Tuesday, March 18, 2008

மஞ்சள் குங்கும மகிமை

நம் பண்பாட்டில் மஞ்சள் ஒரு மங்கலகரமான பொருள். எல்லா முக்கிய விழாக்களிலும் மஞ்சள் இடம் பெறும்.அந்தக் காலத்தில் மஞ்சள் தேய்த்துக் குளிப்பது சிறுவர் முதல் பெரியவர் வரை மேற்கொள்ளும் வழக்கத்தில் இருந்தது .பூப்பு நன்னீராட்டு விழா திருமணச்சடங்கு புதுமனை புகுவிழா ஆகிய மங்கள நிகழ்ச்சிகளில் மஞ்சள் கரைத்து தெளிக்கப்படுகிறது. மஞ்சளில் தண்ணீர் சேர்த்து இறுக்கமாக பிள்ளையார் பிடித்து வழிபடுகிறோம். இப்படியாக மஞ்சள் பலவிதத்திலும் நம் பண்பாட்டில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மஞ்சளின் தாவரவியல் பெயர் உரஉஅயடழபெய .மஞ்சள் ஒரு கிழங்கு! இதன் முக்கியமான தன்மை கிருமி அழிப்பு சக்தி. எத்தகைய கிருமிகளையும் அழிக்கும் சக்தி மஞ்சளுக்கு உண்டு. இதன் காரணமாகவே பலவகை புண்கள் மீது மஞ்சள் வேப்பிலை கலந்து பற்றுப் போடும் நாட்டு வைத்தியம் இருக்கிறது.மேலும் மஞ்சளை பூசி குளிப்பதால் தோல் மினுமினுப்பாகும் பருக்கள் வராது தேவையற்ற ரோமம் வளராது என்னும் அனுபவ நன்மைகளும் உண்டு.
இந்த மஞ்சள் பற்றி நம் முன்னோர்கள் அன்றே அறிந்திருந்த உண்மைகளை நவீன உலகின் ஐரோப்பியரும் அமெரிக்கரும் அண்மையில் தான் அறிந்துள்ளார்கள்.அமெரிக்க சுகாதார அறநிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானி பண்டாரு ரெட்டி என்பவர் இது பற்றி ஆய்வு நடாத்தி சமயலில் பயண்படும் மஞ்சள் தூளில் கர்கியுமின் எனும் வேதவியல் கலவை உள்ளது, அது பெருங்குடல் புற்றுநோயை தடுக்கும் சக்தி வாய்ந்தது என்று கண்டறிந்துள்ளார்.
குங்குமம்
மஞ்சள் கிழங்கை உடைத்து எலுமிச்சம் பழசாற்றில் ஊறவைத்து, பின் உலர வைத்து பொடிசெய்தால் குங்கமம் தயாராகும். இவ்வாறு தயாரிக்கப்படும் குங்குமம் நெற்றியில் அணியப்படுகிறது .தலை வகிட்டு முனையிலும் பெண்கள் அணிகிறார்கள் நெற்றியில் புருவ மத்தியில் பொட்டு வைப்பதால் குறிப்பாக குங்குமம் இடுவதால் மங்கள பண்பு நிறைகிறது என்பது நம்பிக்கை இது ஆன்மீக அடிப்படையும் இதுவாகும் .நெற்றியில் குங்குமம் இடுவதால் மங்களம் நிறைகிறது. இதையே இனி அறிவியல் ரீதியில் பார்ப்போம்.
நெற்றியின் புருவ மத்திக்கு நேர் பின்னால் மூளையின் ஒரு பகுதியாக piநெயட படயனெ எனும் நெற்றிக்கண் சுரப்பி அமைந்துள்ளது. இது மூளையின் ஒரு முக்கிய பகுதியென அறிவியலார் உணர்ந்து வருகிறார்கள் கண்போன்ற அமைப்பு எனக் கண்டறிந்துள்ளார்கள். இதனை நெற்றிக்கண் எனலாம். இந்த நெற்றிக்கண்ணுடன் தொடர்புள்ள புருவமத்தி ஒரு சக்தி குவியும் இடமாகும்.யோகப் பயிற்சியில் சுழுமுனை எனப்படுவதும் இப்பகுதியாகும். தெய்வத்துடன் தொடர்பு கொள்ள உதவும் பகுதி இதுவாகும். யோகாசனப் பயிற்சியின் போது மூச்சுப் பயிற்ச்சி (பிராணாயாமம்) செய்யும் போது நெற்றிக்கண் மீது கவனம் குவியும். ஞானக் கண் என்றம் அழைக்கப்படும். அதாவது மனிதனின் ஆறு அறிவுக்கு அப்பாற்பட்ட இன்னொரு நுண்ணறிவை எட்ட இப்பகுதி உதவுகிறது.
அன்றைய ஞானியர் யோகிகள் ஆகியோர் இதை உணர்ந்திருந்தார்கள். அதனாலையே நெற்றியில் பொட்டு வைத்துக்கொண்டனர். இன்று உள்ளது போன்ற அலங்கார ஒட்டுப்பொட்டுகளை அவர்கள் வைக்கவில்லை. சந்தனம் குங்குமம் போன்ற குறிப்பிட்ட மூலிகை பொருட்களையே வைத்துக்கொண்டார்கள்.
குங்கமத்தை ஏற்கனவே கூறியபடி தயாரிக்கும் போது அதில் மின்கடத்தும் தன்மை அதிகரிக்கிறது. இதை நெற்றியில் இடும்போது அதன் நேர் பின்னே மூளையில் உள்ள சுரப்பியோடு தொடர்பு ஏற்படுகிறது .இதனால் தெய்வங்களுடன் தொடர்பு கொள்ளும் வழி எளிதில் கிடைக்கிறது.
நெற்றியில் பொட்டு வைப்பதால் கண்படுதல் அல்லது திருஸ்டி எனப்படும் எதிர்மறை எண்ண அலைத் தாக்குதல்களையும் தவிர்க்க முடியும். ஹிப்னட்டிசம் முதலிய மனோவசியங்கள் புரவ மத்தியில் பொட்டு வைத்தவரை பாதிக்காது.
மின்கடத்தும் தன்மை நமது வழிபாட்டு முறைகளில் நன்றாக மின்சக்தியை ஏற்கக்கூடிய பொருட்களையே நாம் அதிகம் பயன்படுத்துகிறோம். வேப்பிலை, மாவிலை, துளசி, எலுமிச்சை போன்றவைக்கு இந்த சக்தி அதிகம். குங்குமத்தை இந்துக்கள் காரணத்தோடுதான் உபயோகிக்கிறார்கள். அதுமட்டுமல்லாது பல அறிவியல் நுணுக்கங்கள் ஒருங்கே இணைந்த பழக்கங்கள் நம் பண்பாட்டில் இருக்கின்றன்.
ஆர்த்தி
மஞ்சள் தூளை தண்ணீரில் கரைத்து அந்த மஞ்சள் கரைசலில் கொஞ்சம் சுண்ணாம்பை கலந்தால் அது சிவப்பு நிறமாக மாறும். அதுவே ஆர்த்தியாகும். இவ்வாறு கரைத்த ஆர்த்தியை அகன்ற தாம்பாளத்தில் ஊற்றி அதனை புதுமணமக்களின் முகத்துக்கெதிரே அல்லது புது வீட்டின் வாசல்படி முன்பு அல்லது மங்கள நிகழ்ச்சியின் முக்கிய நபரின் முன்பு காட்டி தட்டை மூன்று முறை சுற்றி பின் ஆர்த்தி நீரை வீட்டுக்கு வெளியே ஊற்றி விடுவார்கள். இந்த செயல்பாட்டில் பல அறிவியல் காரணங்கள் அடங்கியுள்ளன.
1.மஞ்சள் ஒரு கிருமிநாசினி.2.ஒளியுடல் மீது பாதிப்பு.3.மின் காந்த சக்தியலைகள் சீரமைப்பு.
சந்தனம்
குங்குமம் போலவே சந்தனமும் சக்தி வாய்ந்தது. கோயில்களில் திருநீற்றோடு குழைத்த சந்தனத்தையும் குங்குமத்தையும் கொடுப்பார்கள். திருநீறு பூசி சந்தனம் இட்டு அதன் மேல் குங்குமத்தை வைப்பது நம் வழக்கம்.
சந்தன மரத்தில் இருந்து கிடைக்கும் சந்தன கட்டையை அரைத்து சந்தனம் தயாரிக்கப்படுகிறது. சந்தனம் அணிவதால் தெய்வீக உணர்வு மேம்பட்டு நினைத்ததை நிறைவேற்றும் மந்திர சக்தி அதிகரிக்கும். மேலும் சந்தனம் தோலுக்கு மிகவும் நல்லது .சுத்தமான சந்தன தூளையும் கொஞ்சம் மஞ்சளையும் தண்ணீரில் குழைத்து முகத்தில் தடவி வைத்து காய்ந்த பின் முகத்தை கழுவினால் முகத்தோல் புதுப் பொலிவு பெறும்.

No comments: