Thursday, January 24, 2008

ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் ஹற்றிங்கன்

Image Hosted by ImageShack.us



ஜேர்மனியின் வட மேற்கு மானிலத்தின் என்னப்பெற்றால் மாவட்டத்தில் கற்றிங்கன் நகரில் 17 வருடங்களுக்கு மேலாக ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தைச் சுற்றிலும் குளிர் தரும் மரங்கள் சோலையாக அமைந்தும் சல சல என்று ஓடிக்கொண்டு இருக்கும் சிறு அருவியும் இருப்பதால் ஜில் என்ற தென்றல் காற்றும், காற்றினால் மரங்களின் சிறு அசைவுகளினால் எழும் ஒலியும் அருவியின் சலசலப்பும் மனதிற்கு ஆனந்தத்தையும் அமைதியையும் தருகிறது.

இவ் விநாயகர் ஆலயம் ஜேர்மன் நட்டிலே முதலில் அமைக்கப்பெற்ற விநாயகர் ஆலயமாகும். இங்கு தினமும் மாலை 5.30 மணி தொடங்கி 7.00 மணிவரையும், செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் மாலை 5.00 மணி தொடங்கி 8.30 மணிவரை பூஜைகள் நடைபெறுகின்றன. சிறப்பாக இங்கு ஆவணி மாதச் சதுர்த்தி அதி விசேடமாகக் கொண்டாடப்படுகிறது. அன்று வரசித்தி விநாயகருக்கு விசேட அபி சேகத்துடன் பூஜைகள் நடைபெற்று விநாயகப்பெருமான் சர்வஅலங்காரத்துடன் நாதஸ்வர மேள இசைக ளுடனும் பக்தர்களின் பஜனை பாடல்களுடனும் வீதிவலம் வரும் காட்சிகாண கண்கள் கோடி வேண்டும்.

இங்கு சகல இந்துசமய விசேடதினங்களிலும் விசேட பூஜைகள் நடைபெறுகின்றன. மாதத்தில் வரும் சதூத்தி தினத்தில் மாலை விசேட அபிசேகத்துடன் பஞ்சமுக விநாயகர் பக்தர்களின் தேவார பாராயணத்துடன் உள்வீதி உலா வருவார். ஆலயத்தில் வரசித்தி விநாயகருடன் மனோன்மணிஅம்பாள், சுப்ரமணியர், வயிரவர், நவக்கிரகங்கள் யாவும் தனித் தனியாக அழகாக சிறு சிறு சன்னிதிகளாக அமைக்கப்பட்டுள்ளன.

ஓவ்வொரு வருடமும் ஆனி மாதத்தில் மஹோற்சவம் கொடியேற்றத்தடன் ஆரம்பமாகி தேர்த்திருவிழா, தீர்த்தத்திருவிழாவும் நடைபெறுகின்றன.

ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்திற்கு 40வது இலக்க விரைவு வீதியில் ஹற்றிங்கன் (ர்யவவiபெநn) வெளிறேறும் வீதியில் பத்து கி.மீ தூரம் பிரயாணம் செய்து பின்பு வேக வீதி 51 இலக்கத்தில் ஹற்றி ங்கன் பேரூந்து நிலையம் வந்து நாலாவது பேரூந்து தரிப்பிடத்தில் (டுüபபநசளநபபந) ஆலயமுள்ளது. ஹற்றிங்கன் பேரூந்து நிலையத்திலிருந்து பேரூந்து இலக்கம் 330, 331, 332, 335, பேரூந்துகளில் பிரயாணம் செய்து நாலாவது தரிப்பிடத்தில்
Hattinhan Lüggersegge ஆலயம் உள்ளது.


ஆலயவிலாசம் :-Bredenscheider str 119 தொலைபேசி இல:- 02324 27061
Halle – 5 (Gewerbepark) தலைவர் :- 0233 96478
45527 Hattingen. ஆலயகுரு :- 0208 872709

No comments:

zwani.com myspace graphic comments