Sunday, January 27, 2008

ஸ்ரீ கனக துர்க்கா அம்பாள் ஆலயம் (Schwerte)

Image Hosted by ImageShack.us


Image Hosted by ImageShack.us


இவ்வாலயம் 1985ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஷ்வெற்றா சுற்சன் வீதியிலுள்ளஅகதிகள் முகாம் மண்டபத்தில் நிலவறையிலே விநாயகர், அம்பாள், முருகன் படங்களுடன் ஆரம்பிக்கப்பட்டு 1996 ஆண் டுவரை வெள்ளிக் கிழமைகளிலும் மற்றும் இந்துக்களின் விசேடதினங்களிலும் பூiஐகள் நடைபெற்று வந்தன. 1996ம் ஆண்டு ஆலயம் சுழடிநசவ முழஉh ளுவச 5ய ல் இருக்கும் விசாலமான மண்டபத்திற்கு மாற்றப்பட்டு தென் இந்தியாவிலிருந்து விநாயகர், அம்பாள், வள்ளி தேவசேனாசமேத முருகப்பெருமான் விக்கிரகங்கள் வரவழைக்கப்பட்டு மண்டபத்தினுள் ஆலயம் அமைக்கப்பட்டு விக்கிரகங்கள் கும்பாபிசேகத்துடன் பிரதிஸ்டை செய்யப்பட்டன.

; ஆலயம் செவ்வாய் வெள்ளின்கிழமைகளில் மாலை 4.00 மணிதொடக்கம் மாலை 7.00 மணிவரையும் மற்றய நாட்களில் மாலை 4.00 மணிதொடக்கம் மாலை 5.00 மணிவரையும் திறந்திருக்கும். விசேடதினங்களில் நேரம் மாற்றப்படலாம். ஆலயத்தில் தமிழ்தாய் நாட்காட்டியில் குறிப்பிட்டவைபோல் தாய் நாட்டில் நடைபெறும் அனைத்து இந்து சமய விசேட தினங்களும் இங்கும் விசேடமாகக் கொண்டாடப்படுகின்றன. மாதத்தில் வரும் கடைசி வெள்ளிக்கிழமைகளிலும் மற்றும் விசேடதினங்களிலும் அம்பாள் பக்தர்களின் பஜனைப் பாடல்களுடன் சர்வஅலங்கார பூஐpதையாக உள்வீதி வலம் வரும் காட்சிகாணக் கண்கள் கோடிவேண்டும்.

வேண்டுவோhக்கு வேண்டும் வரமருளும் அன்னை கனகதுர்க்கா அருள் வேண்டிப் பக்தர்களும் அருள் பெற்ற அடியவர்கள் தங்கள் நேர்த்திகளை அன்னையின் சன்னிதியில் நிறைவேற்றவும் ஆலயம் வருவதைப் பார்க்க முடிகிறது. ஆலயத்தில் திருமணங்கள் நடாத்த போதிய இடவசதியும், தாய் நாட்டிலிருந்து தருவிக்கப்பட் அழகான முத்துமணவறையுடன் அறுசுவைப் போஜன வசதிகளும் செய்து தரப்படுகிறது.

இலக்கம் 1 விரைவு வீதியில் பிரயாணம் செய்து இல 85 வெளியேறும் பாதையில் வெளியேறி 1 கி.மீ தூரம் ளுஉhறநசவந நகரத்தை நோக்கிப் பிரயாணம் செய்து அருள்மிகு கனக துர்க்கா அம்பாள் ஆலயம் வந்தடையலாம். ளுஉhறநசவந புகையிரத நிலையத்திலிருந்து 10 நிமிட கால் நடையிலும் இலகுவாக ஆலயம் வந்தடையலாம்.


ஆலய விலாசம் :- Robert koch Str 05a, 58239 Schwerte.
ஆலயகுரு:- சிவசாமிக் குருக்கள் ஐயந்திநாத சர்மா. தொலைபேசி இல. 02304 91 09 445
0177 20 16 941

No comments:

zwani.com myspace graphic comments