாற்றி, தரிசிப்பதால் வாக்கு, மனம், சரீரம் மூன்றினாலும் செய்த பாபங்கள் போகும்.
10.துளசியால் ஸ்ரீPமகாவிஷ்ணுவையோ, பரமேசுவரனையோ பூஜிக்கிறவன் முக்தியையடைகிறான். மறுபடியும் பிறவியை அடையமாட்டான்.
11. புஷ்கரம் கங்கை முதலான புண்ய தீர்த்தங்கள், விஷ்ணு முதலான தேவதைகள் எல்லோரும் துளசி தளத்தில் எப்பொழுதும் வசிக்கிறார்கள்.
12. துளசியைச் சிரசில் தரித்துக்கொண்டு பிராணனை விடுபவன் அநேக பாபங்கள் செய்திருந்தாலும் வைகுண்டத்தை அடைகிறான்.
13. துளசிக் கட்டையால் அரைத்த சந்தனத்தை, எவன் தரிக்கிறானோ, அவன் பாபம் செய்ய மாட்டான்.


14. துளசி தளங்களுடைய நிழல்படும் இடங்களில், சிராத்தம் (திதி) செய்ய வேண்டும். அதனால் பித்ருக்களுக்குத் திருப்தி ஏற்படும் என்று பத்ம புராணம் கூறுகின்றது. துளசி விஷயமான புராணக் கதை இது:
ஒரு கிராமத்தில் வைதிகாசாரமற்ற ஒரு வேதியன், பயிரிடும் தொழிலில் ஆவல்கொண்டு அத்தொழிலையே நடத்திவந்தான். ஒரு சமயம் அரண்யத்தில் மாட்டுப் புல்லுக்காகச் செல்லுங்கால், சில துளசிச் செடிகளைச் கண்ணுற்றான். அவைகளின் சிறந்த வாசனையில் விருப்பங் கொண்டான். சில செடிகளை அப்புல்லோடு சேர்த்துக்கட்டினான். இந்தச் சமயத்தில் அவன் ஆயுளின் முடிவோ என்னவோ!ஒரு கிருஷ்ண ஸர்ப்பம் அந்தப் புற்கட்டில் ஒளிந்துகொண்டிருந்தது. அது அவனுக்குத் தெரியாது. ஆனால் அவனைத் தீண்ட இவ்வரவத்திற்குச் சக்தி இல்லை. துளசிக் கட்டை கீழே போடும் சமயத்தை எதிர்பார்த்திருந்தது அது.
இந்தப் பிராம்மணனின் வீட்டிற்கருகிலுள்ள ஒருவர் சிறந்த தவ வலிமை உள்ள ஞானியாக விளங்கி வந்தார். அவர் ஸ்ரீமகாவிஷ்ணுவைத் துளசீ பத்திரங்களால் தினந்தோறும் பக்தியுடன் நன்கு ஆராதிக்கிறவர். புல்லுக்கட்டைச் சுமந்து செல்லும் அவன் பின்னால் யம தூதர்களைக் கண்ட அவர், ''எதற்காக நீங்கள் இவனைப் பின்பற்றுகிறீர்க''ளென்று வினவினார். உடனே அவர்கள், ''கிருஷ்ண சர்ப்பத்தின் மூலம் அவன் பிராணனை அபகரித்து யம லோகத்திற்குக் கொண்டுபோக வேண்டி நாங்கள் பின்தொடருகிறோம். துளசிச் செடிகளை அவன் தூக்கிச் செல்வதால் இப்பொழுது ஒன்றும் செய்யமுடியவில்லை. அந்தச் செடிகளை எப்பொழுது கீழே போடப்போகிறான் என்று சமயத்தை எதிர் பார்த்துக்கொண்டு பின் செல்லுகிறோம்''என்று விடை பகர்ந்தார்கள். இவ்வசனத்தை செவியுற்ற அவ்வேதிய சிரோமணி மிகவும் மனவருத்தம் அடைந்தார். ஆபத்தை எவ்விதத்திலும் போக்க வேண்டுமென்று கருதி அதற்குத் தகுந்த உபாயம் ஒன்றும் தோன்றாமல் அருகிலிருக்கும் எம கிங்கரர்களையே இதற்கு என்ன செய்யலாமென்று வினவினார். ''அவர்கள், ''தவசிரேஷ்டரே! ஒவ்வொரு நாளும் துளசி தளங்களால் ஸ்ரீPபகவானை அர்ச்சித்து எவ்வளவு புண்ணி;யம் சம்பாதித்திருக்கிறீர்களோ, அந்தப் புண்ணி;யத்தை இவன் பொருட்டுக் கொடுத்தால் இந்த ஆபத்திலிருந்து இவன் விலகுவான்'' என்று கூறினார்கள்.
தமக்குப் பரோபகாரம் செய்வதற்குத் தகுந்த சமயம் கிடைத்ததே என்று அடங்கா மகிழ்ச்சியுடன் தம் புண்யத்தை அளித்தார். உடனே புல்லுக்கட்டைச் சுமந்து வந்த பிராம்மணன் இங்கு நடந்த சகல சமாசாரங்களையும் இவ்வேதியர் வாயிலாக அறிந்து, அன்று முதல் ஒவ்வொரு தினமும் நியமமாகத் துளசி தளங்களால் ஸ்ரீமந் நாராயண மூர்த்தியைப் பூஜித்து முடிவில் உத்தமமான பதவியைப் பெற்றான். ஆகையால் நாமும் நம்மால் இயன்றவரை துளசி அர்ச்சனை செய்து ஜன்ம ஸாபல்யத்தை அடைவோமாக!

ஹம் திருநல்லூர் ஸ்ரீ ஆறுமுகவேலழகன்




ஹம் நகரில் திரு நல்லூர் ஸ்ரீ ஆறுமுகவேலழகன் அடியார்கள் குறைதீர்க்கும் அருள் அழகராகத் திகழ்கிறார். இவ் அருளாலயம் 23.06.99 அடிக்கல் நாட்டப்பெற்று மெய்யடியார்களது எண்ணம்போல் 07.02.2001 மகா கும்பாபிஷேகம் தைப்பூசத் தினத்தில் நடாத்தப்பெற்றது. ஒவ்வொரு மாதமும் கார்த்திகைத் திதியில் விஷேட பூiஐகள் நடைபெறுகி ன்றன. மற்றும் கந்தஷஸ்டி, தைப்பூசம், கார்த்திகை தீபம் போன்ற விஷேடதினங்களிலும் மற்றய அனைத்துச் சைவ சமய பண்டிகை நாட்களிலும் பூiஐகள் நடைபெறுகின்றன.
ஆலயம் தினந்தோறும் காலை 9:30மணியிலிருந்து மாலை 8-30 வரை பக்தர்களுக்காகத் திறந்தே இருக்கின்றது. பூiஐகள் தினமும் காலை 10.00 மணிக்கும் மாலை 18.30 மணி என இருவேளைகள் இடம் பெறுகின்றது.
எமது தாய் நாட்டில் சரித்திரப் பிரசித்தி பெற்ற மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் மஹோற்சவ காலத்திலேயே இங்கும் மஹாற்சவம் நடைபெற்று அங்கு நடைபெறும் தேர்த்திருவிழா அன்று இங்கும் ஆறுமுக வேலழகர் திருவீதி வலம் வருவார் என்பது குறிப்பிடத்தக்கது. அழகாக அலங்கரிக்கப்பட்ட தேரிலே பக்தர்களின் பஐனைப் பாடல்களுடன் அடியார்களின் அரோகரா கோஷத்துடன் நாதஸ்வர மேழ இசை முழங்க எம் பெருமான் தேர் ஏறி பவனி புறப்படும் காட்சி காணும் பக்தர்களின் கண்களில் அனந்தக் கண்ணீர் பெருகுவதையும் பக்தி வெள்ளத்தில் அடியார்கள் மிதப்பதையும் காணலாம். கோவில் அமைந்த சூழலும் தெய்வ அருளும், ஒரு அழகு மயிலைத் தானகவே ஈர்த்து வந்துள்ளது. மழைமேகம் கண்டு ஆடும் மயில் இங்கு பக்தர்களைக் கண்டாலே தோகை விரித்து ஆடும். ஆடும்மயிலின், அற்புதம் காணவும், வேண்டுவோர்க்கு வேண்டும் வரமருளும் ஆறுமுகவேலழகரின் அருள்பெறவும் பக்;தர்கள் சூழ்ந்தவண்ணம் இருக்கும் இவ் அருள்ளாலயம் ஹம் நகரில் புகையிரத நிலையத்தில் இருந்து 5 நிமிட நடை தூரத்திலேயே அமைந்துள்து. ஸ்ரீ ஆறுமுகவேலழகன் அருள் வேண்டி இம்மைக்கும் மறு மைக்கும் பேரருள் சேர்ப்போமாக.

ஆலய முகவரி:

Murukan Hindu tempel e.V
Roon Str.2a- -- 59065 Hamm
Tel:02381/29103

Wednesday, February 20, 2008

பக்நாங் ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயம்



ஆலயம். ஆ! இந்த லயம்தான் எம் இதயத்தைக்கூட இதமாக இயங்க வைக்கிறது. இந்த லயத்தை அழகு என்றும் கொள்ளலாம், ஒழுங்கென்றும் ஒழுகலாம். உலகில் உறவுகள் எத்தனை இருந்தாலும் இனிய உறவு தாயுறவே.அழகிய உறவும் அதுதான். முதுமை எட்டாத புதுமை உறவு. எனவேதான் தெய்வதரி சனங்களிலும் அப்பாள் தரிசனம் ஒரு தாயும் சேயும் சந்திக்கும் ஒரு இன்ப தரிசனத்திற்கு ஒப்பாகிறது.பக்நாங் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயம் அடியவர்கள் கேட்கும் நல்வரங்களை நல்கி பக்தர்கள் உள்ளத்தில் ஆட்சி புரிகின்றாள் மீனாட்சியாக.இந்த ஆலயம் 1994ம் ஆண்டு பங்குனி உத்தரத்தில் சிவாய சுப்பிரமணிய சுவாமிகளது ஆசியுடன் ஆரம்பிக்கப் பட்டது. யேர்மனி நாட்டில் சுற்காட் நகரில் பக்நாங் கிராமத்தில் அமைந்தள்ளது.81 பெரும் தெரிவில் ஸ்ருட்காட்டை நோக்கிச் செல்கையில். அல்லது கல்புறோன் நோக்கிச் செல்கையில் 13வது வெளியேற்றுப் பாதையில் இறக்கி 16கி.மீ வரை செல்ல, அம்பாள் காட்சி தருவாள். போகும் பாதை இருமருங்கிலும் களனிகள். கிராமத்தின் வனப்புள் சென்று, அம்பாளின் வதனத்ததைத் தரிக்கலாம். அம்மனுக்குரிய விஷேட தினங்கள் முறையாக பூஜிக்கப்படுகின்றன. வருடம் தோறும் கௌரிக்காப்பு விரதம் மிகவும் அற்புதமாக நடைபெற்றுவருகின்றது.பக்தர்கள் மெய்மறந்து வணங்குவதும், ஆனந்தக் கண்ணீர் பொழிவதும், பக்தர்களின் வேண்டுதலுக்கு அருள் கொடுக்கும், அம்மனின் தரிசனத்தை பெற்றதாகவே கொள்ளவேண்டும்.அம்பாள் அலங்கரியாக,அகம்பாவம் ஒழித்து, பூமணம் கமழ அழகுத்தேவதையாக, அருள் வடிவாக உள் வீதியை வலம் வரும்போது உள்ளம் மெய்மறக்கும். எங்கள் தேவைகளை தாயிடம் முறையிடுவதுபோல் இந்தத்தாயிடம் கேட்டு வந்தால், நின்மதி கிட்டும.; ஆனந்தப்பெருவாழ்வு மலரும்.

Sri Meenadchi Temple e.v

Eberhard Str.8

71522 Backnang Germany

Tel:07191/88627-Handy:0179 799 6052

Saturday, February 9, 2008

வள்ளி தேவா சேனா சமேத ஸ்ரீ சிவசுப்பிமணியர் ஆலயம் Essan




தமிழ் ஈழ மக்கள் புலம் பெயர்ந்து வாழுகின்ற நாடுகளில் எல்லாம் தமது மொழி, கலை, கலாச்சாரம் ஆலய வழிபாடு என்பவற்றை மறவாது கண்ணும் கருத்துமாகப் பேணிவருகிறார்கள். Nஐர்மனி எஸசன் நகர் வாழ் இந்து மக்களின் பெரு முயர்ச்சியால் 1989 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இவ் ஆலயத்தில் வாரம் தோறும் வெள்ளிக் கிழமைகளில் மாலை 18.30 அபிசேகத்துடன் ஆரம்பிக்கப்பட்டு 19.00 மணிக்கு பூiஐ நடைபெறுவதுடன் அடியார்களின் தரிசனத்திற்காக இரவு 21.00 மணிவரை ஆலயம் திறந்திருக்கிறது.
இங்கு ஸ்கந்த ஷஷ்டி மிகவும் சிறப்பாக அனுஷ்டிக்கப் படுகிறது. மற்றும் நவராத்திரி, திருவம்பாவை மற்றும் ஏனைய விரத பண்டிகை நாட்கள் என்பனவும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. மூல மூhத்தி யாக 1993ம் ஆண்டு பிரதிஸ்டை செய்யப்பட்ட ஞானசக்தி வேலனுடன் காட்சி தரும் எம் பெருமானின் கும்பாபிசேக தினமான வைகாசி மாத திருவாதிரை நட்சத்திரத்தில் அஷ்டோத்தர சத சங்காபிசேகமும் விசேடமாகக் கொண்டாடப்பட்டு வருவது அறிய முடிகிறது.
இவ் ஆலயம் எஸன் புகையிரத நிலையத்திலிருந்து 15 நிமிட நடைதூரத்திலும், 40ம் இலக்க நெடும்சாலையில் (குசடைநனெழசக) வெளியேறும் பாதையிலிருந்து 1500 மீற்றர் தூரத்திலும் உள்ளது.
ஆலய விலாசம்:- GoldSchmidt Str 5, 45127 Essan.
தொலைபேசி :- 0201 248 74 79

சீசெல்சு அருள்மிகு நவசக்தி விநாயகர் ஆலயம்

Image Hosted by ImageShack.us

Image Hosted by ImageShack.us


Image Hosted by ImageShack.us


இந்து சமுத்திரத்தில் சிதறிய முத்துக்கள், விஷஜந்துக்களே இல்லாத சீசெல்சு, திருவோடு காய்கின்ற தெய்வீக நாடு, எந்த விதமான குழப்பமோ சல சலப்போ இன்றி உலகளாவிய பாராட்டை பெற்று எந்த நாட்டிலும் இல்லா ஒழுங்கு கட்டுப்பாட்டுடன் அமைதிப் பூங்காவாக வாக விளங்கும் நாடு, இன மத வேறுபாடின்றி மக்கள் புரிந்துணர்வுடன் வாழும் நாடு, இந் நாட்டில் கிட்டத்தட்ட 4000 இந்து சமய மக்கள் இருக்கிறார்கள. இங்கு 1984ம் ஆண்டு ஆனி மாதம் 24ம் நாள் பஞ்சலோகத்தினால் விநாயகர்,நடராசர் விக்கிரகங்கள் பிரதிஸ்டை செய்யப்பட்டு, ஞாயிற்றுக்கிழமைகளில் அபிசேகத்துடன் பூiஐகள் நடைபெற்று வந்தன. பின் அங்குள்ள இந்து மக்களால் ஆலயத்திற்கென வாங்கிய நிலத்தில் மண்டபம் அமைத்து விக்கிரகங்கள் பிரதிஸ்டை பண்ண பெற்று 1992ம் ஆன்டு வைகாசி மாதத்தில் குடமுழுக்கு நடாத்தப்பட்டது. இங்கு எல்லா இந்து சமயவிழக்களும் கொண்டாடப்படுகின்றன. விநாயகர் சதுர்த்தி விசேடமாகக் கொண்டாடப் படுகிறது. இவ் ஆலயத்தில் அண்மையில் கும்பாபிசேகம் கோலாகலமாக நடைபெற்றது.
சீசெல்சு தமிழ் குடும்பத்துச் சிறுவர்களின் தமிழ் கல்வி வளர்ச்சிக்கும் அங்கு வாழும் இந்து சமய மக்களின் கலை, கலாச்சார, சமயரீதியாகவும் அதன் வளர்ச்சிக்காகவும் பெரிதும் ஆர்வம் காட்டுபவர் திரு விஜயரத்தினம் சிவசுப்பிரமணியம் அவர்கள். இவர் முன்பு யாழ்பாணம் இந்துக்கல்லூரியிலும், அளவெட்டி அருணோதயா கல்லூரியிலும் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். இவர் எழுதிய சீசெல்ஸ்சின் பத்தாண்டு வளர்ச்சி என்னும் நூலில் அன்னாட்டைப்பற்றிய முழு விபரங்களையும் காணலாம்.

Saturday, February 2, 2008

ஜேர்மனி ஹம் காமாட்சி அம்பாள்

Image Hosted by ImageShack.us

Image Hosted by ImageShack.us

Image Hosted by ImageShack.us



காஞ்சியிலே ஒரு காமாட்சி ஜேர்மனி ஹம் நகரிலும் ஓர் காமாட்சி
ஜேர்மனியில் ஹம் (hamm) நகரிலே தேவியின் திருவருளாலும் 'பக்குவத்திருமணி" சிவஸ்ரீ இரேவணசித்த பாஸ்கரக்குருக்களின் பெருமுயர்ச்சியாலும், பக்தர்களின் ஒத்துழைப்பாலும் 1989ம் ஆண்டு அன்னை ஸ்ரீ காமாட்சி அம்பாளுக்கு மிகச் சிறிதாக ஓர் ஆலயம் அமைக்கப்பட்டது. தற்போது ஆலய ஆதீனகர்த்தா கமாட்சி அம்பாளுக்கு சொந்தமாக 4500 சதுர மீட்டர் நிலத்தை வாங்கி அதில் தேவிக்கு 27ஒ27 மீட்டரில் மிகப் பெரிய செலவில் எங்கள் தாய்நாட்டு ஆலயங்கள் போல நிறுவியுள்ளார். இதன் முன் வாயில் இராய கோபுரம் 17 மீட்டர் உயரமும், அம்பிகையினுடைய விமானம் 11 மீட்டர் உயரமும் உள்ளதாக அமைக்கப் பெற்று ஆலயம் அழகாகத் தோற்றமளிக்கிறது.
ஆலயத்தில் மேலும் விநாயகர், சிவலிங்கம், முருகப்பெருமான், ஸ்ரீ மகாவிஷ்ணு, சோம ஸ்கந்தர், ஐயப்பன், நவக்கிரகங்கள், பைரவர், சண்டிகேஸ்வரர், போன்ற தெய்வங்களுக்கும் தனித்தனி யாகச் சன்னிதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ் ஆலயத்தில் நம் தாய் நாட்டிலுள்ள ஆலயங்களில் நடைபெறும் விசேடபூஜைகள் அனைத்தும் இங்கும் நடைபெறுகின்றன. மஹோற்சவம் நடைபெறும் நாட்களில் மக்கள் வெள்ளம் அலை பாயும். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் உள் நாட்டிலும் பல வெளிநாடுகளிலிருந்தும் காமாட்சி அம்பிகையின் அருளைப்பெறக் கூடுகிறாhகள். Nஐர்மனியில் முதல் முதலாக இவ்வாலயத்தில் தான் அருள் வேண்டிக் காத்திருக்கும் பக்தர்களுக்காக கமாட்சி அம்பாள் தெரு வீதியுலா வந்ததும், தேர் வீதியுலாவந்ததும், சொந்தத்தில் நிலம் வாங்கி ஆலயம் அமைத்ததும் ஹம் காமாட்சி அம்பாள் ஆலயத்தையே சாரும். தினமும் மூன்று காலப் பூiஐகளும் ஆலயம் வரும் அடியவர்க்கு அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது.
Nஐர்மன் நாட்டில் பல நகரங்களிலிருந்தும் பல வெளி நாடுகளிலிருந்தும் தங்கள் திருமணவிழாக்களை வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் அருளும் ஹம் காமாட்சி அம்பாள் கலியாண மண்டபத்திலேதான் நடாத்த விரும்புவதாக வேண்டுதலுடன் வந்து வசதியாக அமைக்கப்பெற்ற கலியாணமண்டபத்தில் திருமண விழாக்களை நடாத்துகிறார்கள். அதற்கு மெருகூட்ட தாயகத்திலிருந்து தருவித்த அழகான மணவறையுடன் போஷனவசதியும் இங்கு செய்துதருகிறார்கள்.
ஆலயம் ஹம் (ர்யஅஅ) புகையிரத நிலையத்திலிருந்து 10 கி.மீ தூரத்தில் அழகிய சிறு நதியுடன் இயற்கை வளங்கள் யாவும் பெற்ற ருநவெசழி என்னும் கிராமத்திலுள்ளது. ஹம் புகையிரத நி லையத்திலிருந்து ஆலயம் வரை அரசாங்க பேரூந்து சேவைகள் உண்டு. தம் சொந்த வாகனங்களில் வருபவர்கள் இலக்கம் 2 நெடும்சாலையில் டீநைடநகநடன 19 வது இலக்க வெளியேறும் பாதையில் 3 கி.மீ தூரத்தில் ருநவெசழி கிராமத்தில் உள்ளது அருள்மிகு காமாட்சி அம்பாள் ஆலயம்.

ஆலய முகவரி :- Hindu Shankara Sri Kamadchi Ampal Temple e.V
Siegenbeck Str 04-05,
59071 Hamm- Uentrop
தொலைபேசி:- 02388 30 22 23 தொலைநகல் :- 023 88 30 22 24

அருகின் பெருமை

யமனின் மகனாகிய அனலாசுரன் அனைவரையும் விழுங்கி ஆரவாரித்தான். இதைக் கண்டு அஞ்சிய முனிவர்கள், விநாயகப் பெருமானை வேண்டிக் கொண்டனர். விநாயகர் விசுவரூபமெடுத்து அவனை விழுங்கினார்.
விநாயகரின் வயிற்றிலிருந்த அனலாசுரனின் வெப்பம் அனைவரையும் பொசுக்கியது. அக்னி பகவானே அருகில் வர அஞ்சினான். அனைவரும் பால், தண்ணீர், பன்னீர், சந்தனம் போன்றவற்றினால் விநாயகருக்கு அபிஷேகம் செய்யத் தொடங்கினர். இவற்றால் ஒரு பயனும் ஏற்படவில்லை.
அச்சமயத்தில் சில முனிவர்கள், இருபத்தோரு அருகம் புற்களால் கணபதியை அர்ச்சித்தனர். முதல் அருகு பட்டதுமே தணியத் தொடங்கிய வெப்பம், முனிவர்கள் யாவரும் அர்ச்சித்து முடித்தபோது முழுமையாக அகன்றது.
உடனே தேவர்களை நோக்கி விநாயகர், "உங்களது அனைவரின் உபசாரங்களையும்விட உயர்வானது அருகம் புல்லால் செய்யப்படும் அர்ச்சனை. பல வித பூக்கள், பத்ரங்களால் (இலை) எனக்கு அர்ச்சனை செய்தாலும் அருகும், வன்னியுமே எனக்கு மிகவும் பிடித்தமானவை' என்று கூறினார். அப்பொழுது முதல், விநாயகர் வழிபாட்டில் அருகுக்கு முக்கிய இடம் வந்தது.

கண்ணில் சிறந்த உறுப்பில்லை

கண்ணில் சிறந்த உறுப்பில்லை
கலாநிதி சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி


'எண்சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம்" என்பது அன்றோர் வாக்கு. 'கண்ணில் சிறந்த உறுப்பில்லை யாவதும் காட்டியதே" என்பதை தஞ்சை வாணன் கோவை. 'சமஸ்கிருத மொழியிலும், ஸர்யவஸ்ய காத் ரஸ்ய சிரஸ்ப்ரதாநம், ஸ்ர்வேந்திரியானாம் நயநம் ப்ரநாதம்" என்று இக் கருத்தே கூறப்படுகிறது. மக்களின் உடம்பிலுள்ள கருவிகளை இரண்டு வகையாகப் பிரிப்பர். ஒன்று அறிவுக்கருவி, மற்றொன்று தொழிற்கருவி, அறிவுக்கருவிகள் ஐந்து. தொழிற் கருவிகள் ஐந்து. ஊற்றுணர்வுள்ள உடம்பு, சுவையு ணர்வுள்ள நாக்கு, ஒளியுணர்வுள்ள கண் நாற்ற உணர்வுள்ள மூக்கு, ஒலியுணர்வுள்ள காது எனும் அறி வுக்கருவிகளான ஐம் பொறிகளும், அவற்றை உணர்ந்து செயற்படுத்தும் மூளையும் தலையில் இருக்கும் காரணம் பற்றியே ' எண்சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம்" என்றனர்.

இவ் ஐம்பெறிகளுள்ளும் கண் சிறந்த இடம் வகிக்கிறது. காரணம் மற்றய பொறிகள் தன்னிடம் வருவனவற்றை அறிந்து மூளைக்கு உணர்த்துவன. ஆனால் கண் மட்டுமே தொலைவிலுள்ள பொருளை யும் சென்றறிந்து அதனை மூளைக்கு உணர்த்தும் திறனுடையது. கண்ணைத் தவிர மற்றய பொறிகள் நினஇறு பற்றுவன. குணஇ மட்டுமே சென்று பற்றும் சிறப்புடையது. இச் சிறப்புக் கருதியே 'கண்ணில் சிறந்த உறுப்பில்லை யாவதும் காட்டியதே!" என்று தஞ்சை வாணன் கோவையின் ஆசிரியர் பொய்யா மொழிப்புலவர் கூறினார்.

மன்னனே மக்களின் கண்:-

சேக்கிழாரும் மன்னனின் இலக்கணம் கூறவந்த இடத்து
'மண்ணில் வாழ்தரும் மன்னுயிர் கட்கெல்லாம்
கண்ணும் ஆவியும் ஆம்பெருங் காவலன்"
என்று மொழிகின்றார். மன்னனானவன் தன் நாட்டில் வாழும் உயிர்கட்கெல்லாம் உயிராக வாழ்பவன். தன்னிடம் குறைவேண்டியும், முறைவேண்டியும் வருவோர்க்கு ஆவன செய்வதோடல்லாது தானே பல இடங்களுக்கும் சென்று குறைகளையும், முறைகளையும் கண்டும் கேட்டும் அறிந்து அதற்குத் தக்க தீர் வு செய்யும் கட்டுப்பாடுடையவன் என்பது கருத்தாகும். உயிர் நின்று பற்றுவது, கண் சென்று பற்றுவது, மன்னன் உயிராக இருந்து ஒற்றர் வழி அறிந்துமூளையைப்போல் நின்றும் நீதி வழங்க வேண்டும். கண்ணாக இருந்து சென்று நீதி வழங்க வேண்டும் எனும் உட்கருத்தில் தான் சேக்கிழார் பெருமான் 'கண்ணும் ஆவியும் ஆம்பெரும் காவலன்" என்றருளிச் செய்கின்றார்.

இன்ப துன்பத்தை காட்டுவது கண்:-

மேலும் கண்ணிற்குப் பல சிறப்புக்கள் உண்டு. அறிதற் கருவியாக விளங்கும் கண் அறிவுக் கருவிகளிலும் தொழிற் கருவிகளாகிய கை, கால், வாக்கு, எருவாய், கருவாய் எனும் உடலுறுப்புக்களி லும் ஏதாவது நன்றோ தீதோ திகழுமாயின் அதனைப் புலப்படுத்துகின்ற நிலையில் இன்ப துன்பக் கண்ணீர் வடிப்பதும் அக் கண்ணின் சிறப்பாகும். மனிதனின் உள்ளத்திற்குள் நிகழும் மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் கருவியாக இலங்கும் சிறப்புடையது கண். ஒரு செயலை ஏற்று இசைவுதருவதும் புறக்கணிப்பதும் கண்ணின் புலப்பாட்டிலேயே அறிந்து கொள்ள இயலும். அத்தகைய சிறப்புடைய கண் திருடனைக் காட்டிக் கொடுக்கவும் ஒழுக்கம் இல்லாதவனை உலகுக்கு உணர்த்தவும் உரிய கருவியாக விளங்குகின்றது.

கற்பினைக் காட்டுவது கண் :-

இதனால்தான் சீதாபிராட்டியின் கற்புத்திறனை இராமபிரானுடன் கூறிவந்த அனுமான் ' கண்டனன் கற்பினுக் கணியைக் கண்களால்" என்று விளக்குகின்றான். சீதை உயிரோடுதான் இருக்கின்றார் பிறர் கூறக் கேட்டு வரவில்லை. நானே என் கண்களால் கண்டுவந்தேன். என்று அனுமான் கூறுகின்றார். என்பதாகப் பொருள் கூறலாம். ஆனால் அம்மையார் கற்போடுதான் இருக்கிறார் என்பதை எங்ஙனம் கூற முடியும் என்பதற்கு விளக்கம் கூறவே இத்தொடருக்கு இன்னும் ஆழமாகச் சிந்தித்துப் பொருள் விளக்கம் காணுதல் அவசியமாகின்றது. 'கண்டனன்" என்பதற்கு அனுமன் தான் தன் கண்களால் பார்த் தேன் என்ற பொருளும் பின்னே உள்ள கண்களால் பார்த்தேன் என்ற பொருளும் பின்னே உள்ள கண்களால் என்னும் சொல்லிற்குச் சீதையின் கண்களால் கற்பினுக் கணியாக இருப்பதைப் பார்த்தே ன் என்னும் பொருளும் கொள்ளுதல் ஒருவகை. மேலும் அனுமன் கண்களால் சீதாபிராட்டியை கண்டன ன் என்றும், சீதாபிராட்டியின் கண்களால் அவரது கற்புநெறி பிறளாது அணியாகத் திகழ்வதைக் கண்டனன் என்றும் கொள்ளுதல் சிறப்பாகும்.

எனவே கண்ணானது மற்றப் பொருள்களை அறிந்து மூளைக்கு உணர்த்துவதோடல்லாது கண்களையுடைய மனிதனின் உள்ள உணர்ச்சிகளைச் சமுதாயத்திற்கு உணர்த்தும் உயர் கருவியாக வும் விளங்குகின்றது.

காக்கவேண்டிய சிறப்பினது கண் :-

இத்தகைய சிறப்புக்கள் பலவுடைய கண்களைக் காண்பதற்கு இறைவனே தக்க பாதுகாப்பு கொடு த்திருக்கின்றார். கண்ணை இமை காப்பது போல் என்று உலகோர் கூறுவதும் ஈண்டு நினைவு கூரத்தக் கது. காக்கும் இமையை கொடுத்துக் காத்துக் கொள் என்று ஆண்டவனே அறிவுறுத்தியுள்ள கண்ணை இன்று பலர் பல காரணங்களினால் கெடுத்துக் கொள்கிறார்கள்.

கண்கெடுவதற்குரிய காரணங்கள் பலவாகும். பொதுவாக மனித வாழ்வில் ஒழுங்கு நெறிமுறைகள் கெடுமானால் அவை கண்களைப் பாதிக்கும். குறிப்பாக ஒழுக்கக் கேட்டினாலும், பொய் சொல்லுவதாலும், கோவப்படுவதாலும், திரைப்படம் தொலைக்காட்சி பார்ப்பதனாலும் கண் கெடும். மற்ற க் காரணங்கள் தெளிவாக விளங்கினாலும் பொய் சொல்வதினால் கண் பாதிக்கும் என்பது பலருக்குப் பரிவதில்லை. பொய் சொல்லுகின்ற போது அவனது மனம் அவனை உறுத்துகின்றது. அதனால் உடம்பிலுள்ள நரம்புகள் பாதிக்கப்படுகின்றன. இவ் வகையில் கண் கெடுகின்றது.

சுந்தரர் வாழ்வில் கண் :-

பொச்சாட்சி சொன்னவர்களுக்கும் கண் தெரியாமல் போய்விடும். ஏனெனின்; 'சாட்சி" என்றாலேயே கண்ணால் கண்டதை கூறுதல் என்பது பொருளாகும். “சட்சு” என்னும் சொல்லுக்குக் கண் என்பது பொ ருளாகும். அதன் அடிப்படையில் வந்ததே “சாட்சி” என்னும் சொல். ஆதலின் சாட்சி சொல்லும் பொழுது தன் கண்களால் காணாத ஒன்றைக் கூறுவானேயானால் இது அவனது மனத்தை உறுத்திப் பின்னே தண்டனைக் குரியதாகிப் கண்களைப் பாதிக்கும். சபதம் பொயத்தாலும் கண் கெடும் என்பதற்கு நாம் ஆசாரிய மூhத்தியாகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருள் வரலாற்றை இவ் வகையில் எடுத்துக் கொள்ள லாம். இது தவறுடையது எனினும் வாழ்விய நெறிமுறைகளை விளக்கிக் கொள்வதற்கும் கடவுளின் நடுநிலைத் தன்மையைப் புரிந்து கொள்வதற்கும் பயன்படும் என்ற வகையில் அடக்கத்தோடும் அச்சத் தோடும் அவ்வரலாற்றை சிந்திக்கலாம்.

எறும்புக்குக் கண் இல்லை :-

இதுவரை சிந்தித்த கருத்துக்களால் கண் கெடுவதற்குரிய காரணங்களை எண்ணியது போல இனிக் கண்ணைப் பாதுகாத்தற்குரிய சில வழிமுறைகளையும் சிந்திப்போம். கண் நன்கு தெரிவதற்குப் பொதுவாகக் கீரை வகைகளைக் குறிப்பாக முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளுதல் நல்லது. மேலும் அறநோக்குப்படி பார்த்தால் கண்பார்வை இல்லாத ஜீவராசிகளுக்கு உணவு அளித்தலும் கண்ணைக் காப்பாற்றும். உலக உயிர்களில் கண்பார்வையில்லாத உயிர் எறும்பாகும். தோல்காப்பியர் ஓரறிவுயிர், ஈரறிவுயிர் என்பது பற்றி ஒரு நூற்பாக் கூறுகின்றார்.

எறும்பு தின்றால் கண் தெரியும் :-

இத்தகைய கண் பார்வையில்லாத உயிருக்கு நெல் முதலிய தானியங்களைப் புற்றில் இடுதலும், வீடுகளின் முன்னர் அரிசி மாக்கோலம் போடுதலும், காரணமாக உணவுதரும் அறச்செயல்கள் நாட்டில் தொன்று தொட்டு நடைபெறுகின்றன. அரிசி மாக்கோலம் போடும் நிலையில் இப்பொழுது மாறுதலாகக் கல்லாலான மாவைக் கொண்டு கோலம் போடுகின்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.அறத்தின் நோக்கத்திற்கே புறம்பானது ஆகும்.

இங்ஙனம் எறும்பு போன்ற கண்பார்வை இல்லாத உயிரினங்களக்கு உணவை இட்டால் கண்பார் வை நன்கு தெரியும் எனும் பொருளில் தான் உலக வழக்கில் 'எறும்பு தின்றால் கண் தெரியும்" என் னும் பழமொழி வழங்கி வருகிறது. ஆனால் இப் பழமொழியன் உண்மைப் பொருள் அறியாத சிலர் உணவுப் பண்டங்களில் எறும்பு இருந்தால் 'பரவாயில்லை சாப்பிடுங்கள் கண் தெரியும்" என்று மாற்றுப் பொருள் கூறி வருகின்றனர். இது தவறு. எறும்பு தின்றால் கண் தெரியும் என்றால் எறும்பு நாம் போடும் உணவைத் தின்றால் நமக்குக் கண் தெரியும் என்ற பொருளே தவிர எறும்பையே தின்றால் தின்பவருக் கு கண் தெரியும் என்பது பொருளில்லை. பழமொழிகளை விழங்கக் கற்றுக் கொண்ட மக்கள் அவற்றின் உண்மைப் பொருளையும் புரிந்து கொள்ளுதல் அவசியம்.

முருகன்

இறைவன் ஞான வடிவினன். ஞான பண்டிதன் சக்தியின் துணைகொண்டு உலகைப் படைத்துக் காத்து ரட்சிக்கின்றான். அதைவிளக்கும் சொருபமே முருகன். முருகன் ஞான சொருபம். வள்ளி இச்சா சக்தி (விருப்பம், ஆசை). தெய்வானை கி¡¢யா சக்தி (செயலாற்றல்). வள்ளித் திருமணத்தில் சிறந்த தத்துவம் அடங்கியுள்ளது. இறைவன் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவன். இறைவன் சாதி வித்தியாசங்களைப் பார்ப்பதில்லை. ஆகவே இந்து சமயம் சாதி வித்தியாசக் கொள்கையை ஆதா¢க்கவில்லை என்பதை வள்ளித்திருமணம் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. மேலும் வள்ளித்திருமணம் வள்ளியாகிய சீவன், போ¢ன்பமாகிய சிவத்துடன் கலப்பதை விளக்குகிறது.

முருகனுக்கு வேல் ஆயுதமாக உருவகிக்கப்பட்டிருக்கிறது. வேல் வெற்றிக்கும், அறிவுக்கும் அடையாளமாகத் திகழ்கிறது. வேல் நடுவில் அகன்றும், உருவில் நீண்டும், முனையில் கூர்மையாகவும் இருக்கிறது. இதுபோல் இக பர வாழ்வில் மனிதன் சிறந்தோங்க அகன்ற, ஆழ்ந்த, கூர்மையான அறிவுடையவனாக இருக்க வேண்டும். அவ்வறிவைத் தருபவன் .. வாலறிவனாகிய .. இறைவனே.

இதையே திருவள்ளுவர் ..

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

... என்கிறார்.

முருகன் கையில் இருக்கின்ற வேல் அவனை நம்பி வணங்குகின்றவர்களுக்கு அறிவையும் ஆற்றலையும் அளித்து அவர்களின் பகைவர்களையும் அழித்து அருள்பு¡¢யும்.

கூவுகின்ற கோழி நாத வடிவானது. கோழிக்கொடி வெற்றியின் சின்னமாக விளங்குகின்றது. அழகிய மயிலின்மிசை வீற்றிருக்கின்றான் முருகன். மயில் மனத்தின் சின்னம். பா¢சுத்தமான, அழகான உள்ளம்தான் இறைவனின் உண்மையான கோயில் என்பதனை மயில் வாகனம் விளக்குகிறது. பாம்பின் மீது மயில் நிற்பது முருகன் எல்லா சக்திகளையும் ஆட்சி செய்கின்றான் என்பதைக் காட்டுகிறது.

தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் தயாபரன் முருகன். ஆகவே அவனை வைத்தியநாதன் என்றும் வாழ்த்துகின்றோம். கிடைக்காத பொருட்களையும், பேறுகளையும் வேண்டும் பக்தர்களுக்கு வழங்குகின்றவனாதலால் வரதராசன் என்றும் பெயர் பெற்றவன் முருகன்.

முருகன் மூன்று அசுரர்களை அழிக்கின்றார் என்று கந்த புராணத்தில் கூறப்படுகின்றது. மனிதனின் மனத்தை வாட்டுகின்ற ஆணவம், மலம், மாயை .. எனப்படும் மூன்று மலங்களே அந்த அசுரர்கள். நமது மனதிலே தோன்றி, நம்முடைய மனதிலே இருக்கின்ற நல்ல எண்ணங்களை வளர்த்து, தீய எண்ணங்களை வென்று, சிறப்பாக வாழ முயற்சிக்கின்றான். அதற்காக இறைவனை வணங்குகின்றான். கந்தர் சஷ்டி விரதம் அனுஷ்டிப்பதும் மனதைக் கட்டுப்படுத்தி நல்ல குணங்களை வளர்த்துக்கொள்ளும் பொருட்டே.

முருகனின் சிறப்புக்களை புகழ்ந்து பாடி அவனருளைப்பெற அருணகி¡¢நாதர் அருளிய திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரனுபூதி, நக்கீரர் அருளிய திருமுருகாற்றுப்படை .. முதலிய பாடல்களில் சிலவற்றையாவது பாராயணம் செய்தல் நலந்தரும்.

ஆறுதலை முருகன் ஆறுதலைத் தருவான்.

'ஓம் ஷாந்தி ஓம் ஷாந்தி ஓம் ஷாந்தி"

'ஓம் ஷாந்தி ஓம் ஷாந்தி ஓம் ஷாந்தி"
ஓம் அமைதி || ஓம் அமைதி || ஓம் அமைதி

ஒவ்வொரு மறைப்பாட்டின் முடிவிலும் "ஓம் ஷாந்தி" என்று மூன்றுமுறை இந்தப் பண் பாடப்படுவது - மனிதனை மூன்று ஆபத்திலிருந்து காக்கவே அவையாவன:-

1. அதியாத்மா" - எனும் "தன்னால் உருவாக்கப்பட்ட ஆபத்து
2. அதிபௌதிகம்" - எனும் இயற்கையால் ஏற்படுத்தப்பட்ட கெடுதல்
3. அதிதெய்வீகம்" - எனும் கடவுள்களாலும் தேவதைகளாலும் ஏற்படுத்தப்பட்ட ஆபத்து

இம்மூன்று ஆபத்துகளிலிருந்தும் நாம் காப்பாற்றப்பட்டு இவைகளில் சிக்காமல் தாண்டிப்போய் 'பரப்ப்ரம்ம" நிலை எனும் முழுமுதற்கடவுளிடம் ஒன்றிவிட வேண்டும் என்ற குறிக்கோளைக் கருதி வேண்டப்படுகிறது.

இறைவன் 'சொல்லற் கரியான்" சொல்லுவதற்கும் 'அறியான்"

சிவபுராணத்தில் மணிவாசகப் பெருந்தகை முடிக்கும்போது சிவபெருமானுக்கு '' சொல்லற்கு அரியானை '' என்று ஒரு அடைமொழி அளிக்கிறார்கள். இதற்கு சொற்களால் வருணித்து கூற இயலாதவன் என்று பொருள். சிறிய ' ரி ' க்கு பதிலாக பெரிய ' றி ' போட்டால் பொருள் மாறிவிடும், '' சொல்லவதற்கு அறியான் 'என்றாகி விடும் இதற்கு" சொல்லுவதற்கு தெரியாதவன்" என்று பொருள் வரும். எல்லாம் அறிந்த பரம் பொருளுக்கு சொல்லத் தெரியாது என்று சொல்லலாமா எனக் கேட்டால் அப்படியும் சொல்லலாம் என்றே தோன்றுகிறது. அவருக்கு 'இல்லை"எனச் சொல்லத் தெரியாது. கேட்டவர்க்கு கேட்டபடி இல்லை எனச் சொல்லாமல் வாரி வழங்குபவன் இறைவன், அந்த வகையில் அவன் சொல்லத் தெரியாதவனே.

தாய்

தாய்


இந்த உலகில் எந்தவொரு உயிரினத்தை எடுத்துக் கொண்டாலும் ஆண், பெண் என இரண்டு வகை இருக்கும். ஆண், பெண் இருவருக்கும் ஒவ்வொரு காரியத்திலும் சமமான பொறுப்பு இருந்தாலும் தாயைப் பற்றித்தான் (பெண் இனத்தைத்தான்) அதிகமாக, விசேஷமாக, கௌரவமாக எல்லா அறநூல்களிலும் சொல்லப்படுகிறது. (நம்முடைய அறநூலான வேதத்தை எடுத்துக் கொண்டால் "வேத மாதா" என்றுதான் அதை நாம் கூறுகிறோம். அந்த வேதத்திலும் பல உபதேசங்கள் அருளியிருந்தாலும், முதன் முதலில் 'மாத்ருதேவோ பவ' என்று மாதாவை முதன்மையாகச் சொல்லிவிட்டு, அடுத்ததாகத்தான் 'பித்ரு தேவோ பவ' என்று தகப்பனாரைச் சொல்லுகிறது, தேவாரப்பாடல்களிலும் இறைவனைப்பற்றிப் பாடும் போது. அம்மையே. அப்பா. ஒப்பிலா மணியே என்று முதன்முதலில் அம்மாவைத்தான் குறிப்பிடுகிறது, அன்னையும். பிதாவும் முன்னறி தெய்வம் என்று அன்னையைத் தான் முதலில் குறிப்பிடுகிறது, 'தாயிற் சிறந்த தயாபரத் தத்துவனே' என்று சிவ புராணம் கூறுகிறது, தாயுமானவராக இறைவன் திருச்சியில் விளங்குகிறார்.

ஆணையிடும் போது கூடச் சிலர் தாயின் மேல் ஆணை என்றுதான் கூறுவார்கள், கெட்ட பிள்ளை இருப்பான், கெட்ட தாய் ஒரு நாளும் இருக்க மாட்டாள் என்பது பழமொழி, ராமர் காட்டுக்குப் போகும் போது தாயான கௌஸல்யை முதலியவர்களிடம் ஆசீர்வாதம் பெற்றுச் சென்றதாக வரலாறு, மகாபாரத்தைத் தொடங்கும் போது துரியோதனன் தன் தாயான காந்தாரியிடம் ஆசி பெற்று சென்றதாகவும் வரலாறு. பொதுவாக வீரர்கள் யுத்தத்திற்குச் செல்லும் போது ஆண்களுக்கு பெண்கள்தான் வீரத் திலகமிட்டு அனுப்புவார்கள். பெண் குழந்தையைத் தான் நாம் கன்னிகா பூஜை என்று பூஜை செய்கிறோம், வயதான பிறகு சுவாசினி பூஜை என்ற இல்லறத் தாயக்குத்தான் பூஜை செய்கிறோம், இந்து மதத்தில் புருஷர்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் பூர்த்தி அடைய வேண்டும் என்றால் கடைசியாக இல்லத்தரசிகள் ஜலத்தைப் புருஷன் கையில் விட்டால்தான் பூர்த்தியடைகிறது.

இந்தக் காலத்தில்தான் ஆண். பெண் இருவரும் சம்பாதிக்கிறார்கள் கொஞ்ச காலம் முன்பு வரை ஆண்கள் சம்பாதிப்பதற்கு மாத்திரம் உரிமையுள்ளவராகக், சம்பாதிக்கும் பணத்தை இல்லத்தரசிகளிடம் கொடுத்து அவர்கள் மூலமாகத்தான் வாழ்க்கைக்குத் தேவையான அவ்வளவும் வரவு. செலவு செய்யப்பட்டன. வீட்டிலுள்ள புருஷன் எவ்வளவோ தவறான வழிகளில் சென்றாலும், இல்லத்தரசிகள் பொறுமையுடன் இருந்து தங்களுக்கு என்று சொந்த எண்ணங்கள், ஆசைகள் இருந்தாலும் அவைகளைக் காட்டிலும் தன்னுடைய கணவனுடைய வாழ்க்கையே பெரிதென மதித்துக் கணவனை நல்வழிப்படுத்துவதில், கணவனைத் திருப்தி செய்விப்பதில். பல பெண்மணிகள் எடுத்துக்காட்டாக இருந்தார்கள்.

சைவ சமயத்தைச் சேர்ந்த அப்பர் பெருமான். ஒரு சமயத்தில் சமண சமயத்தைச் சார்ந்த பொழுது, திரும்பவும் தங்களுடைய சொந்த சமயமான சைவ சமயத்திற்கு அப்பர் பெருமானைக் கொண்டு வருவதற்காக இறைவனிடம் பலவித

பிரார்த்தனைகளெல்லாம் செய்து- தவமிருந்து சோதனைகள் எல்லாம் கடந்து, தம்முடைய சொந்தச் சகோதரரான அப்பர் பெருமானைச் சைவ சமயத்திற்குத் திருப்பிய பெருமை, அவரது சகோதரியான திலகவதியாரையே சாரும்.

இதே போல் மதுரையில் கூன்பாண்டியன் சொந்த சமயமான சைவ சமயத்தை விட்டுச் சமண சமயத்திற்குச் சென்ற போது ரகசியமாகவும். பக்தியோடும் உறுதியோடும் தன் கணவனுக்காக இறைவனைப் பிரார்த்தனை செய்து, தவமிருந்து தன்னுடைய சொந்த சமயமான சைவ சமயத்திற்குத் திருப்பிக் கொண்டு வந்தது, கூன்பாண்டியனின் இல்லத்தரசியான மங்கயைர்க்கரசியாரே ஆகும்.

ஒரு சமயம் காரைக்கால் அம்மையாரிடம் அவரது கணவன் இரண்டு உயர்ந்த மாங்கனிகளைக் கொடுத்தனுப்ப அவைகளிலே ஒன்றை அம்மையார் வீட்டீற்கு வந்த விருந்தாளிக்குக் கொடுக்.க மற்றொரு கனியை. சாப்பிடும் சமயத்தில் தன் கணவனுக்குக் கொடுத்தாள். அந்த மாங்கனியின் சுவையை அனுபவித்த அவள் கணவன் மற்றோரு மாங்கனியையும் கேட்டான். அப்பொழுது காரைக்கால் அம்மையார் மிகவும் பயந்து போய்க் கணவன் கேட்பதைக் கொடுக்க முடியாமல் இருக்கிறதே என வருந்தி, எப்படியும் கணவனின் ஆசையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என இறைவனிடம் கெஞ்சிப் பிரார்த்தித்தாள். இறைவனும் காரைக்கால் அம்மையாருக்கு கணவனிடம் உள்ள பக்தியும், மரியாதையும், இறைவனிடமுள்ள நம்பிக்கையும் பார்த்துப் பூரித்து ஓர் மாங்கனியை அளித்தார். அந்த மாங்கைனியைப் பெற்ற காரைக்கால் அம்மையார். அதைக்கண்ணில் ஒற்றிக்கொண்டு இறைவனை வணங்கி. கணவனது இஷ்டத்தை மாங்கனி கொடுப்பது மூலம் நிறைவேற்றினாள்.

அப்பொழுது கணவன் "முன்பு சாப்பிட்ட பழத்தைக் காட்டிலும் இது வேறாகவும் அதிக ருசியுள்ளதாகவும் இருக்கிறதே. இது எப்படி வந்தது?" என்று கேட்டான். அப்பொழுது காரைக்கால் அம்மையார் "தாங்கள் அனுப்பிய பழத்தில் ஒன்றை விருந்தாளிக்குக் கொடுத்தேன். தாங்கள் மற்றுமொரு பழம் கேட்டதும் இறைவனிடம் பக்தி செய்து மனமுருகி இறைவன் மூலம் பெற்றேன். ஆகவே இது வேறு கனியாகவும், அதிக ருசியுள்ளதாகவும் இருக்கிறது" என உண்மை நிலையை விளக்கினார். இப்படிச் சின்னச் சின்ன விஷயங்களில் கூடக் கணவன் மனைவியரிடையே புரிந்து கொள்ளும் தன்மையும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் வரவேண்டும். மனைவி கணவனுக்காக எவ்வளவு பெரிய தியாகத்தையும் பக்தியையும், மன உறுதியையும் கொள்ள வேண்டும், உயர்ந்த தாய் ஸ்தானத்தில் பெண்மணிகள் அன்றும், இன்றும், என்றும் போற்றும் வகையிலே விளங்கி வருகிறார்கள்.

தோப்புக்கரணம்

ஒரு முறை கஜமுகாசுரன் என்பவன் தேவர்களை எல்லாம் அடக்கி ஆண்டு, அவர்கள் தன்னைக் கண்ட போதெல்லாம் தலையில் குட்டிக் கொண்டு தோப்புக் கரணம் போட வேண்டும் என்று வற்புறுத்தி வந்தான்.
அந்த கஜமுகாகரனை விநாயகர் வென்றதும் தேவர்கள் தங்கள் நன்றியைத் தெரிவிக்க, "நாங்களும் பெருமானாகிய தங்களைக் காணும் போதெல்லாம் இந்த இரு வழிபாடுகளையும் செய்கிறோம்; விருப்பத்துடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்' என்று வேண்டிக் கொண்டார்கள். அது முதல் அந்த வழிபாடுகள், விநாயகர் உகக்கும் வழிபாடாக ஆகின.

உலகப் பொதுமறையில் பக்தியுணர்வு

'தமிழுக்கும் அமுதென்று பேர்"…… இத்தொடரில், தமிழ், அமிழ்து இரண்டும் பெற்றுள்ள இடம் தெய்வீகத் தன்மை கொண்டது. பிறப்பு, வாழ்வு, இறப்பு என்பதை அனைத்து உயிர்களுமே உணர்கின்றன. பிறந்த உயிர்கள், உண்டு உயிர்த்து வாழ்ந்து மறைவதைத் தம் வாழ்வின் நோக்கமாகக் கொள்ளுதல் கூடாது. இறைவன், தன் சாயலாக, தன் படைப்பின் மேலான உயர்ந்த படைப்பாக மனிதனைப் படைத்தான். படைத்தவனானதன்னை உணரவேண்டும் என்பதே இறைவன் மனிதனைப் படைத்ததன் நோக்- கம். பிரபஞ்ச தோற்றங்களுக்குப் பின்னால் நித்தியமானதாக, அனைத்துயிர்களின் ஆன்மாவாக ஒரு மெய்- பொருள் உள்ளது. வெவ் வேறு வில்களுக்கு ஒரேகை போலதான் அம்மெய்பொருள். அதனை உணர்பவனே பக்திமான்.
தன்னைத் தானே சுயபரிசோதனை செய்து கொள்ள உதவும் முதல்படி பக்தி. பெறற்கரிய மானிடப் பிறவியைப் பெற்ற மனிதன் அடைந்துள்ள பெருமைகளுள் சிறப்பானது வணங்கும் தன்மை. தன்னை விட அனைத்திலும் மிக்கவரை வணங்கும் தன்மையுடைய மனிதன், தான் தோன்றியிருக்கும் உலகம், அதன் இயக்கம், அதில் நடைபெறும் சிறப்புக்கள் எல்லாவற்றிற்கும் தலைமையாக ஒரு பொருள் இருந்தல் வேண்டும் எனக்கருதி அதனைப் பேரன்புடன் வழிபடலானான். இப்படி, மனிதன் ஆற்றும் பணிகள் எல்லாம் அன்பினை அடிப்படையாகக் கொண்டுள்ளது எனலாம்.
'அன்பு" என்பதும் மூன்றெழுத்து, அதன் உச்சக்கட்டமான 'பக்தி" என்பதும் மூன்றெழுத்து. 'அன்பு" எனும் சொல் பல பொருள்களில் குறிப்பிடப்படுகிறது. தனக்குச் சமமாக உள்ளோரிடம் காட்டும் அன்பு, 'நட்பு" என்று கூறப்படுகிறது. ( நட்பு மார்க்கத்தில் தன் பக்தியை வெளிப்படுத்திய சுந்தரர் கதையைச் சான்றாகக் கொள்ளலாம். தமக்குக் கீழோரிடம் காட்டம் அன்பு 'இரக்கம்" அல்லது 'அருளுடமை" எனப்ப-டுகிறது. பெரியோர்களிடம் காட்டும் அன்பு 'பக்தி" ஆகிறது.
பெற்றோர் தம் மக்களிடம் காட்டும் அன்பு, 'பாசம்" எனப்படுகிறது. இல்வாழ்க்கையில் இதுவே 'காதல்" எனப்படுகிறது. தாய்மொழி, தாய்நாடு இவற்றின் மீது காட்டப்படும் அன்பைப் 'பற்று" என்பர். அந்த அன்பின் முதிர்ந்த நிலை, இறைவன் நம்மீது காட்டும் அன்பு 'அருள்" எனப்படுகிறது. எல்லா உணர்ச்சிக-ளுக்கும் தாயாக விளங்குவது அன்பு. அன்பின் முதிர்நிலையே பக்தி எனலாம். பக்தியின் வேற்றுருவே அன்பு எனலாம்.
ஆன்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் இடையேயுள்ள உறவைக் குறிப்பது பக்தி. உயிர்கள் ஒவ்வொன்றும் இறைத்தன்மை கொண்டவையே. ஓருயிர் இன்னொரு உயிரிடம் கொள்ளும் பக்திதான் அன்பு, பாசம், கருணை, அருள், பற்று, காதல் என்ற பல பெயர்களைக் கொண்டுள்ளது. நுட்பமும், திட்-பமும் வாய்ந்த அருமையான இவ்வுணர்வைத் தெய்வப்புலவர் தம் உலகப் பொதுமறையில் எங்ஙனம் வெளிப்படுத்தியுள்ளார்.
காலந்தோறும் தோன்றியுள்ள தமிழில் தமிழிலக்கியங்களுள், ஏறக்குறைய உலகின் அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது என்ற சிறப்பினைப் பெற்றுள்ள தெய்வப் பனுவல், தெய்வப் புலவர் திருவள்ளுவரால் இயற்றப்பட்டு, பக்தியுணர்வை உலகினுக்கீந்த நிலையைக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
கடவுள் வாழ்த்தில் பக்தி வெளிப்படுமாறு எழுத்தைக் கொண்டு எழுதியவனை எண்ணிப் பார்க்கிறோம். அதேபோல உலகத்தைக் கொண்டு அதைப்படைத்த இறைவனை எண்ணிப் பாhக்க வேண்டு- ம். அவனை நாம் வேறெங்கும் தேடவேண்டியதில்லை. நம் மனதில் நம் உடனே பிறந்த அவனிடம் அடை-க்கலம் புகுந்தோர் நலமாக வாழ்வர். விருப்பு வெறுப்பு இல்லாமல் அவரைச் சரண் புகுந்தால் நல்வினை தீவினைகளாகிய இரு வினைகளும் நம்மைச் சேரா. விருப்பு வெறுப்புகளை விலக்கி, அவற்றிற்கு காரண- மான ஐம்புலன்களின் ஆசைகளைக் குறைக்க வேண்டும். எத்துணைக்கெத்துணை நன்னெறிகளைப் பின்ப-ற்றுகிறோமோ அத்துணைக்கத்துணை நல்வாழ்வு கிட்டும். தன்னிகரில்லா இறைவனைச் சரணடைந்தோர், தம் மனக்கவலைகளை போக்கிக்கொள்ள முடியும். மனம் என்று ஒன்று இருக்கும் வரை அது சஞ்சலித்துக்கொண்டே இருக்கும். நல்லதோடு கெட்டதையும் நினைக்கத்தான் செய்யும். புண்ணியத்தோடு பாவத்தையும் செய்துகொண்டே இருக்கும். இந்த பாவத்திற்குரிய விளைவாகத்தான் நமக்கு இறைவன் துன் பங்களைத் தந்து கொண்டிருக்கிறான். தமக்கு வரும் துன்பங்களைப் போக்குவதற்காகவே பொதுவாக அனைவரும் பிராத்தனை என்னும் வழிபாடு செய்கின்றனர். இதைத்தான் பக்தி என்று நினைக்கிறோம். எல் லாம் வல்ல இறைவனை சரணடைந்தோர் உலகத் துன்பங்கள் என்னும் கவலைகளை நீந்திக் கடக்க இயலாது. 1. தன் வயத்தனாதல் 2. தூய உடம்பினன் ஆதல் 3. இயற்கை உணர்வினனாதல் 4. முற்றும் உணர்தல் 5. பாசங்களால் பந்தப்படாமல் இருத்தல் 6. பேரருளுடைமை 7. எல்லையில்லா வல்லவனாதல் 8. சச்சிதானந்த மயமாக இருத்தல்.
இப்படிப்பட்ட தன்னிகரில்லா தெய்வத்தின் மீது கொண்ட நம்பிக்கையை தளர விடாமல், அவனையே கதி எனச் சரணடைவோரே பக்தர்கள் இவர்களால் எத்தகு துன்பத்தையும் சமாளிக்க முடியும். இது பொய்யா மொழிச் செய்தி, நாம் அன்றாட வாழ்வில் கடந்து செல்ல ஒவ்வொரு கணத்திலும் பெரிய பொருள் பொதிந்துள்ளது. இது ஆண்டவனுடையது என்ற உணர்ச்சியுடன் எந்த ஒரு செயலைச் செய்தாலும் அது புனிதமாகி விடுகிறது. இது பொதுமறையின் கடவுள் வாழ்த்து உணர்த்தும் பக்தி உணர்வன்றோ!

விவேகானந்தர் உரை (சிகாக்கோ)

ஸ்ரீகிருஷ்ணரின் சீடர்களுள் ஒருவர், பாரதத்தின் அன்றைய சக்கரவர்த்தியாக விளங்கிய யுதிஷ்டிரர். அவர் பகைவர்களால் நாட்டிலிருந்து விரட்டப்பட்டு, மனைவியுடன் இமயமலைக் காட்டில் வசிக்க நேர்ந்தது. ஒரு நாள் அரசி யுதிஷ்டிரரிடம், 'அறத்தில் மிகச் சிறந்து விளங்கும் உங்களுக்கும் ஏன் துன்பம் வர வேண்டும்?' என்று கேட்டாள். அதற்கு யுதிஷ்டிரர், 'தேவி, இதோ, இந்த இமயமலையைப் பார். எவ்வளவு எழிலோடும் மாட்சிமையோடும் காட்சியளிக்கிறது! நான் இதனை நேசிக்கிறேன். இது எனக்கு ஒன்றும் தருவதில்லை. அழகும் கம்பீரமும் நிறைந்தவற்றில் உள்ளத்தைப் பறிகொடுப்பது என் இயல்பு. அதனால் நான் அதனை விரும்புகிறேன். அதுபோலவே இறைவனை நான் நேசிக்கிறேன். அவரே அனைத்து அழகிற்கும் கம்பீரத்திற்கும் மூல காரணம். அன்பு செலுத்தப்பட வேண்டியவர் அவர் ஒருவரே. அவரை நேசிப்பது என் இயல்பு. ஆதலால் நான் அவரை நேசிக்கிறேன். நான் எதுவும் கேட்கவில்லை. அவர் விருப்பம்போல் என்னை எங்கு வேண்டுமானாலும் வைக்கட்டும். அன்புக்காகவே அவரிடம் நான் அன்பு செலுத்தவேண்டும். அன்பை விலை பேச என்னால் முடியாது' என்றார்.

இறைவனின் பெருமை

இறைவனின் பெருமையை விளக்குவது என்பது இயலாது. மனித அறிவாற்றலுக்கு அப்பாற்பட்டது அந்த மாட்சி. இறைவனின் புகழ்பாடி தொண்ணூற்றொன்பது தொகுப்புக்களை எழுதி முடித்த பேரறிஞர்ஒருவர் நூறாவது இறுதித் தொகுப்பினை எழுதத் தொடங்கிய போது அவரது தோட்டத்தில் இரண்டு குருவிகள் தென்பட்டன. அந்த Nஐhடிப்பறவைகள் இந்த அறிஞரின் முன் அடிபணிர்ந்து நின்றன. அப்போது அவ் அறிஞர் குருவிகளைப்பார்த்து என்ன செய்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு குருவிகள் தோட்டத்திலு-ள்ள தாமரைக் குளத்தை நிரப்புவதற்காக தொலைவில் உள்ள நதியிலிருந்து தங்கள் அலகுகளில் நீரைக் கொண்டுவந்து சேர்ப்பதாய் குருவிகள் கூறின.
அறிஞர் சிரித்தார் “மடப் பறவைகளே! நதியோ அதிகதூரத்தில் இருக்கிறது உங்கள் அலகுகளோ மிகச்சிறியன. குளமோ மிகப் பெரியது இந்தக் குளத்தை நிரப்ப உங்களால் எப்படி முடியும்? அதற்கு அந்தக் குருவிகள் சொல்லின இறைவனின் புகழை எழுத நீஙகள் செய்யும் முயர்ச்சிபோல் தான் இதுவும். உங்கள் உள்ளம் மிகச் சிறியது. இறைவனின் புகழ் அளவிற்கு அப்பால் பட்டது. அதனை எழுதுவதற்கு உங்களுக்கு உள்ள ஆற்றல் மிகக் குறைவானது. என்றாலும் அந்த இறைவனைப் பற்றி எழுதுவது சாத்தியப்படுமானால், அதிக தூரத்திலிருக்கும் நதியிலிருந்து எங்கள் அலகுகளில் நீரைக் கொண்டுவந்து குளத்தை நிரப்புவது அசாத்தியமானதல்ல என்றன.

“ஏகாந்த வெளியைச் சிருஷ்டி செய்திருக்கும் சிற்பியே“ என்று இறைவனை வர்ணிக்கின்றார் அகஸ்திய மகாரிஷி. கால்பந்து மைதானம் எவ்வளவு பெரியது? என்றாலும் மக்களின் கவனத்தைக் கவர்வது இரு அணிகளுக்கிடையே உதைபடும் பந்துதான். அதே போல சுற்றிச் சுழலும் நூறாயிரம் கோடிக்கு மேற்பட்ட கோள்களையும் நட்சத்திரங்களையும் தான் மனிதர்கள் பார்க்கிறார்கள். அவற்றைவிட சுழலுவதற்கு உண்டாக்கப்பட்டுள்ள வெட்ட வெளி முக்கியமல்லவா? வெறும் சூனியத்திலிருந்து இத்தனை பெரிய கோள்கள் நட்சத்திரங்களைத் தோற்றுவித்து ஒன்றோடொன்று மோதாமல் சுற்றவிடும் இறைவனை எப்படி புகழ்வது?
இந்த அழகிய உலகை நமக்குரிய வீடாக இறைவன் படைத்திருக்கிறார். நாம் வசதியாக வாழவும் செயல்படவும் எண்ணற்ற சாதனங்களைப் படைத்திருக்கின்றார். மிக மிகத் தொலைவிலிருந்த நமக்கு ஒளி - வெப்பம் நமக்கு அளப்பரும் வேகத்தில் வருகிறது. சுவாசிப்பதற்குக் காற்று, குடிப்பதற்கு நீர், தட்பவெட்ப நிலைகள் உயிர்வாழ்வதற்கு அளவான முறையில் அமைக்கப்பட்டுள்ளன.
இறைவனுக்கு வேண்டியவர் வேண்டாதவர் என்றில்லை. மழை பெய்யும் பொழுது நல்லவர் தீயவர் என்று பார்ப்பதில்லை. எல்லோரிடமும் இறைவன் அன்பு கொண்டிருக்கிறார். நாம் வாழும் ஒவ்வொரு தினமும் அந்த அன்பு சுரந்தபடியே இருக்கின்றது. நமது உடல் உயிர் வாழவேண்டும், ஊட்டம் பெறவேண்டும் என்பதற்காக இறைவன் தினமும் மறைந்து கொண்டே இருக்கின்றார். தம்மில் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் முறைக்குமேல் தினமும் மறைகிறார். இறைவன் படைத்த பொருட்களைத் தினமும் நாம் உண்டு வசிக்கிறோம். ஒவ்வொரு தானியத்திலும், காயிலும், கனியிலும் இறைவன் இரு-க்கின்றார். நாம் அவற்றை உண்ணும் போது அவர் மறைகிறார். நாம் வாழ வேண்டும் என்பதற்காக அவர் அருளுகிறார்.
பச்சைப் பசும் இலைகள், வண்ணமலர்கள், காய் கனிகள் தரும் செடி கொடிகள் எல்லாம் தங்கள் வேர் மூலம் கிடைக்கும் நீரைக்கொண்டு தழைத்து வாழ்கின்றன. நாமும் அதேபோல் இறைவனிடம் ஊட்டமும் சக்தியும் பெறுகிறோம்.
இறைவனிடம் சிலர் எனக்கு இதனை இவ்வாறு செய்து கொடுத்தால் நான் இவ்வாறு பூiஐ செய்கிறேன் என்று பேரம் பேசுவோர் எவ்வளவு பேர் இருக்கிறார்கள். நாம் அளிப்பவற்றை இறைவன் ஏற்கிறாரா? என்பதைப்பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. பிராத்தனை பலித்துவிட்டால் அதை பெரிதாக விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள். இறைவன் இணங்கிவிட்டார் என்ற மகிழ்கிறார்கள். பணத்தினால் இறைவன் அன்பை வாங்க முடியாது. முழுமையான சரணாகதிமூலம் நம்மை ஒப்படைத்து மெஞ்ஞான ஒளியை நம் இதயத்தில் இயக்கிவைத்து உண்மையான அன்பின் மூலம் இறை ஒளியை நம் இதயத்தில் ஏற்கவேண்டும்.
zwani.com myspace graphic comments