Sunday, January 27, 2008

ஸ்ரீ முல்கைம் அருள்மிகு முத்துக்குமாரசுவாமி ஆலயம்

ஆதியும் அந்தமுமில்லா அருட் பெருஞ்சோதியாய் எங்கும் பூரணமாய் நிறைந்துள்ள பரம்பொருள் ஆன்ம கோடிகளுக்கு அருள் செய்யும் பொருட்டு மூர்த்தி வடிவம் கொண்டு தீராத வினை எல்லாம் தீர்த்தருளும் பல்லாயிரம் பக்தர்களைத் தன்னகத்தே கவர்ந்து அவர்கள் குறைதனைக் களைந்து அருவாய் உருவாய் வரம் நல்கும் அருள்மிகு ஸ்ரீ முத்துக்குமாரசாமி ஆலயம் முல்கைம் நகரில் 14 ஆண்டுகளுக்கு மேலாக பூஜை வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
இவ் ஆலய கர்ப்பக்கிரகத்தில் மூலமூர்த்தியாக வள்ளி தேவாசேனாசமேத முத்துக்குமாரசுவாமியும், விக்கினங்கள் தீற்கும் விநாயகப் பெருமானுடன், கற்பூரநாயகியாம் கருமாரியம்மனும,; சர்வ தோஷங்களை நீக்கும் நவக்கிரக நாயகர்களும், பூலோக இரட்சகர் பைரவரும் பரிவார மூர்த்திகளாக எழுந்தருளி அருள்பாலிக்கின்றார்கள். இவ் ஆலயத்தில் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் மாலை 18.00 மணி முதல் 20.30 மணிவரை அபிசேகம், பஐனை, பூiஐ வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இவ் ஆலயத்தின் விசேட தினங்களாக ஆங்கில வருடப்பிறப்புடன் நம் தாய் நாட்டில் வழிபாடுகள் நடைபெறும் விசேட தினங்களிலும், விசேடமாக நயினை நாகபூசணி அம்மன் ரதோற்சவத்தையொட்டி அம்பாளுக்கு சங்காபிசேகமும் நடைபெற்று வருகின்றது. ஐரோப்பாவில் முதன் முறையாக சூரஸம்காரம் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. செப்டம்பர் மாதத்தில் அலங்கார மஹோற்சவம் நடைபெறுகிறது. இவ் உற்சவ காலத்தில் இரவு 19.30 மணியளவில் முருகப்பெருமான் உள்வீதியுலா வந்து அடியவர்களுக்கு சகல ஐஸ்வர்யங்களையும் வளங்குவார்.

ஆலயமுகவரி:- Aktien Str 23, 45468 Mülheim / Ruhr

No comments:

zwani.com myspace graphic comments