Saturday, August 30, 2008

காலமும் இடமும் கருதிச் செயற்படுவோம்

"பருவத்தே பயிர்செய்” என்பது பழமொழி. பருவகாலங்களுக்கு உகந்தவாறு பயிர்ச்செய்கை செய்வதே அனுபவம் வாய்ந்த விவசாயின் செயலாக இருக்கும். விவசாயின் முயற்சி விதையின் தன்மை, பசளை, நீர்ப்பாசனம் முதலியபோஷணைகள் இவை எல்லாம் எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் காலம்; தப்பிய பயிர்ச்செய்கை தகுந்த விளைச்சலைத் தராது.
இதேபோல, ஒவ்வொரு பயிரும் அதற்கென உரிய சீதோஷ்ண நிலைகளுக்கமைந்த இடங்களிலேயே நல்விளைச்சல் தரும். பொருத்தமற்ற இடங்களில்; உரிய விளைச்சலைப் பெறமுடியாது.
இதுபோன்ற நிலைமையே மனித செயற்பாட்டில் எல்லா முயற்சிகளுக்கும் இருக்கிறது. எந்தஒரு கருமமும் உரியகாலத்திலும் உரிய இடத்திலும் செய்யப்படவேண்டும். அப்போதுதான் அக்கருமங்களின்; பலன்களை முறைப்படி பெறலாம்;;
“காலத்தினால் செய்த உதவி சிறிதெனினும்;
ஞாலத்தின் மாணப் பெரிது” என்கிறார் வள்ளுவரும்.
சிறிய உதவியையும் பெரிதாக்காட்டும் இயல்பு காலத்திற்கு இருக்கிறது. இதுபோல எமது சமயக் கிரியை மரபுகளிலும் சரியான நேரகாலத்தையும், உரிய இடத்தையும் அறிந்து செய்தால் நற்பயனைப் பெறலாம்;;;;;;.
சூரியகாந்தக் கல்;லினூடாக (பூதக்கண்ணாடி) வருகின்ற சூரியஒளிக்கு எரிக்கும் சக்தி உண்டு. ஆனால் சரியான குவியதூரத்தில் வைக்கும்போதுதான் பஞ்சு எரிகிறது. இதேநிகழ்வு காலையில்; அல்லது மாலையில் நிகழ்வதைவிட மதியவேளையிலெனில் மிகவிரைவாகவும் இலகுவாகவும் நிகழ்கிறது. இங்கு காலமும் இடமும் பெறும் முக்கியத்துவத்தை உணரமுடிகிறது.
சமயக்கிரியைகள் ஆரம்பத்தில் சங்கல்பம் சொல்கிறோமே, அதன் நோக்கம் காலமும் இடமும் சரியாக அமைவதை நிச்சயப்படுத்துவதே. எந்த ஒரு கிரியையும் சங்கல்ப ப+ர்வமாகவே செய்யப்பட வேண்டும் என்பது முக்கியமானதாகும்;. எந்தக் காரணத்துக்காக, எந்தக்கிரியைகளை, எந்தக்காலத்தில், எந்த இடத்தில் செய்கிறேன் என்றுகூறி மனஉறுதியுடன் அக்காரியத்தில்; ஈடுபடத்தொடங்குவதே சங்கல்பத்தின் நோக்கமாகும்.
பல்வேறு சிறிய கிரியைகள் அடுத்தடுத்துத் தொடர்ந்து நிகழும் கும்பாபிஷேகம் முதலிய வைபவங்களில் முதலில் எல்லாக் கிரியைகளுக்கும் பொதுவான சங்கல்பம்; கூறப்பட்டதும் பின்னால் ஒவ்வொரு கிரியைகளுக்கும்; முன் சிவாச்சாரியார் தாம் சங்கல்பம்; செய்துகொள்வதைக் காணலாம். இது சங்கல்பத்தின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்றது.
சங்கல்பம் செய்யும்போது முதலில் பிரபஞ்ச உற்பத்தியிலிருந்து இன்றுவரையான காலம் நிர்ணயிக்கப்படுகிறது. மாதம், வாரம் என்பவை போன்று மிக நீண்டகாலக் கணக்குகள் பரார்த்தம், கல்பம்;, மன்வந்தரம், யுகம் முதலியவை.
இப்போது நாம் வசிப்பது இரண்டாவது பரார்த்தம் (துவிதீயபரார்த்தே) சுவேதவராக கல்பம், வைவஸ்வத மனுஅந்தரம், கலியுகம், இதன் முற்பகுதியில் விபவ முதல் அசஷய வரையான 60 வருடங்கள் தொடர்ந்து சக்கரமாக வரும். வருடத்தில் 12 மாதம் (சித்திரை முதல் பங்குனி வரை) இருபசஷம் (ப+ர்வம், அபரம்) பசஷத்தில் 16 திதிகள் (பிரதமை முதல் பௌர்ணமி, அமாவாசைவரை) என்பனவும் வாரத்தில் ஏழு நாட்களும் வருகின்றன.27 நட்சத்திரங்கள் தொடர்கின்றன. இவற்றைவிட யோகங்களும் கரணங்களும் அமைகின்றன.
நாம் கிரியை செய்யும் போது உள்ளகால நேரப் பகுதிக்கு அமைய மேற்கூறப்பட்ட அத்தனையும் சங்கல்பத்தில் சொல்கிறோம். ,வையாவும் சுபமாக அமையவேண்டும் என்பதற்காகவே சுபயோக, சுபகரண..... என்று சொல்லப்படுகிறது. தற்செயலாக இவற்றில் தோஷங்களும் ஏதும் இருக்கக்கூடும் என்பதால் அவற்றின் தீயவிளைவுகள் நம்மைத் தாக்காமலிருக்கும் பொருட்டாகவே சங்கல்பம் தொடங்கமுன்,

“திதி சிவஸ் ததா வாரோ நசஷத்ரம் சிவ ஏவ ச
யோகஸ்ச கரணம் சைவ சர்வம் சிவசமயம் ஐகத்”
என்று பிரார்த்திக்கப்படுகிறது. பஞ்சாங்க உறுப்புக்களான ஐந்துகாலப் பகுதிகளும் திதி, வாரம், நசஷத்திரம், யோகம்;, கரணம், சிவமயமாக மங்கலமாக அமையட்டும் என்று வேண்டுவதே இதன் பொருள்.
இதன்பின் தர்ப்பை (பவித்ரம்) அணியும் போதும்,
“ததேவ லக்னம் சுதினம் ததேவ
தாராபலம் சந்த்ரபலம் ததேவ”
(அதுவே நல்ல லக்னம், அதுவே நல்ல தினம். நற்பலனை கொடுக்கும் சுபவேளை அதுவே) என்ற நம்பிக்கையோடு அணியப்படுகின்றது.
சங்கல்;பத்தின் முதற்பகுதி இவ்வாறு காலத்தை எடுத்துக் கூறும்போது தொடர்ந்து வரும் பகுதி இடத்தைக்; கூறுகின்றது. இந்த இடத்திலே நாம் இக்கிரியையைச் செய்கிறோம் என்பது இதன்பொருள்.

“ஐம்ப+த்துவீபே, பாரதவர்ஷே, பரதகண்டே, மேரோர்தஷிணே பார்ஸ்வே……”
இவையாவும் ஏழாம் வேற்றுமையில், இடப்பொருளில் வருதலைக் காண்க. ஐம்புத்தீவு, பாரத வர்;ஷம், பரதகண்டம் என்பன யாவும் நமது தென்னாசியப் பிராந்தியமனைத்தையும் உள்ளடக்கியதாக முற்காலத்தில் ஒரு நிலப்பரப்பாகக் காணப்பட்ட பெரும் பகுதிகளின் பெயர், முகவரி குறிப்பிட்டு கண்டம், நாடு, நகரம், கிராமம் எனச் சுட்டுவதுபோல பரந்த நிலப்பரப்பிலிருந்து குறுகிவருவது இது. பரதகண்டத்திலே மேரு மலைக்குத் தென்பகுதியிலே அமைந்திருக்கும் நமது நாடு (லங்காத் த்வீபே) நகரம் (வீணாகானபுரெ) கிராமம் (கோப்பாய்க் கிராமே) குறிச்சி (கலட்டி சேஷத்ரே) என்பவற்றைக் கூறுவது மரபு.
பதினான்கு உலகங்கள் இருப்பினும் கர்மப+மி எனப்படுவது இப்ப+வுலகம் தான்.
“புவனியில் போய்ப் பிறவாமையில் நாள் நாம்;
போக்கு கின்றோம் அவமே” எனத் தேவர்கள் வருந்தி, “இந்தப் ப+மி சிவனுய்யக் கொள்கின்ற ஆறு” என்று இப்ப+மியிள் மகிமையைக் கூறுவதாக மணிவாசகர் போற்றுகிறார். இப்ப+மியில் பிறந்து கர்மவினைகளைச் செய்துதான் பாவபுண்ணியங்களை அனுபவித்துத் தீர்க்கலாம்.
இந்தப் ப+மியிலும் பாரததேசம் முதலியன புண்ணிய பகுதிகள். அங்கும் சில தலங்கள் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பவற்றால் மகிமைபெற்றுச் சிறந்து விளங்குகின்றன. அவற்றுள்ளும் எந்தெந்த தோஷங்களை எங்கெங்கு போக்கலாம், எந்தெந்த நற்பயன்களை எங்கெங்கு பெறலாம் என்றெல்லாம் அனுபவப+ர்வமாக நம் முன்னோர்கள் கூறிவந்;திருக்கின்றனர். இவற்றால் நாம் நமது சமயக் கிரியைகளில் காலமும் இடமும் பெறும் முக்கியத்துவத்தை உணர்கிறோம்.
காலம் என்ற விடயத்தை இன்னும் சிறிது சிந்திப்போம். இறைவனுக்கான வழிபாடுகள் காலை, மாலை முதலிய சந்;;திப் பொழுதுகளி;ல் மேன்மையுறுகின்;றன. இரவுப் பொழுது பொதுவாக சக்தி வழிபாட்டுக்குரியது. பகற்பொழுது சிவனுக்குரியது. இரண்டும் கூடிப்பிரிகின்ற அந்தி சந்திகள் சிவ சக்தி ஐக்கியத்தை உணர்த்துவதாகவும் அருள்விளக்கமுடையவையாகவும் இருக்கும். இதேபோல நள்ளிரவுப் பொழுதும் நடுப்பகலும் சிறப்புடையவையே. நண்பகல்வேளையைத் தேவேந்திர முகூர்த்தம் என்பர்;.
ஆறுகாலப் பூiஐகள், பன்னிருகாலப் ப+iஐகள் என்பன ஆலயங்களில்; விசேஷ வழிபாட்டுக்; காலங்களாகும். இப்ப+iஐகள் நிகழ்வதற்குரிய காலநேரக் கணக்குகள் ஆகமங்களில் விதித்துக் கூறப்பட்டிருக்கின்றன. காலைப்பூ+iஐ சூரியனில்; ஆரம்பிப்பதும் மாலைப்ப+iஐ சந்திரனில் ஆரம்பிப்பதும் குறிப்பிடத்தக்கது.
கும்பாபிஷேகம், மஹோற்சவம் முதலிய விஷேச நிகழ்வுகளில் யாகப+iஐ நடைபெறுகிறது. நாளொன்றுக்கு இரண்டு காலம் யாகப+iஐ நிகழவேண்டும். யாகப+iஐயின்; நாட்கணக்கு மூன்று முதல்; ஒன்பதுவரை ஒற்றைப்படையாகவும் காலங்கள் இரட்டைப்படையாகவும் (உதாரணமாக மூன்று நாள் எனின் ஆறு காலம் ) அமையவேண்டுமென்பது விதியாகும்.
அங்குரார்ப்பணத்துடன்; ஆரம்பமாகும் யாகப+iஐ எப்போதும் மாலையில்தான் தொடங்கப்படும். கலாகர்ஷணம், ஸ்பர்ஸாகுதி முதலிய கிரியைகள் இரவுப் பொழுதுக்குரியவை. இவ்வாறே விரதங்களுக்கும் காலநியதிகள் உண்டு. நட்சத்திர, திதி வியாபகங்களை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படும் விரதங்களை அதற்குரிய காலங்களில் அநுஷ்டிப்பதும் அடுத்தநாட் காலையில் எட்;டு மணிக்குமுன் பாரணை செய்வதும் அந்தந்த விரதங்களுக்குரிய ஆண்டுகளுக்கு அநுஷ்டித்தபின் (உதாரணமாக கந்தசஷ்டி-ஆறு வருடங்கள் ) விரத உத்;தியாபனம் செய்;து இறைவனிடம் சமர்ப்பித்து மறுபடி ஆரம்பிப்பது அவசியமாகும்.
மந்திரஐபங்கள் எந்தெந்த வேளையில் செய்யப்படவேண்டும், எத்தனை உருக்கள் ஜபிக்கப்படவேண்டும். என்றெல்லாம் கணக்குகள் உண்டு. தினமும் நாம் செய்யும் பிரார்த்தனைகளை ஒரு குறித்த நேரத்தில் தொடர்ந்து செய்துவரும்போது அதிக பயனைப் பெறலாம்.
இடம் என்பதுபற்றி இன்னும்சிறிது சிந்திப்பின் ஆலயம்;; ஒன்றிலே வசந்தமண்டபம், யாகசாலை, பாகசாலை முதலிய ஒவ்வோர் அங்கமும் எந்தெந்த ஸ்தானத்தில்; எந்த அளவுப்பிரமாணத்தில் இருக்கவேண்டும் என்ற விதிமுறைகள்; ஆகமங்களில் விதிக்கப்;பட்டிருக்க காணலாம். கிரியைகள் செய்வதற்கான இடங்களும்; நிர்ணயிக்கப்பட்;;டுள்ளன. கிராமசாந்தி தென்மேற்கு அல்லது ஈசானத்தில் செய்யப்படவேண்டும். பிரவேச பலி, சுற்றுப்பலி முதலியன வெளிவீதியில் செய்யப்படும். சாந்திக்கிரியைகள் உள்வீதியிலும் ஸ்தம்ப மண்டபத்திலும் செய்யப்படும். கும்ப ப+ஜைகள் ஸ்நபனமண்டபத்தில் நிகழ்த்தப்படும்.
இல்லறமென்னும் நல்லறத்தை நடத்துவதற்குரிய இல்லம் அமையவேண்டிய இடம், அமைப்புமுறை என்பவற்றையும் வாஸ்து சாஸ்திரம் விரிவாகக் கூறுகின்றது. மனைகோலுதல் அல்லது நிலையம் எடுத்தல் என்று கூறுவதற்கிணங்க, முறையாக இடமெடுத்து உரியகாலத்தில் கிருஹப் பிரவேசம் செய்து வாழ்ந்தால் இல்லறம் செழிக்கும். நாம் வாழ்ந்து கொண்டிருக்;கும் வீட்டிலேயே தளபாடங்கள், உபகரணங்கள், கருவிகள் முதலியவற்றையும் ஒளி, ஒலி, மின் சக்திகளை வெளிப்படுத்தும் நவீன சாதனங்களையும் உரிய முறைப்படி அவ்வவற்றுக்குரிய ஸ்தானங்களில் அமைப்பதன் மூலம் பெரும் சக்தியை விளைவித்து வளம்பெருக்கி அமைதியும் இன்பமும் பெறலாம் என விளக்கி நவீன வாஸ்து சாஸ்திர நூல்கள் பல இன்று வெளிவந்;;துகொண்டிருக்கின்றன.
எனவே காலமும் இடமும் கருதிக் கவின்மிகு வாழ்க்கையை நடத்துவோமாக.

1 comment:

ungchamroeun said...

great blog but i don't understand

zwani.com myspace graphic comments