Thursday, January 31, 2008

மயூரபதி ஸ்ரீ முருகன் ஆலயம் பேர்லின்

இந்த நூற்றான்டின் போர் பேரழிவுகளுக்கு கால்கோள் எடுத்தது ஜேர்மனியின் தலைநகரம் பேர்லினே. இன உணர்வின் எல்லை கடந்த கொடுமைகள் பலவற்றை இது தாராளமாகக் கண்டுகளித்தது இன்று பல நாட்டு பல இன மக்களையும் பக்குவமாய் போற்றிவரும் பெருமைக்கு அருகதைபெற்று வளாந்து பொலிந்து வருகிறது. இங்கு ஒரு காலத்தில் கிறீஸ்தவ தேவாலயங்களுடன் யூதரின் ஆலயங்களும், முகமதியர்களின் மசூதிகளும், பௌத்தாகளின் விகாரை ஒன்றும் தலைநிமிர்ந்து நின்றன. அவற்றோடு நகரின் முக்கிய பகுதியில் பெரியதொரு தெரு அருகில் நிலக்கீழ் மண்டபத்தில் திகழ்கிறது மயூரபதி ஸ்ரீ முருகன் ஆலயம்.
"மூர்த்தி சிறிதேனும் கீர்த்தி பெரிது" என்பது போல் சிறிய ஆலயமாயிருப்பினும் பெருமைகள் பல நிறைந்ததாக இந்த ஆலயம் விளங்குகிறது. இங்கு வாழும் ஈழத்தமிழ்ச் சமூகத்தினரின் ஒன்பது பேரின் முதல் முயர்ச்சியில் தோன்றிய இச் சிறு ஆலயம், இன்று இந் நகரத்து இந்துப் பெருமக்கள் அனைவரி னதும் பொதுச் சொத்தாக விளங்குகிறது. இந்து மக்களுக்கு மட்டுமன்றி, இந்த மதம் பற்றி அறிய விரும்பும் வேற்றுமத தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், இன்னும் ஆத்மீக தாகங்கொண்ட அனைத்து இனமக்களும் ஆலயத்திற்கு வருகைதருகிறார்கள். இவ்வாலயத்தில் நித்திய பூiஐ வழிபாடு கள் மற்றும் இந்துக்களின் எல்லா முக்கிய விசேட தினங்களும், பண்டிகைகளும் சிறப்பாக அனுட்டிக்கப்படுகின்றன. தாய்நாட்டில் நல்லூகந்தன் வருடாந்த மஹோற்சவத்தையொட்டி அதே நாட்களி ல் இங்கும் திருவிழா நடைபெற்று தேர் திருவிழாவன்று இங்கும் முருகன் வெளிவீதி உலாவந்து அருள் பாலிப்பது வளக்கம். இவ்வாலயத்தில் கற்பூர தீபத்திற்குப் பதிலாக நெய் தீபமே காட்டப்படுகிறது. நெய் தீபம் சுகாதரத்திற்கும் சுற்றாடலுக்கும் உகந்ததாகவும் வழிமண்டலத்தைத் தூய்மைப்படுத்தி சுகாதாரத்தைப் பேணக்கூடியது என்றும், கற்பூரம் கலப்படமில்லாத நிலையில் பயன் படுத்தினால் சாதக மான நன்மைகள் உண்டென்றும் கற்பூரம் பெருமளவில் தூயதாய் கிடைப்பதில்லை என்றும் அறியக் கூடியதாக உள்ளது.
கற்பூரம் சிறிய பொருளாய் இருந்து பெரிய Nஐhதியை தோற்றுவிக்கும் என்பதால் எரிந்தபின் மீதி ஏதும் இல்லாதிருப்பதால் ஆத்மீக இலக்கான Nஐhதியுடன் கலக்கும் தத்துவத்தின் வெளிப்பாடாக கற்பூரம் எரி க்கப்பட்டு வந்திருக்கிறது. இன்று கற்பூரம் கலப்படமாகி வெறும் வியாபாரமாகிவிட்டது.
ஆலயத்தில் வாரம் தோறும் அன்னதானமும், நம் வழிபாடு சிறக்க, நாம் நம்மைப் பக்குவப்படுத்திக் கொள்ள நாளாந்தம் கைக்கொள்ள வேண்டிய வழிமுறைகளும் வாரம் தோறும் இங்கு போதிக்கப்படுகிற து. தியான வழிபாட்டிற்கு தயாh படுத்தும் ஆரம்ப பயிர்ச்சிகள், இசை வழிபாடு, சொல் வழிபாடு, தியான வழிபாடு என நடாத்தப்படும். இப் பிராத்தனைகளில் பல சிறந்த ஆன்மீக இதயங்கள் ஈடுபட்டு கலந்து சிறப்பிக்கின்றனர்.
ஆலய விலாசம்:- Urban Str 176, 10961 Berlin.
தொலைபேசி இல:- 030 694 89 00

No comments: