Wednesday, June 25, 2008

விபூதி (திருநீறு)

சைவ சமய பெருமக்களிற்கு திருநீறு, உருத்திராட்சம், ஐந்தெழுத்து ஆகிய மூன்றும் மிகவும் இன்றியமையாதவை. பசுவின் சாணத்தை எடுத்து அதனை சுட்டு சாம்பலாக்கிய பஸ்மமே சுத்தமான விபூதி ஆகும். விபூதி தரிப்பது ஆன்மீக சம்பச்தமான நன்மைகள் விளைவதுடன், உடல்நலம் சார்ந்த நன்மைகளும் உண்டாகும் என்பது சான்றோர்களின் கருத்தாகும். திருநீறு கிருமிநாசினியும் கூட. அதனை உடல் முழுவதும் பூசுவதனால் உடலில் உள்ள துர்நாற்றம் மறையும் என இயற்கை மருத்துவம் கூறுகிறது. நெற்றியில் தரிப்பதனால் தலைக்குள் கோர்க்கும் நீரினை திருநீறு வெளியேற்றுகிறது.

இதன் பெருமையை திருஞானசம்பந்தர் தனது மந்திரமாவது நீறு எனத் தொடங்கும் திருநீற்றுப் பதிகத்தில் தெளிவாகக் கூறியுள்ளார். சிவாயநம, நமசிவாய, சிவ சிவ என்று ஏதாவதொரு பஞ்சாட்சர மந்திரத்தை செபித்தபடி உத்தூளனமாக (நெற்றி முழவதும்) அல்லது திரிபுண்டரிகமாக (3 கோடுகளாக) திருநீற்றினை அணிதல் வேண்டும். இதற்கு ஆட்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் ஆகிய விரல்களை உபயோகிக்க வேண்டும். கிழக்கு முகமாக அல்லது வடக்கு முகமாக நோக்கியபடியே அணிதல் வேண்டும். இதனால் நல்வாக்கு, நல்லோர் நட்பு, உயர்ந்த நற்குணங்கள்;, குறைவில்லா செல்வம், சகல விதமான ஐசுவரியங்கள் போன்ற எல்லா நலமும் பெற்று நம் வாழ்வில் சிறப்புடன் வாழலாம்.

மேலும் சில நன்மைகளைப் பார்ப்போம் :-
வாத, பித்த, கப நாடிகளை சமநிலைப்படுத்தக் கூடியது.
மனம், வாக்கு, காயம் ஆகியவற்றை தூய்மையாக்கும்.
ஆணவம், கர்மம், மாயை என்ற மும் மலங்களை நீங்கச் செய்யும்.

விதிப்படியமைந்த திருநீற்றை உட்கொண்டால் உடம்பின் அசுத்தங்கள்அனைத்தையும் போக்கி நாடிநரம்புகள் அனைத்திற்கும் வலிமையை கொடுக்கும்.


உடலுக்கும், உயிரிற்கும், இம்மையிற்கும், மறுமையிற்கும் உயர்வளிக்கும் விபூதியினை தினமும் நாம் அணிந்து உயர்வடைவோமாக.

No comments:

zwani.com myspace graphic comments