Tuesday, March 18, 2008

பக்நாங் ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயம்

ஆலயம். ஆ! இந்த லயம்தான் எம் இதயத்தைக்கூட இதமாக இயங்க வைக்கிறது. இந்த லயத்தை அழகு என்றும் கொள்ளலாம், ஒழுங்கென்றும் ஒழுகலாம். உலகில் உறவுகள் எத்தனை இருந்தாலும் இனிய உறவு தாயுறவே.அழகிய உறவும் அதுதான். முதுமை எட்டாத புதுமை உறவு. எனவேதான் தெய்வதரி சனங்களிலும் அப்பாள் தரிசனம் ஒரு தாயும் சேயும் சந்திக்கும் ஒரு இன்ப தரிசனத்திற்கு ஒப்பாகிறது.பக்நாங் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயம் அடியவர்கள் கேட்கும் நல்வரங்களை நல்கி பக்தர்கள் உள்ளத்தில் ஆட்சி புரிகின்றாள் மீனாட்சியாக.இந்த ஆலயம் 1994ம் ஆண்டு பங்குனி உத்தரத்தில் சிவாய சுப்பிரமணிய சுவாமிகளது ஆசியுடன் ஆரம்பிக்கப் பட்டது. யேர்மனி நாட்டில் சுற்காட் நகரில் பக்நாங் கிராமத்தில் அமைந்தள்ளது.81 பெரும் தெரிவில் ஸ்ருட்காட்டை நோக்கிச் செல்கையில். அல்லது கல்புறோன் நோக்கிச் செல்கையில் 13வது வெளியேற்றுப் பாதையில் இறக்கி 16கி.மீ வரை செல்ல, அம்பாள் காட்சி தருவாள். போகும் பாதை இருமருங்கிலும் களனிகள். கிராமத்தின் வனப்புள் சென்று, அம்பாளின் வதனத்ததைத் தரிக்கலாம். அம்மனுக்குரிய விஷேட தினங்கள் முறையாக பூஜிக்கப்படுகின்றன. வருடம் தோறும் கௌரிக்காப்பு விரதம் மிகவும் அற்புதமாக நடைபெற்றுவருகின்றது.பக்தர்கள் மெய்மறந்து வணங்குவதும், ஆனந்தக் கண்ணீர் பொழிவதும், பக்தர்களின் வேண்டுதலுக்கு அருள் கொடுக்கும், அம்மனின் தரிசனத்தை பெற்றதாகவே கொள்ளவேண்டும்.அம்பாள் அலங்கரியாக,அகம்பாவம் ஒழித்து, பூமணம் கமழ அழகுத்தேவதையாக, அருள் வடிவாக உள் வீதியை வலம் வரும்போது உள்ளம் மெய்மறக்கும். எங்கள் தேவைகளை தாயிடம் முறையிடுவதுபோல் இந்தத்தாயிடம் கேட்டு வந்தால், நின்மதி கிட்டும.; ஆனந்தப்பெருவாழ்வு மலரும். .
Sri Meenadchi Temple e.v
Eberhard Str.8
71522 Backnang Germany
Tel:07191/88627-Handy:0179 799 6052

No comments:

zwani.com myspace graphic comments